திரும்பி நேராக பார்க்கா விட்டாலும் உதயின் பார்வை தன் மீது இருப்பது புரிந்ததால் (அவர் இதை தவிர வேற என்ன தான் செய்றார் :-) ) சின்ன வெட்க புன்னகையுடன் புடவைகளை பார்க்க தொடங்கினாள் நந்திதா.
சேலைகளை தேர்வு செய்வது தான் அத்தனை சுலபமாக இருக்கவில்லை...!
ஜவுளிக் கடல் என்பது போல குவிந்துக் கிடந்த பல்லாயிரம் புடவைகளும் போதாது என்பது போல கடையையே புரட்டி போட்ட அந்த ஐந்து பெண்களும், ஒருவழியாக நிச்சயதார்த்த புடவை, கூரை புடவை, வரவேற்பு புடவை என்று ஒவ்வொன்றாக தேர்வு செய்தார்கள்...
அதன் பின் இறுதியாக திருமண சடங்கு தொடங்கும் நேரத்தில் கட்டும் பட்டு புடவையை தேட தொடங்கினார்கள்.
கிரான்டான சேலை வேண்டும் என்று அவர்கள் தேடி தேடி... தேடிக் கொண்டே இருக்க... நந்திதாவின் கண்ணில் அந்த அழகிய தங்க நிற சேலை பட்டது...
தங்க நிறத்தில் ஜொலித்த அந்த சேலையில் ஆங்காங்கே அழகிய சிவப்பு நிற மலர்கள் பட்டு நூலினால் வடிவமைக்க பட்டிருந்தது..!
நந்திதாவிற்கு பார்த்த உடனேயே அந்த சேலையை ரொம்பவும் பிடித்துப் போனது....
கண்கள் மின்ன எடுத்துப் பார்த்தவள், உதய் பக்கம் பார்த்தாள். அவன் சைகையிலேயே பிடித்திருப்பதாக சொல்ல, துளசியிடம் காட்டினாள்.
“ஹேய் நந்து சூப்பரா இருக்குடி.... அத்தை இதை பாருங்களேன்....”
துளசி நந்திதாவிடம் இருந்து வாங்கி காட்டிய அந்த அழகிய வேலை பாடு அமைந்த சேலை ப்ரியாவிற்கும் பிடித்திருந்தது...
“நல்ல சாயிஸ்ங்க நந்திதா... அழகா இருக்கு...”