ரேஷ்மி வளர்ந்து பெரியவளாகி, பள்ளி முடித்து, கல்லூரி சென்று, பட்டம் பெற்று... என அனைத்தையும் தள்ளி நின்றே பார்த்தவனுக்கு அவளுக்கு திருமணம் நிச்சயமாகவும் மனதினுள் சந்தோஷம் நிறைந்தது.
ஷ்யாமும், அவனின் குடும்பத்தினரும் ரேஷ்மியை நல்ல விதமாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது...
அதுவும் ஷ்யாமும், ரேஷ்மியும் விரும்பி மணம் முடிப்பது தெரிந்ததும், அது அவனுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது...
ஷ்யாம் ரேஷ்மியின் கழுத்தில் தாலி அணிவித்த போது, கமலின் மனதில் என்ன என்றே சொல்ல முடியாத நிம்மதியும், அமைதியும் தோன்றியது.
சுமித்ராவிடம் கொடுத்திருந்த சத்தியத்தை நிறைவேற்றி விட்டதால் வந்த நிம்மதி அது...
“சுமி, பார்த்தீயா, நம்ம குட்டி பாப்பா வளர்ந்துட்டா! ஷ்யாம் அவளை நல்ல படியா பார்த்துப்பான்.”
சுமித்ரா தன் பக்கத்தில் இருப்பதாக நினைத்து பேசியவன், அவளின் அடுத்த சொல்லுக்காக காத்திருந்தான்...
முன்பு... சுமித்ராவிற்கு ஏதாவது ஆகி விட்டால் இறந்து விடுவேன் என்று அவன் சொன்ன போது ரேஷ்மிக்கு செய்ய வேண்டிய கடமைகளை நினைவுப் படுத்தி அப்படி நினைக்க கூடாது என்று அவனுக்கு சொன்னவள் சுமித்ரா தானே...
இப்போது தான் சுமி விரும்பியது போல எல்லாம் நிறைவேறி விட்டதே... இதற்கு மேல் அவன் அவனின் சுமியை தேடி செல்ல தடை என்ன இருக்கிறது?
“... சுமி அவனை புரிந்துக் கொண்டவளாக புன்னகைத்தாள். நான் அவள் இருக்கும் இடத்திற்கு செல்ல இனி தடை ஒன்றும் இல்லை... இத்தனை நாட்கள் அவள் என் பக்கத்தில் இருப்பதை