“எதுக்கு இவனை இப்படி அடிச்சுட்டு இருக்க? விடு அவனை, விடுன்னு சொல்றேன்ல!” ஜெயிடம் இருந்து அடி வாங்கி கொண்டிருந்தவனை விலக்க முயற்சி செய்தார் சுரேஷ்.
கணவரின் கார் வந்த சத்தம் கேட்டு வாசல் வந்த சித்ரா அவரின் சட்டையை ஒரு இளைஞன் பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள். ஓடாத குறையாக அங்கே சென்றாள். ஜெய் எதையும் எவரையும் பார்க்காமல் திட்டிக் கொண்டிருந்தான்.
“... அவன் என்ன செஞ்சான்னு உங்களுக்குத் தெரியுமா? ரோட்டுல போன ஸ்கூல் பொண்ணுங்க கிட்ட அசிங்கமா கமன்ட் அடிச்சுட்டு இருந்தான். அவனுக்கு போய் வக்காலத்து வாங்குறீங்க.” சித்ரா பக்கத்தில் வந்தப் பிறகே சூழ்நிலை உணர்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் ஜெய். அவனின் கை சுரேஷின் சட்டையை விடுவித்தது.
“சாரி சார். அவன் பேசினதை நீங்க கேட்கலை. அதான் உங்களுக்கு தெரியலை. எவ்வளவு கொழுப்பு இருந்தா குழந்தைகளை பார்த்து அப்படி பேசுவான்?” ஜெய்யின் பேச்சில் கோபம் இருந்தது.
சுரேஷ் எப்போதும் போல தன் குரலை உயர்த்தாமல் ஜெய் சொல்வதை உணர்ந்துக் கொண்டு அமைதியாகவே பேசினார்.
“நீ சொல்றது சரிப்பா. ஆனா, நீயே அவனை அடிக்க கூடாது. பிடிச்சு போலீஸ்ல கொடுக்கனும். இப்போ அவன் உன் மேல கம்ப்ளெயின்ட் செய்தா உனக்கு தானே கஷ்டம்?”
“போலீஸ் கிட்ட நான் சொன்னா மட்டும் நம்பிடுவாங்களா சார்? அந்தப் பொண்ணுங்க கிட்ட கேட்கனும்னு சொல்லுவாங்க. பாவம் சார் சின்ன பசங்க, படிக்க போறாங்க அவங்களுக்கு எதுக்கு இந்த தொல்லை