வர நேரத்துல மெலிசா கயிறை கட்டி வச்சிருந்தேன்... அப்படி தான் தடுக்கி விழுந்தான்... ஃப்ராக்ச்சர் ஆகும்னு நினைச்சேன்... சின்ன ஸ்ப்றேயின் தான் ஆச்சு...”
அடப்பாவி என்பது போல உதயை ஒரு பார்வை பார்த்தாள் நந்திதா!
“என்ன பார்க்குற? பின்ன அவனை சும்மா விட முடியுமா சொல்லு?”
“அவன் என்னை விட சீனியர் உதய்... சரத் செட்... நீங்க தான் இதை செய்ததுன்னு தெரிஞ்சிருந்தா, என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சீங்களா? காலேஜ்ல இருந்து சஸ்பென்ட் கூட செய்திருப்பாங்க...”
“அதெல்லாம் பக்காவா ப்ளான் செய்து செய்தேன்ல... உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்... அதனால தான் காலேஜ்ல உன்னை விட்டு தள்ளியே இருந்தேன்...”
அவன் சொல்லாமல் விட்டதும் நந்திதாவிற்கு புரிந்தது....
மேலே பேச அவளுக்கும் சங்கடமாக இருந்தது... கணவனிடம் அவள் எப்படி பழைய காதலை பற்றி பேசுவது!!!
“நதி, எதை சொல்றதா இருந்தாலும் தயங்காம சொல்லு... நமக்குள்ளே ஒளிவு மறைவே வேண்டாம்... நான் தப்பா நினைச்சுப்பேனோன்னு எல்லாம் யோசிக்காதே...”
“அது... இல்ல... உதய்.... இன்னைக்கு மண்டபத்துல அவனை பார்த்தது ஷாக்கிங்கா இருந்தது...”
சந்தோஷின் பெயரை சொல்ல விரும்பாமல் மொட்டையாக சொன்னாள் நந்திதா... உதய் புரிந்துக் கொள்வான் என்று சின்னதாக ஒரு நம்பிக்கை இருந்தது...
அவளின் நம்பிக்கை சரி என்பது போல,
“தெரியும் நதி... சந்தோஷை தானே சொல்ற... நாகு கல்யாணம் பத்தி சொன்னாங்களாம்... அவனே கேட்டு பத்திரிக்கை வாங்கிக்கிட்டானாம்... அவனை விட்டு தள்ளு,” என்று அவளுக்கு சரியான பதிலை கொடுத்தான் உதய்.