(Reading time: 26 - 51 minutes)

06. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

மின்னல் ஒளி முகத்தில்ப்பட்டு கண் விழித்தாள் அனு. கண் விழித்தவள் அருகே அபி நிற்பதை உணர்ந்து வாயில் இருந்து விரலை அவசரமாக எடுத்துக்கொண்டாள். நல்ல வேளை வேற பக்கம் திரும்பி இருக்கா... ஒரு வேளைப் பார்த்து இருப்பாளோ?! பார்த்து இருந்தால் இந்நேரம் ஊரை கூட்டி கிண்டல்ப் பண்ணி இருப்பாளே என்று மனதில் எண்ணிக்கொண்டு படுத்திருக்க, “என்ன மேடம் எழுந்திரிக்குற ஐடியா இல்லையா?” என்று செல்லை பார்த்துக்கொண்டே கேட்டாள் அபி.

““இந்த மாதிரி மழை அடிச்சா எப்படி எழுந்திரிக்க மனசு வரும்?”” என்று மெத்தையில் இருந்து எழுந்திரிக்க மனம் இன்றி புலம்பினாள்.

““அது என்ன உன்னையா அடுச்சுது பூமிய தானே அடுச்சுது?”” என்று தன் காமெடிக்கு தானே சிரித்தாள்.

““என்ன காமெடியா??? மொக்கையா இருந்துச்சு ஆனா நிஜமாவே அடுச்சுது... மழை இல்லை மின்னல் முகத்திலேயே அடுச்சு எழுப்பிடுச்சு”” என்று பதில் கூறியவாறு கிண்டல் செய்தாள்..

““அடிக்கும் அடிக்கும் முகத்திலையும் அடிக்கும் முதுகிலேயும் அடிக்கும்”” என்று அபி கையோங்க அனு ஒருவழியாக மெத்தையில் இருந்து எழுந்து தயாராக சென்றாள்.

*****திருப்பூர்****

““என்னடா அர்ஜுன் பஸ்ல தூங்கிட்டு வந்தியா?”” என்று காபியை ஆற்றியவாறு ஹேமா கேட்டார்.

““எங்கம்மா பஸ் ஆடிய ஆட்டம் என்னென்ற மாதிரி ஒரு ஆட்டம் ஆடுச்சு பாருங்க சுத்தம்மா தூங்கவே இல்லை”” என்று தூங்காத அழுப்பில் பதில் கூறினான்..

““வேற பஸ் பிடுச்சு வந்திருக்கலாம்ல?””

““எங்கம்மா ஆபீஸ்ல இருந்து கிளம்பினதே லேட், அதான் கிடைச்ச பஸ்ல ஏறிட்டேன், பாஸ்போர்ட் verification –காக வந்தேன். இல்லாட்டி எங்க லீவ் தராங்க.. நல்ல வேலை தொடர்ந்து சனி,ஞாயிறு 2 நாள் இருந்துட்டு போகலாம்”” என்று கூறிக்கொண்டே காபியை அருந்தினான்.

““நல்ல வேளை முன்னாடியே சொன்ன, இல்லாட்டி எனக்கும் லீவ் கிடைச்சுருக்காது, சரிப்பா நீ கொஞ்சம் ரெஸ்டெடு”” என்று கையில் இருக்கும் டம்ளரை வாங்கிச்சென்றார்.

““சரிம்மா, அம்மா என்ன மத்தியானம் எழுப்புங்க போதும், நான் நல்லா தூங்கனும்””

““அதுசரி...”” என்று சிரித்துக்கொண்டே சமையல் அறைக்கு சென்றார் ஹேமா.

““அர்ஜுன்... ஹே அர்ஜுன் எழுந்திரி மணி 12 ஆச்சு பாரு”” என்று எழுப்பி குளியல் அறைக்குள் தள்ளினார் ஹேமா.

““ஹேமா அக்கா, ஹேமா அக்கா...”” என்று பக்கத்துவீட்டு ராகவி அழைக்கும் சத்தம் கேட்டு ஹேமா வெளியே வந்தார்.

““வா ராகவி உள்ளவா””

““பரவையில்லை அக்கா, நான் பக்கத்துல இருக்க பேங்க்கு போறேன் அக்கா, அகல்யா காலைல லஞ்ச் எடுத்துட்டுப் போக மறந்துட்டாள், என் வீட்டுகாரரும் ஊருக்கு போயிருக்காரு, அனு அப்பா வீட்டுக்கு சாப்பிட வருவாங்கள, அவங்க போற வழியுளைதானே அகல்யா காலேஜ் இருக்கு கொஞ்சம் கொடுத்துட சொல்றிங்களா அக்கா?”” என்று வேண்டுதலாக கேட்டார்.        

““அச்சச்சோ அவங்க இன்னைக்கு அங்கேயே சாப்பிட்டுக்குறதா சொல்லிட்டாங்களே”” என்று கூறிவிட்டு சிறிது யோசிக்க தலை குளித்துத் துவட்டியவாறு அர்ஜுன் வெளியே வந்தான்.

““எந்த காலேஜ் எஸ்.ர் தானே? அர்ஜுன் அந்த பக்கமாதான் போறான். அவனை வேணும்னா கொடுக்க சொல்றேன் இங்கதா”” என்று ராகவியின் கையில் இருக்கும் டிபன் பாக்ஸ் கையில் வாங்கிக்கொண்டார்.

இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த அர்ஜுன்க்கு ஒன்றும் புரியவில்லை. ராகவி சென்றவுடன், “அம்மா நான் எங்க அந்த பக்கம் போறேன்? ஏன் நீங்களா ஏதாவது சொல்றிங்க?” என்று புரியாமல் கேட்டான்

““பாவம்டா அவசரம்னு கேட்குறாங்க சும்மாதானே இருக்க போய் குடுத்துட்டுவா”” என்று அசால்ட்டாக கூறினார் ஹேமா

““சும்மாவா? எல்லாம் நேரம்ம்ம்...”” என்று கூறிவிட்டு தயாராக சென்றான்.

கிளம்பி அவன் எஸ்.ர் கல்லூரி வாயிலை அடைய, மன்னர்க்கோட்டையை காக்கும் காவலன் போல் மிடுக்காக நின்றுக்கொண்டிருந்தார் காவலர். அர்ஜுன் அவரை கடந்து உள்ளே செல்ல போக அர்ஜுனை தடுத்தவர் “சார் யாரை பார்க்கணும்?” என்று பணிவாகவே கேட்டார்.

““அகல்யானு பி.காம் படிக்குராங்கள அவங்களை பார்க்கணும்”” என்று பொறுப்பாக பதில் கூறினான்.

““உங்க பேரு சார்?””

““அர்ஜுன்””

““இருங்க சார்”” என்று உள்ளே சென்ற காவலர்க்கு எந்த இயர்னு கேட்க மறந்துட்டோமே என்று பாதி தூரம் சென்றவுடன்தான் தோன்றியது... திரும்பி வந்து கேட்கலாம் என்று மனதில் தோன்ற திரும்ப போனவர் எதிரில் வந்த பெண்ணை பார்த்து நின்றார்.

““அகல்யாமா...”” என்று அந்த பெண்ணை அழைத்தார்.

““என்ன அண்ணா?”” என்று துருதுருவென பேசிக்கொண்டே வந்த அஹல்யா நின்றாள்.

““அகல்யாமா உன்னை தேடி அர்ஜுன்னு ஒருத்தர் வந்துருக்காரு”” என்று ஆளை மாற்றி இன்னொரு பெண்ணிடம் கூறினார்.

இந்த அண்ணாட்ட எத்தனை தடவை சொல்றது என் பேரை ஒழுங்கா அஹல்யானு கூப்பிடுங்கன்னு ஹ்ம்ம் இப்போ சொன்னால் மட்டும் மாத்திக்கவா போறார் என்று மனதில் எண்ணிக்கொண்டு “சரி அண்ணா நான் போய் பார்த்துக்குறேன்” என்று கூறி வாயிற்புரம் சென்றாள். “ஹே அஹல்யா இரு நானும் வரேன்” என்று அவளது தோழி அர்ச்சனாவும் துணையாக வந்தாள்.

காவலர் சொன்ன இடத்திற்கு சென்று தேடியவளின் கண்களில் அர்ஜுன் தென்பட்டான், கைகளை குறுக்கே கட்டியவாறு வண்டியில் தோரணையாக சாயிந்திருந்தவன் அவளை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்தான். கால்கள் அவன்புரம் செல்ல கண்கள் அவனை அளவெடுத்துக்கொண்டு வந்தது, அட ஆளு ஸ்மார்டா இருக்கானே ஆனால் முன்னாடி பார்த்தது இல்லையே என்று கவரப்பட்டாலும் கொஞ்சம் யோசனையாக சென்றாள்.    

““அர்ஜுன்...”” என்று சந்தேகமாக தனியாக நின்ற பையனிடம் கேட்டாள்.

““ஹாய் நான் தான் அர்ஜுன், உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கேன்””, என்று கூறி ராகவி தந்த சாப்பாட்டை எடுக்க திரும்பினான்.

நம்ம வீட்டு பக்கத்துல இவ்ளோ அழகான பையனா இருக்காதே என்று யோசனையாக அவனையே பார்க்க, ““இந்தாங்க உங்க அம்மா குடுத்தாங்க”” என்று டிபன் பாக்ஸ கொடுத்தான். 

““யாரு இவங்க அம்மாவா?”” என்று சந்தேகமாக அவனை மேலும் கீழும் பார்த்த அர்ச்சனா, “அப்போ இது என்னது???” என்று அஹல்யா கையில் இருக்கும் டிபன் பாக்ஸ தூக்கி காண்பித்தாள்.

அர்ச்சனா காண்பித்ததை பார்த்து அர்ஜுன் குழம்பிப்போய் இருக்க அர்ச்சனா அஹல்யாவின் தோள் மேல் கை போட்டு, “ஹே அஹல்யா, இப்போதுலாம் சைட் அடிக்க இது புதுவழிப் போல” என்று கிண்டல் செய்தாள். அவள் கிண்டல் செய்வதைப் பார்த்து அஹல்யாவிற்கு சிரிப்பாக இருந்தது.            

““ஹலோ நான் ஒன்னும் சைட் அடிக்க வரலை கொஞ்சம் பார்த்து பேசுங்க””, என்று சிறிது குரலை உயர்த்தினான் அர்ஜுன்.

அவன் கோவப்படுவது பிடிக்காமல், “இரு அர்ச்சனா” என்று தன் தோழியை தடுத்து, “சாரிங்க அவள் கிண்டலுக்கு பேசிட்டா தப்பா எடுத்துக்காதிங்க... உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்று சுற்றி வளைக்காமல் தெளிவாக பேசினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.