“உன்கிட்ட ஏன் இந்த மாற்றம்???? இப்போ இப்படி செல்லம் கொஞ்சுறவன் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவானான்னு யோசிக்குறீயா நதி? நான் இதை விட நூறு மடங்கு அதிகமா உன்னை செல்லம் கொஞ்சுவேனே தவிர குறைக்க மாட்டேன்...”
நந்திதா உதயை நிமிர்ந்து பார்த்தாள்... என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை...
யோசிக்கும் சக்தியே இல்லாமல் போய் விட்டதை போல மூளை வேலை நிறுத்தம் செய்ய, எதுவும் சொல்லாமல் அவளின் உள்ளம் கவர்ந்தவனை கண்களால் பருகினாள்...
எல்லாம் ஒரு சில வினாடிகள் தான்... மீண்டும் எப்போதும் போல அவளின் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்...
அதற்குள் பட்டு புடவை பகுதிக்கு அவர்கள் வந்திருக்க, துளசி அவர்கள் இருவர் பக்கம் திரும்பி பார்த்தாள்.
தோழி சொல்லாமல் சொன்ன செய்தி புரிந்துக் கொண்ட நந்திதா உதயை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு துளசி மற்றும் ப்ரியாவுடன் சென்று சேர்ந்துக் கொண்டாள்...
உதய் அதே இடத்தில் நின்று அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்...
நந்திதா மீது அவனுக்கு அளவுக்கு அதிகமான காதல் சில வருடங்களாகவே இருக்கிறது...
ஆனால் அவளை விலகி நின்றே பார்த்து பேசி இருந்தவனுக்கு, இப்போது கிடைத்திருந்த (கிடைக்க போகும் :-) ) உரிமையும்... அதனால் நந்திதாவிடம் தோன்றி இருந்த வெட்கமும்... இப்படி அவ்வப்போது கண்களால் பேசும் அவளின் செய்கையும் அவனை பைத்தியமாக்கி கொண்டிருந்தன...!
✽✽✽