உணர்ந்தாலும் அவளை பார்க்க முடியவில்லை... இனி மேலும் என்னால் அப்படியே இருக்க முடியாது... நானும் சுமியிடம் போகிறேன்... சுமி எனக்கு சம்மதம் கொடுத்து விட்டாள்... சுமி... என்றென்றும் உன்னுடன்...”
✽✽✽
அந்த இடத்தில் டைரி முடிந்து போயிருந்தது...
அதை மூடி வைக்கவும் மனம் வராமல் அப்படியே கையில் வைத்திருந்த ரேஷ்மியின் கண்களில் இருந்து சின்ன சின்ன கண்ணீர் முத்துக்கள் விழுந்தன.
அப்பா அம்மா மீது வைத்திருந்த அன்பை போல வேறு ஒரு மனிதனால் அன்பு காட்ட முடியுமா என்று அவளுக்கு சந்தேகமாக தான் இருந்தது... என்ன மாதிரியான அன்பு இது....!!!
முன்பு போல அப்பாவை இதயமே இல்லாதவராக அவளால் பார்க்க முடியவில்லை... நினைக்கவும் முடியவில்லை!
அந்த நாள் வரை அப்பா மீது அவள் வைத்திருந்த அபிப்ராயம் முழுக்க முழுக்க தலைகீழாக மாறி போய் இருந்தது! தன் அன்பை ஒருவரிடமும் வெளியே காட்ட தெரியாத குழந்தையாக தான் இப்போது அவளால் அப்பாவை நினைக்க முடிந்தது.
அம்மா அப்பா வாழ்வில் வந்தது மட்டும் தான் அவரின் அதிர்ஷ்டம்...
ஒவ்வொரு விஷயத்தையும் இரண்டு பேரும் எப்படி புரிந்து நடந்துக் கொண்டிருக்கிறார்கள்...!!!!
அப்பா - அம்மாவின் அறை பல வருடங்களுக்கு முன்பு பார்த்ததை போலவே இன்றும் இருந்ததன் காரணமும் இப்போது ரேஷ்மிக்கு புரிந்தது... அதை அப்படியே பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார் அப்பா...!
இத்தனை வருடங்களில் அப்பா அவளை புறக்கணித்து விட்டார் என்ற கோபம் இருந்ததே தவிர... ஏன் இப்படி இருக்கிறார்? எதனால் யாரிடமும் ஒட்டாமல் தனியாக இருக்கிறார்? போன்ற