(Reading time: 13 - 25 minutes)

ராஜகோபால் மூலமாக விஷயம் கேள்விப்பட்ட ஜோதிக்கும் பாலுவிற்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“என்னங்க இந்த பொண்ணு இப்படி பண்றா. எப்படியோ ஒரு பெரிய பிரச்சனை முடிஞ்சதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தா இப்ப இவளே இல்ல பிரச்சனையா வந்து நிக்கறா” என பாலுவிடம் புலம்பினாள் ஜோதி.

“ம்ம்ம். நீ சொல்றது கரெக்ட் தான். ஆனா இனியா எதையும் யோசிச்சி தான் செய்வா. அவ கிட்டவும் நாம என்னன்னு பேசணும்”

“என்னவோ போங்க. நானும் நேத்து வரைக்கும் அப்படி தான் நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா இப்ப அவ இப்படி பண்ணதுல இருந்து அவ மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி”

“இங்க பாரு ஜோதி. இப்படி நீ புலம்பரதுனால எதுவும் நடக்க போறதில்லை. அதனால மேற்கொண்டு என்ன பண்றதுன்னு யோசி”

“அது புரியாம தானேங்க நான் இப்படி புலம்பிகிட்டு இருக்கேன்”

பின்பு இருவரும் யோசித்து சந்துருவை போன் செய்து வரவழைத்தார்கள்.

சந்துரு வந்தவுடன் தான் அவனுக்கு இனியா கூறியதே தெரியவில்லை என்று தெரிந்து அவர்கள் இனியா கூறியதை கூறினார்கள். பின்பு சந்துருவும் வீட்டில் தான் மொபைல் உடைந்ததை பற்றி கூறினான்.

அவர்கள் எவ்வளவு யோசித்தும் இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்பது தான் தெரியாமல் இருந்தது.

பின்பு பாலு தான் “நல்லதே நடக்கும்னு நம்புவோம். ஏற்கனவே ஊர்ல நடந்த பிரச்சனையே பெரிசு. அது நடந்து அதை ஜீரணிச்சிக்கவே யாருக்கும் டைம் குடுக்காம இவங்க கல்யாணம் விஷயம் பேச போய் தான் இப்ப இவ்வளவு பெரிய பிரச்சனைல வந்து நிக்குது. கொஞ்ச நாள் விட்டுடலாம். இனி நடக்கறதை வச்சி நாம மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். அப்படி இல்லாம இன்னும் இதையே பேசிக்கிட்டு இருந்தோம்னா பிரச்சனை இன்னும் பெருசா தான் ஆகும்” என்று கூறவும் மற்ற இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

டுத்த நாள் மதியம் இனியா சந்துருவிற்கு போன் செய்ய எண்ணி அவன் வீட்டிற்கு போன் செய்தாள். ராஜலக்ஷ்மி தான் போனை எடுத்தார்.

இனியா “ஹலோ” என்றாள்.

ராஜலக்ஷ்மியும் “ஹலோ” என்று கூறி விட்டு இனியாவின் குரலை கேட்டு அதற்கு மேல் ஏதும் பேச இயலவில்லை.

“அத்தை”

“.....”

“ஏன் அத்தை என் கிட்ட பேச மாட்டீங்களா.”

“....”

“நான் உங்களை அத்தைன்னு கூப்பிடறது தான் உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் வேணும்னா அப்படி கூப்பிடலை. ஆன்டின்னே கூப்பிடறேன்” என்றாள்.

“அப்படி எல்லாம் இல்லைம்மா. நீ எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் குடுத்துடாத”

“இப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்.”

“ஏற்கனவே என் பையன் என் கிட்ட பேசாம எனக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்கான். நீயும் எனக்கு தண்டனை கொடுக்காதம்மா”

“அப்படி எல்லாம் இல்லை”

“அப்படின்னா நீ முதல்ல என்னை அத்தைன்னு கூப்பிடு.”

“சரி அத்தை. அந்த பேச்சை முதல்ல விடுங்க. சந்துரு இருக்காரா. அவரை கொஞ்சம் என் ஹாஸ்பிடல்க்கு வர சொல்றீங்களா”

