ஏற்கனவே அம்மா, தம்பி, தங்கை என இருந்த பட்டியலில், அவனின் மகளும் சேர்ந்துக் கொண்டாள்...
அவன் எடுத்த முடிவு சரியா தவறா என்பது கமலுக்கு புரியவில்லை! ஆனால் சுமி புரிந்துக் கொண்டாள் என்பது ஒன்று மட்டுமே அவனின் மனதிற்கு சின்ன இதத்தைக் கொடுத்தது!
ரேஷ்மி மெல்ல மெல்ல தன் சித்தியுடன் ஒட்டிக் கொள்ள, கமல் அவளின் எதிர்காலத்தை பற்றி யோசித்து திட்டமிட தொடங்கினான். ரோஷனி குழந்தையை மிகவும் அன்பாக பார்த்துக் கொண்டாள்! சுமித்ரா இல்லாத குறை தெரியாமல் மகளை வளர்த்தாள் என்று சொல்லக் கூட கமலுக்கு தயக்கமில்லை! மற்ற யாருக்கு அவன் கடமை பட்டிருக்கிறானோ இல்லையோ ரோஷனிக்கு அதிக கடமை பட்டிருக்கிறான்!
மகள் சித்தியின் கவனிப்பில் வளர, கமல், அவளின் படிப்பிற்கு, திருமணத்திற்கு, எதிர்காலத்திற்கு என தனி தனியே சேமித்து வைக்க தொடங்கினான்.
ரேஷ்மி எதிர்காலத்தில் எப்போதும், எந்த பிரச்சனையையும் சந்தித்து விடக் கூடாது என்பதற்காகவே அயராமல் உழைத்தான்... சேமித்தான்...!
✽✽✽
ரேஷ்மி விழிகளை டைரியில் இருந்து திருப்பி எதிரே இருந்த சுவரை வெறித்துப் பார்த்தாள்!
அவளால் இப்போது அப்பாவை புரிந்துக் கொள்ள முடிந்தது! அவனின் நடவடிக்கைகள், செய்கைகளுக்கு பின்னால் இருப்பதையும் கூட அவளால் உணர முடிந்தது!
டைரியில் அப்பா எழுதி இருப்பது போல சித்தி ஒருத்தியை தவிர அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருமே கமலின் மீது கோபத்தை வளர்த்து தான் வைத்திருந்தார்கள்! ஆனால் கமல் அவர்களின் தேவைக்கு பண உதவி செய்த போது ஒருவரும் அதை மறுக்கவில்லை! அதை பற்றி பெரிதாக நினைக்கவும் இல்லை!
அவளின் படிப்புக்கு மட்டும் என்று இல்லாமல், அத்தையின் கல்யாணம், தம்பியின் படிப்பு, வீடு மெயின்டனென்ஸ் என எல்லாவற்றிற்கும் அப்பாவின் பணம் பயன்பட்டது! ஆனால் ஒருவருமே