“உதய்... நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”
“உன்னை போய் தப்பா எல்லாம் நினைப்பேனா? சொல்லு நதி...”
“இல்ல... இவ பாட்டுக்கு காலேஜ் டைம்ல ஒருத்தனை லவ் செய்துட்டு... அவனை வேண்டாம்னு விட்டுட்டு... இப்போ...”
நந்திதாவின் பேச்சை நிறுத்தி குறுக்கிட்டு பேசினான் உதய்.
“நதி நதி...! உன்னை என்னன்னு சொல்றது! எனக்கு உன்னை பிடிச்சது வெறும் அப்பியரன்ஸ் வச்சுன்னா நினைக்குற? உன்னோட ஸ்மார்ட்னஸ், தெளிவு, நேர்மை, நிமிர்வு எல்லாமும் பிடிக்கும்... அவன் உனக்கு ஏத்தவன் இல்லைன்னு எனக்கு எப்போவோ தெரியும்... உனக்கு தான் லேட்டா தெரிஞ்சது... ஆனால் தெரிஞ்ச உடனே ஸ்விஃப்ட்டா ஆக்ஷன் எடுத்த பாரு... அது தான் நதி ஸ்பெஷல்... என்னோட நதி ஸ்பெஷல்...”
உதய் அழுத்தி சொன்ன என்னோட நதி யில் தெரிந்த உரிமை அவளுக்கு இதமாக இருந்தது.
“நான் இப்போ இன்னொரு confession செய்யனும் நதி...”
“என்னது?” என்றாள் நந்திதா மேலும் ஆர்வத்துடன்!
“அந்த சந்தோஷோட லவ் அஃப்பேர் உன் அப்பாவுக்கு எப்படி தெரியும்னு உனக்கு தெரியுமா?”
“யாரோ ஃப்ரென்ட் சொன்னாங்கன்னு சொன்னார்... அதை வச்சு சந்தோஷ் ஆக்டிவிட்டீஸ் கவனிச்சதுல கையும் களவுமா மாட்டினான் அவன்...”
“அது தான் இல்லை... நான் தான் உன் அப்பாக்கு விஷயத்தை சொல்லி நீங்களே விசாரிச்சு உண்மையை தெரிஞ்சுக்கோங்கன்னு சொன்னேன்... அவர் அதனால தான் அவனை கண்காணிச்சார்... அவன் மாட்டிக்கிட்டான்...”