தெரியவில்லை, தனிமை அவளை பயமுறுத்தியது, அதை விட தில்லையின் செயலால் அவள் கோபத்தில் இருந்தாள்.
நடந்துவிட்டதை தடுக்க முடியாமல் போனது, இனி என்ன செய்வது என தெரியாமல் தவித்தாள். அந்த தவிப்பு, கோபம், ஆற்றாமை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை பாடாய்படுத்தியது. தில்லையில்லாத அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு
அங்கிருந்த பொருட்களை எல்லாம் கோபத்தில் விசிறியடித்தாள். அனைத்தையும் கலைத்தாள். உடைத்தாள், சத்தம் கேட்டு தில்லையின் அடியாட்கள் வந்தார்கள், கோபத்தில் இருந்த சம்யுக்தாவையும் அவளின் செயலையும் கண்டு புரியாமல் பொறுமையாக காத்திருந்தார்கள். அவளும் தனது கோபம் அடங்கும் வரை அங்கிருந்த பொருட்களை எல்லாம் கலைத்துவிட்டு ஓய்ந்துப் போனாள்.
நிற்க முடியாமல் தள்ளாடியவள் சட்டென தரையில் அமர்ந்துவிட்டாள். கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளின் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்டு அடியாட்கள் அவள் கழுத்தில் இருந்த தாலியை கவனிக்கவில்லை மாறாக சித்தனே அவளிடம் சென்றான்
”மேடம் என்னாச்சி ஏதாவது பிரச்சனையா ஆமா அண்ணா எங்க போனாரு” என கேட்க அவளோ சித்தனை கோபமாக முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள அதோடு சித்தனும் அங்கிருந்து வெளியேறி அங்கிருந்த ஆட்களிடம்
”நாம போகலாம், பெரிய பிரச்சனையாயிடுச்சி போல இருக்கு அண்ணா வேற இல்லை முதல்ல அண்ணாவை தேடுவோம்”
”அண்ணனா அவருக்கு உடம்புல கத்திக்குத்து விழுந்ததால, டாக்டரை பார்க்கப் போயிருப்பாரு”
”இருக்கலாம் சரி சரி இவங்களை தொல்லை செய்ய வேணாம், இவங்களை கட்டுப்படுத்த அண்ணாவாலதான் முடியும், நாம காவலுக்கு இருப்போம்”
”இவங்க இருக்கற நிலைமையை பார்த்தா பாவமாவும் இருக்கு, பயமாவும் இருக்கு, தற்கொலை பண்ணிக்காம இருந்தா சரி”