Page 5 of 6
இதில் அவனது கோபத்தை தடுக்கவும் அவனிடம் இப்போது பேசவும் பயந்த ஜனனியோ அவனுக்கு இன்ஜக்ஷன் போட்டு உறங்க வைத்தாள்.
அவனும் மருந்தின் வீரியத்தில் மெதுவாக கண்கள் மூடி உறங்கினான்.
விடிந்தது.
காலையில் ஜனனியின் குழந்தை கீதாதான் தில்லையை எழுப்பிவிட்டது
”தில்லை எழுந்திரு எழுந்திரு” என பிஞ்சுக்குரலில் கொஞ்சி கொஞ்சி பேசியபடியே அவனை உலுக்கவும் மெல்ல கண்கள் திறந்தான், சிரித்த முகத்துடன் இருந்த குழந்தையைக் கண்டதும் தில்லையும் அமைதியாக புன்னகைத்தான்
”தில்லை எழுந்து வா”
”எங்க”
“வெளிய”
“ஏன் என்ன வேணும் உனக்கு”
”பொம்மை வேணும்” என சொல்ல அவனோ சிரித்துவிட்டு
”வாங்கித் தரேன் அம்மா எங்க”
”கிச்சன்ல”
”அப்பா எங்க”
”தெரியலை”