அஜய்க்கு தெளிவாக கேட்டது.
அவனின் கண்கள் அவனுடைய பிரத்தியேக ஸ்டைலில் பளிச் பளிச் பாஷையில் ரோஹினியிடம் பேசின...!
ஆனால் ரோஹினி அதற்கு கண்ணால் கூட பதில் சொல்லும் மனநிலையில் இல்லை! டிவியில் பார்த்த செய்தியும், விஜயுடன் பேசியதும் அவளை ரொம்பவே சலனப் படுத்தி இருந்தது!
பொதுவாக சேனைத் தீவின் அரண்மனைக்குள் நடக்கும் விஷயங்கள், அதுவும் அரசக் குடும்பம் தொடர்பான விபரங்கள் அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். எதையும் தேவைக்கு அதிகமாக பகிர மாட்டார்கள்!
இப்போது, அரச குடும்பத்து இளவரசியான அவளை பற்றிய விபரம் வேறு ஒரு நாட்டில் டிவி செய்தியாக வந்திருக்கிறது என்றால் அவள் எங்கே இருக்கிறாள் என்பதுப் பற்றி ஒருவருக்கும் ஒரு விபரமும் கிடைக்காமல் போயிருப்பதாக தானே அர்த்தம்?
இந்த நிலைமையை பயன்படுத்திக் கொண்டு விக்ரமுடனும் தாத்தாவுடனும் பேசிப் பார்க்கலாமா??? திருமணத்தை நிறுத்தினால், உடனே தீவிற்கு திரும்புகிறேன் என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது தானே...
ரோஹினிக்கு இந்த யோசனை பிடித்திருந்தது...
அதன் ப்ளஸ், மைனஸ்களை ரோஹினி எடைப் போடும் போதே, “ரோ கண்ணா... இந்தா கோவில் பிரசாதம்,” என சொல்லிக் கொண்டே சாரதா ரோஹினியின் நெற்றியில் குங்குமமும் விபூதியும் வைத்து விட்டாள்!
ரோஹினியின் மனதில் மீண்டும் புது சலனம் ஏற்பட்டது... அரண்மனைக்கு திரும்பி போவதாக இருந்தால் அவள் சாரதாவை பிரிந்து செல்ல வேண்டுமே... சாரதாவை மட்டுமா, அஜயையும் பிரிந்துப் போக வேண்டுமே...
தொடர்ந்து எபி கொடுங்க 🤷🏻♀️ 🤷🏻♀️ 🤷🏻♀️ 🤷🏻♀️