(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

  

“ஓ...!”

  

“என்னடா இவன் இத்தனை ஃப்ராட் வேலை செய்திருக்கான்னு நினைக்காதே நதி... நீ சந்தோஷமா இருக்கனும்னு தான் செய்தேன்... மத்தபடி எந்த கெட்ட எண்ணமும் இல்லை...”

  

நந்திதா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்!

  

“கோபமா நதி?”

  

“ஹுஹும்....” என்று ஜிமிக்கி அசைய தலை அசைத்தவள், உதயின் அருகே நெருங்கி அவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

  

உதய்க்கு சிலிர்த்தது!

  

“நான் ரொம்ப லக்கி உதய்... உங்களை போல ஒருத்தர் கணவரா கிடைக்க நான் ரொம்ப ரொம்ப லக்கி...”

  

“ஹேய், இப்படி கோல்மால் எல்லாம் செஞ்சா தான் உனக்கு பிடிக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் நிறைய இப்படி எல்லாம் செய்திருப்பேனே,” என்றான் உதய் குறும்புடன்!

  

“க்கும்... இன்னும் புதுசா வேற நீங்க செய்யனுமா?”

  

தோளில் சாய்ந்திருந்த நந்திதாவை மென்மையாக அணைத்துக் கொண்ட உதய்,

  

“எனிதிங் ஃபார் யூ டார்லிங்,” என்றான் காதலுடன்...

  

“இப்படி தான் சொல்வீங்க... ஆனால் கல்யாணத்துக்கு எப்படி அத்தையை சம்மதிக்க வச்சீங்கன்னு கேட்டா அதெல்லாம் உனக்கு எதுக்குன்னு கேட்பீங்க...”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.