(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தானாக அவளின் அழகை அள்ளி பருகின.

   

எத்தனையோ முறை பார்த்து ரசித்த முகம்... ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவனுள் அதே இன்ப உணர்வை கொடுப்பதன் ரகசியம் அவனுக்கு பிடிப்படவில்லை...

   

விழிகள் விரித்து அருகே நடந்துக் கொண்டிருந்த உதயை பார்த்த நந்து, அவனின் பார்வையை சந்தித்து விட்டு அவசரமாக விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

   

“நதி...”

   

“ம்ம்ம்...”

   

“ஏன் இப்போ எல்லாம் என்னோட முன்னாடி பேசின மாதிரி சரியா பேச மாட்டேங்குற?”

   

“அப்படி இல்லை...”

   

“என்னை நேரா பார்க்க கூட மாட்டேங்குற...???”

   

“அதெல்லாம் இல்லை...”

   

“அதை என்னை நேரா பார்த்து சொல்றது...!”

   

எங்கே இருந்து அவள் அவனை நேராக பார்ப்பது? இமை என்று ஒன்று இல்லவே இல்லாததை போல் அல்லவா அவளை எப்போதும் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அவன்...

   

“ஹேய் நதி...”

   

அவளின் கைகளை உரசும் நெருக்கத்தில் வந்திருந்தவனின் கரகரப்பான குரல் என்னவோ செய்ய, மயங்கியவள்... முன்னே நடந்துக் கொண்டிருப்பவர்களின் நினைவில் அவனை விட்டு சற்றே விலகி நடந்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.