”தில்லையை பத்தி தகவல் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்களே அது என்ன” என ஆர்வமாக சம்யுக்தா கேட்க அவனோ
”அது அப்புறம் சொல்றேன் முதல்ல நீங்க நடந்த கதையை சொல்லுங்க, அன்னிக்கு உங்க கழுத்தில தாலி கட்டிட்டான் நீங்க உடனே அங்கிருந்து கிளம்பிட்டிருப்பீங்களே”
”இல்லை நான் கிளம்பலை”
”ஏன்”
”தெரியலை அன்னிக்கு நடந்த விசயத்துக்கு அப்புறம் நான் திக்பிரமையில இருந்தேன், என்னால இயல்பு நிலைக்கு வர முடியலை, அதுக்கு ரொம்ப நேரம் பிடிச்சது.”
”அதுவரைக்கும் நீங்க தில்லையோட வீட்லதான் இருந்தீங்களா“
”ஆமாம் ஆனா, தில்லை அப்ப வீட்ல இல்லை வெளிய போயிட்டாரு”
”எங்க போனாரு”
”டாக்டர்கிட்ட”
”யாரு அந்த ஜனனி வீட்டுக்குதானே“
”ஆமாம்”
”அப்புறம் என்னாச்சி” என சிதம்பரம் ஆர்வமாக கேட்க சம்யுக்தாவும் பழைய நினைவுகளுக்குள் சென்றாள்.
தில்லை கட்டிய தாலியை சுமந்திருந்த சம்யுக்தாவிற்கு படபடப்பாக இருந்தது, தனியாக இருந்தாள், யாருமே இல்லை, இரவு நேரம் வேறு யாரிடம் சொல்லி அழுவது என்று கூட