தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 19 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
சாரதா அன்று கோவிலுக்கு செல்ல விரும்பினாள். எனவே ரோஹினியையும் அவளுடன் வர அழைத்தாள். ஆனால் ரோஹினிக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இருக்கவில்லை... முடிந்த அளவில் மற்றவர்கள் யாரும் அவளை பார்க்காமல் இருப்பதே நல்லது என்று நினைத்தாள்...
சாரதாவிற்கும் ரோஹினியின் மன நிலை ஓரளவிற்கு புரிந்தது. அதனால் அவளை அதிகம் கட்டாயப்படுத்தவில்லை. விஜய்க்கு எப்போதும் கோவிலுக்கு போவதில் அதிக விருப்பமில்லை! அஜயும் அப்படி தான். ஆனால், நிரஞ்சனா வேறு அன்று வீட்டிற்கு வராததால், சாரதாவின் துணையாக அஜய் கோவிலுக்கு அவளுடன் சென்றான்.
அவர்கள் இருவரும் போன பிறகு, விஜயும் ரோஹினியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
விஜய் ஒரு சானல் என்றில்லாமல் பல பல சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான்!
உலகச் செய்திகள்!
பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் சேனைத் தீவின் பட்டத்து இளவரசியை காணவில்லை என அந்நாட்டின் அரண்மனை செய்தியாளர் தெரிவித்துள்ளார். இளவரசி ரோஹினியின் அன்னை மஹாராணி ரேவதி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மஹாராணியின் மறைவினால் வருத்தத்தில் இருந்த இளவரசி தனிமை விரும்பி சென்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் மாற்றிய சானலில் உலக செய்திகளில் ஒன்றாக ஒளிபரப்பான செய்தியை கேட்டு ரோஹினி அதிர்ந்தே போனாள்! ஒரு நிமிடம் அவளின் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டதைப் போல அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
டிவியில் அந்த செய்தியை சொல்லும் போது அவளின் புகைப்படத்தையும் காட்டினார்கள், கூடவே அரண்மனையையும் காட்டினார்கள்!!!
ரோஹினி படபடக்கும் இதயத்துடனே ஓரக்கண்ணால் விஜயைப் பார்த்தாள். அவன்
தொடர்ந்து எபி கொடுங்க 🤷🏻♀️ 🤷🏻♀️ 🤷🏻♀️ 🤷🏻♀️