“ஏன்மா. இந்த கல்யாண பேச்சு இப்படி ஆச்சின்னா நீ எங்களை ஒதுக்கிடுவியா. உன்னை யாருன்னே தெரியாதப்ப கூட உன்னை எனக்கு பிடிச்சிருந்தது. நீ என் அண்ணன் பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே இன்னும் ரொம்ப சந்தோச பட்டேன். ஜோதிக்கும் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா உங்க ரெண்டு பேரையும் என் வீட்டு மருமகள்களா ஆக்கி இருக்கலாம்ன்னு கூட நினைச்சிருந்தேன். ஆனா நாம நினைக்கறது எல்லாம் நடக்கறது இல்லம்மா. இந்த கல்யாண பேச்சு நின்னுட்டதால நீ என் அண்ணன் பொண்ணு இல்லைன்னு ஆகிடுமா. எனக்கு பொண்ணு இல்லாத குறைய தீர்க்க வந்தவங்கன்னு உங்களை தான் நான் நினைச்சிருந்தேன். அந்த எண்ணத்தை கலைச்சிடாதம்மா”

“என்னத்தை நீங்க. இப்ப ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகறீங்க. இப்ப என்னாச்சின்னு இப்படி பேசறீங்க. நீங்க சொன்ன மாதிரி எந்த பிரச்சனை எப்படி இருந்தாலும் நான் உங்க அண்ணன் பொண்ணு தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. இந்த பிரச்சனைனால நமக்குள்ள இருக்கற உறவுல எந்த வித மாற்றமும் இருக்காது அத்தை. பட் நீங்க இப்படி பீல் பண்ணி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்”

“அப்ப நீ இங்க வந்து சந்துருவை பார்க்கறதை விட்டுட்டு ஏன் அவனை அங்க வர சொல்ற”

“இல்லை அத்தை. டைம் இல்ல அங்க வர. அதான் சந்துருவை லஞ்ச் பிரேக்ல வர சொல்லலாம்னு”

“நீ இப்ப சொன்ன எல்லாம் உண்மைன்னா நீ இங்க வந்துட்டு போ”

திரும்ப எத்தனை முறை சொன்னாலும் ராஜலக்ஷ்மி அதை ஏற்காததால் அவளே வருகிறேன் என்று ஒத்துக் கொண்டாள்.

ண்ணிரண்டரை மணி போல் இளவரசன் வீட்டிற்கு சென்ற இனியா பயந்து கொண்டே தான் சென்றாள். (தன் மேல் இருந்த கோபத்தால் போனை உடைத்தவன் தான் கிடைத்தால் என்ன செய்வானோ என்று தான்)

சந்துரு தான் அவளை வரவேற்றான்.

உடனே அவள் அத்தையும் வந்து அவளை வரவேற்றார்.

இனியா சந்துருவிடம் ஒரு புது மொபைல் பாக்சை நீட்டினாள்.

சந்துரு “என்ன இதெல்லாம்” என்று கேட்டான்.

“பார்த்தா தெரியலை”

“அது தெரியுது. அதான் எதுக்குன்னு கேட்கறேன்”

“ப்ளீஸ் சந்துரு. எந்த ஆர்குயுமென்ட்சும் வேண்டாம். நீங்க இதை வாங்கிகிட்டா தான் எனக்கு கொஞ்சம் ரிலீபா இருக்கும். ப்ளீஸ்”

சந்துருவால் அதற்கு மேல் ஏதும் கூற இயலவில்லை “சரி” என்று வாங்கி கொண்டான்.

இதை அனைத்தையும் ராஜலக்ஷ்மி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“சரி அத்தை. நான் கிளம்பறேன்” என்றாள் இனியா.

“என்ன இது. இப்ப தான் வந்த. அதுக்குள்ளே கிளம்பறேன்னு சொல்ற.”

“இல்லத்தை. நான் தான் ஏற்கனவே சொன்னேன் இல்ல. நீங்க பீல் பண்ணீங்கன்னு தான் நான் வந்தேன். எனக்கு திரும்ப ரெண்டு மணிக்கு ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு”

“சரி ரெண்டு மணிக்கு தானே. நீ இங்க சீக்கிரமா சாப்பிட்டுட்டு மட்டும் போயிடு”

“இல்லை அத்தை. அதெல்லாம் வேண்டாம். டைம் ஆகிடும். ப்ளீஸ் அத்தை”

“அதெல்லாம் முடியவே முடியாது. ஒரு பத்து நிமிசத்துல சாப்பிட்டுட்டு போயிடு. அங்க போய் நேரமாயிடுச்சின்னு நீ சாப்பிடாம இருந்திடுவ”

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. “இங்கு என்ன தான் நடக்கிறது. அம்மாக்கு இவங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா இவங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கறதை ஒத்துக்கலை. அதுக்காக அண்ணனே அம்மா மேல கோபமா இருக்கும் போது இவங்க அம்மா கிட்ட இவ்வளவு நார்மலா பேசறாங்க. அம்மாவும் இவங்க மேல பாச மழை பொழியராங்களே.” என்று அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.