(Reading time: 13 - 25 minutes)

ருவழியாக ராஜலக்ஷ்மி பேசி இனியாவை சாப்பிட்டு செல்ல சம்மதிக்க வைத்திருந்தார்.

ராஜலக்ஷ்மி கிட்சனுக்கு செல்ல இனியாவோ கண்களை சுழற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“யாரோ யாரையோ தேடறாங்க போலருக்கு” என்றான் சந்துரு.

“அப்படில்லாம் ஒன்னும் இல்லையே”

“ஓஹோ. அப்படியா. ஆனா எங்கண்ணன் வீட்டுல இல்லை.” என்றான்.

“அப்பாடா”

“என்னது இது. எங்கண்ணன் இல்லைன்னு பீல் பண்ணுவீங்கன்னு பார்த்தா இப்படி அப்பாடான்னு ரிலீப் ஆகறீங்க”

“பின்ன என்னவாம். என் மேல இருந்த கோபத்துல மொபைலை போட்டு உடைச்சவர் தானே உங்கண்ணன். அதே கோபத்தோட என்னை ஒரு அரை விட்டா நான் தாங்குவேனா. இது வரைக்கும் என்னை யாரும் அடிச்சதே இல்லைப்பா. என்னால எல்லாம் அடி தாங்க முடியாது” என்றாள் சிரித்துக் கொண்டே.

“சூப்பர் அண்ணி. நீங்க தேறிடுவீங்க. எப்படி இப்படி எல்லாம்.”

“வேறென்ன பண்ண சொல்றீங்க. அடிக்கறீங்களா அடிங்க சாமின்னு கன்னத்தை காட்டிட்டு நிக்க சொல்றீங்களா. நான் தான் சொன்னேன் இல்ல. என் உடம்பு இந்த அடி எல்லாம் தாங்காது. அப்படி அடிக்கற மாதிரி ஒரு சிக்னல் கிடைச்சா கூட விடு ஜூட்ன்னு பறந்துடுவேன் இல்ல”

“நல்ல பாலிசி வச்சிருக்கீங்க. எங்களுக்கும் அப்பப்ப கத்து கொடுங்க அண்ணி”

“கத்து கொடுத்துட்டா போச்சி. ஆனா அதுக்கு பீஸ் குடுத்துடணும் சரியா”

“நல்ல அண்ணி தான் நீங்க. நாம பார்த்ததுல இருந்தே எந்த சேன்ஸ் கிடைச்சாலும் பீஸ் வாங்க பார்க்கறீங்களே”

“நான் எப்ப அப்படி கேட்டேன். நீயே ஒரு வொர்ஸ்ட் பேஷன்ட். ஒழுங்கா பீஸ் தரவே இல்லையே” என்று சிரித்தாள் இனியா.

“நீங்க எப்ப அப்படி கேட்டீங்களா. முதல்ல ஹாஸ்பிடல்ல பேசறதுக்கெல்லாம் காசு கேட்பேனேன்னு சொன்னீங்களே. நியாபகம் இல்லை” என்றான்.

னியாவிற்கு அவன் சொன்ன நிகழ்ச்சி தொடர்ந்து நினைவில் வந்தது.

சந்துரு ஒருவருக்கு  பேச கற்று கொடுங்கள் பீஸ் தந்து விடுகிறேன் என்று சொன்னதும், தானும் இவனை இயல்பாக்க ஏதோ பேச்சு கொடுக்க எண்ணி சரி என்று கூற பின்பு தான் இவன் அண்ணன் தான் என்று கூறினான். தான் திகைத்து நின்ற போதே இளவரசன் வந்ததும், அவனை பார்த்து தான் சுத்தமாக பேச இயலாமல் போனதும், பின்பு அவன் மந்தகாசமாக சிரித்ததும் என்று எல்லாம் தொடர்ந்து நினைவுக்கு வந்தது.

அன்று அதெல்லாம் ஒரு வித சந்தோசத்தையே கொடுத்தது. இன்றோ எல்லாம் தலைகீழாக உள்ளது என்று எண்ணியவளின் முகம் அவளின் வருத்தத்தை காட்டியது.

