“நோ நோ நதி... உன் கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்... அம்மா கிட்ட கதை விட்டேன் டார்லிங்... ஒரு சாமியார் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா தான் நான் சந்தோஷமா இருப்பேன்னு சொன்னாருன்னு சொன்னேன்...”
“அதை அவங்க அப்படியே நம்பிட்டாங்களா என்ன??”
“இல்லை நம்பலை... அடுத்த நாளே அந்த சாமியாரை தேடி போனாங்க... அன்னைக்கு சாயந்திரமே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க...”
மெல்ல தலையை நிமிர்த்தி அவனை பார்த்த நந்திதா, “அந்த சாமியாருக்கு பணம் கொடுத்து அரேன்ஜ் வச்சிருந்தீங்களா என்ன?” என்றாள் கேள்வியாக!
“அங்கே சாமியாரே இல்லை... செட் அப் செய்து வைக்கலாம்னு தான் நினைச்சிருந்தேன்... ஆனா அம்மா நான் ப்ளான் செய்றதுக்குள்ளேயே போயிட்டாங்க...”
“ஹையோ, அப்போ எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க???”
“அது தான் நதி அம்மா! எனக்கு எந்த அளவுக்கு உன்னை பிடிச்சிருந்தா அப்படி பொய் சொல்லி இருப்பேன்னு யோசிச்சிருப்பாங்க... இப்போ வரைக்கும் ஏன்டா பொய் சொன்னேன்னு என் கிட்ட கேட்கவே இல்லை... ஆனால் நம்ம கல்யாணம் முடிஞ்சிருச்சு பார்த்தீயா...”
“பாவம் அத்தை... நீங்களாவது உண்மையை சொல்லி இருக்கலாமே...”
“என்னவோ சொல்லனும்னு தோணலை.... ரியலி ஸ்பீக்கிங் அந்த ப்ரியா குட்டி சாத்தான் செய்த வேலையால தான் இந்த கலாட்டா எல்லாம்... மத்தபடி நான் எல்லாம் பக்காவா ப்ளான் செய்து வச்சிருந்தேன்...”
“ப்ரியா என்ன செய்தாங்க?”
“அவளுக்கு மரியாதை வேறயா??? ஒரே ஒரு நாள் என் கூட வந்தாள்ல, நாம இரண்டு பேரும்