“என்ன அண்ணி, எதுக்கு இப்போ இவ்வளவு சோகம். எல்லாம் சரியாகிடும். நீங்க எதுக்கும் பீல் பண்ணாதீங்க” என்றான்.

அப்போது ராஜலக்ஷ்மியும் வரவே இனியாவும் அவள் முகத்தை சரி செய்து கொண்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். 

மாலை வீட்டிற்கு வந்த இளவரசன் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டே காபி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

தானும் ஒரு கப் காபியுடன் வந்த சந்துரு அவனை சீண்ட எண்ணி, அந்த மொபைல் பாக்சை காண்பித்து “நீங்க உடைச்சிட்டா என் கிட்ட மொபைலே இருக்காதா. என் அண்ணி வாங்கி கொடுத்தாங்க” என்றான்.

இளவரசன் எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் அங்கு வந்தவன் கையில் ஒரு புது மொபைல் பாக்ஸ் இருந்தது. அதை சந்துருவிடம் கொடுத்தவன், “இந்தா இதை வச்சிக்க. அதை என் கிட்ட கொடு” என்றவாறு அவனே எடுத்து சென்று விட்டான்.

சந்துருவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. இப்ப இங்கே என்ன தான் நடந்தது. இவங்க ரெண்டு பேரும் உண்மைலேயே சண்டை போட்டிருக்காங்களா இல்லையா. இப்ப அண்ணன் என் கிட்ட இருந்த மொபைலை வாங்கிட்டு போனாரா இல்லையா” என்று குழம்பிக் கொண்டிருந்தான்.

உடனே ஜோதியின் வீட்டிற்கு விரைந்து சென்றான் சந்துரு. இதை அவர்களிடம் கூற வேண்டுமென்று.

ஜோதியின் வீட்டிற்கு சென்றால், ஜோதி தான் வந்து வரவேற்றாள்.

“அண்ணி அண்ணி. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று பரபரத்தான்.

“சரி சரி சொல்லலாம். ஆனா முதல்ல மூச்சை விட்டுட்டு அப்புறம் சொல்லுங்க”

“ஐயோ அண்ணி. நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்ல வந்திருக்கேன். நீங்க இப்ப போய் கிண்டல் பண்ணிக்கிட்டு”

அதற்குள் இனியா வெளியே வந்தாள்.

அவளை பார்த்த சந்துரு “நீங்க உள்ளே தான் இருந்தீங்களா.” என்றான்.

“ஆமா. என்னடா ஏதோ லவுட் ஸ்பீக்கர் வாய்ஸ் கேட்டுதேன்னு வந்தா. நீங்க” என்றாள்.

“இருங்க இருங்க. என்னையா கிண்டல் பண்றீங்க.”

“ஆமா. உங்களை தான் பண்றோம்” என மீண்டும் சீண்டினாள்.

“பார்த்துக்கறேன்” என்றவாறே ஜோதியிடம் திரும்பியவன் “நீங்களே சொல்லுங்க ஜோதி அண்ணி. இவங்க எங்க அண்ணனுக்கு கிப்ட் வாங்கி கொடுக்கறதுன்னா நேரா வாங்கி தர வேண்டியது தானே. அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு” என்றான்.

இனியாவிடம் திரும்பிய ஜோதி “என்னடி கிப்ட் வாங்கி கொடுத்தியா. உங்களுக்குள்ள சண்டைன்னு நாங்க எல்லாம் பீல் பண்ணிட்டு இருக்கோம். நீ என்னடான்னா” என்பதற்குள் இனியா இடை புகுந்தாள்.

“அக்கா. வெயிட் வெயிட். நான் இது வரைக்கும் எந்த கிப்ட்டும் வாங்கி கொடுத்ததே இல்லை. நீ வேற. இந்த பிரச்சனை நடக்கரதுக்கே ரெண்டு நாள் முன்னாடி தான் நாங்களே ஒழுங்கா பேசிக்கிட்டோம். அதுக்குள்ளே இவ்வளவு பிரச்சனை. இதுல கிப்ட் ஒன்னு தான் குறையா இருக்கா. சந்துரு தான் சொல்றாருன்னா இதுல நீ வேறக்கா”   

தொடரும்

En Iniyavale - 19

En Iniyavale - 21

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.