(Reading time: 26 - 51 minutes)

““ம்ம்ம்ம் ரொம்ப புடுச்சுருக்கு ஆனா எப்போ போட்டுவிட்ட? பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு போட்டியா?”” என்று மகிழ்ச்சியும் ஆர்வமுமாக கேட்டாள்.

““அவள் எங்கே கஷ்டப்பட்டாள் நான் தான் கஷ்டபட்டேன் நீ என்னடானா சும்மா சும்மா கையை அசைச்சுகிட்டே இருக்க, பாரு என் முகத்தில வேற ஒரு கிக் விட்ட”” என்று தான் கஷ்டப்பட்டதை பாவமாக கூறினாள் தியா.

அவள் கூறியதை கேட்டு தோழிகள் அனைவரும் சிரித்தனர். “போய் மெஹந்தியை எடுத்திட்டு வா கேக் வெட்டனும்ல” என்று அவளை அனுப்பிவைத்தனர். கேக் எல்லாம் வெட்டி அனைவருக்கும் ஊட்டிவிட்டு எல்லாவற்றையும் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். எல்லாவற்றையும் கவனித்து ஆனந்தத்தின் உச்சியில் இருந்தவளுக்கு, ஏன் ஆர்த்தி மட்டும் கேக் மேலே உள்ள கிரீமை மட்டும் தனியாக எடுத்து வைத்தாள் என்று புரியவில்லை. 

அலைபேசி அடிக்க அதை எடுத்ததோ அனுவின் தோழிகள், “தேஜு அனன்யா ரொம்ப பிஸி வேணும்னா செல்ல ஸ்பீக்கர்ல போடுறேன் பேசு” என்று கூறி அழுத்தினாள் ஆர்த்தி...

““ஹாப்பி பர்த்டே அனு என்ன செம ஆட்டமா?”” என்று உற்சாகமாக கேட்க

““தேங்க்ஸ்மா ஆமா தேஜு நினைச்சுக்கூட பார்க்களை ரொம்ப ஹாப்பி”” என்று கூரியவளின் குரலில் தேஜுவைவிட அதிகமா உற்சாகம் தெரிந்தது.

“சரி என்ன முகத்தில கேக் அப்பினான்களா?” என்று கேட்க, அனு “இல்லையே அப்படியெல்லாம் செய்யலையே” என்று கூரியவளின் முகம் மாறியது அப்போதுதான் ஆர்த்தி கிரீமை ஏன் தனியாக எடுத்துவைத்தாள் என்று புரிந்தது சட்டென அவள் ஆர்த்தியை பார்க்க அவளோ வில்லத்தனமாக பின் பக்கம் கைகளை கட்டிக்கொண்டு சிரித்தாள்.

““சரி தேஜு அப்பறமா அனு உனக்கு ஃபோன் பண்ணுவாள், இப்போ நாங்க வேலையை ஆரம்பிக்க போறோம்”” என்று கூறி அழைப்பை துண்டிக்க மறுபுறம் இருந்த தேஜுவிற்கு ஆர்த்தி கூறியது புரிந்து போக சிரித்தாள்.

““ரெடி ஸ்டார்ட்”” என்று கோரசாக சொல்லிக்கொண்டு ஒரே நேரத்தில் அனைவரும் அனுவின் முகத்தில் கேக்கை தடவினர், மஞ்சள் பூசுவது போல் ஒவ்வருவரும் மாற்றி மாற்றி பூச அலங்கோலம் ஆனாள் அனு.

முகம், கை, தலை என எல்லா இடத்திலும் கேக் பூசிருக்க “முடுஞ்சுதா?” என்று பாவமாக கேட்டாள் அனு.

““அதுக்குள்ளயா?! கேர்ள்ஸ் டார்கெட்டை தூக்குங்க”” என்று ஆர்த்தி கட்டளையிட அனுவை அவர்கள் துவைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு இழுத்துச் சென்றனர்.

““ஹே என்னடி பண்ணப்போறீங்க இங்க எதுக்கு கூப்பிட்டு வந்திருகீங்க?”” என்று புரியாமல் கேட்டாள்.

னுவை தனியாக நிறுத்தி, ஆர்த்தி முன்னால் நிற்க அவர்களின் தோழிகள் படை பின்னால்  நின்றது “சார்ஜ்” என்று அவள் கை அசைக்க, சொத்தென வாலிகளில் இருந்த தண்ணீரை அனுவின் மீது ஊற்றினர் அனைவரும். தண்ணீரில் நினைந்த கோழி போல் சொத சொதவென சோப்பு தண்ணீரால் அபிஷேகம் முடிந்து நின்றாள் அனு.

சிறிது நேரம் வாய் திறக்க திண்டாடிய அனு லேசாக வாய் திறந்து, “காலேஜ் ராக்கிங் விட இது மோசமா இருக்குதுடி” என்று மெல்லிய குரலில் சிரிப்புடனே சொல்லி முடித்தாள்

அனைவரும் சேர்ந்து சிரிக்க, அந்த இரவு பொழுதில் தலை குளித்து முடித்து அறைக்கு வந்து சேர்ந்தாள் அனு. நடந்தவை அனைத்தும் மற்றற்ற மகிழ்ச்சியை தர தோழிகளை தழுவிக்கொண்டாள் அனு.

““சரி சரி போதும் sentiment நகுருங்க”” என்று முன்னால் வந்த அபி “இந்தா உன்னுடைய பிறந்தநாள் பரிசு” என்று குடுக்க அனைவர் முகத்திலுமே ரகசிய புன்னகை பரவியது. என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக வாங்கியவளுக்கு அது ஒரு போட்டோ ஃப்ரம் என்று கண்டுபிடிக்க முடிந்தது. கையில் வாங்கியவள் அய்யோ நம்ம விரல் சுப்புனதை ஃபோட்டோ எடுத்திருப்பாங்களோ என்று எண்ணம் வர திருட்டு முழியுடன் அபியை பார்த்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவள் “நீ ரொம்ப புத்திசாலி அனு, இதை இதை இதைதான் எதிர்ப்பாத்தேன்” என்று கூற, அனைவரும் சிரித்தனர்.

பரிசை பிரித்து பார்த்தவள் அவள் நினைத்ததுப் போலவே அவளது புகைப்படம் தான் என்று தெரிந்ததும் இது எப்போது என்று புருவம் உயர்த்தினாள்.

““அதெப்படி மின்னல் முகத்தில் அடிச்சு உன்னை எழுப்பிச்சா..”” என்று கிண்டலாக அனு அன்று கூறியதை சொல்லிக்காட்டி சிரித்தாள். 

ருவழியாக ஆட்டமும் கூத்தும் முடிந்து நிம்மதியாக தூங்கி எழுந்தனர் அனைவரும். என்னதான் ஒவ்வரு விடியலும் புது உணர்வை தந்தாலும் பிறந்தநாள் என்றால், அணியும் புத்தாடையும்,வரும் வாழ்த்துக்களும், சின்ன பரிசானாலும் அன்று மகிழ்ச்சி ரெட்டிப்பாகும், மற்ற நாட்களில் கிடைக்காத முக்கியத்துவம் அன்று கிடைக்க அந்த நாள் முழுவதும் புது புத்துணர்ச்சி தரும். அது போல் ஒரு மகிழ்ச்சியான நாளை துவங்கினாள் அனன்யா.

“அனு எங்கேடி?” என்று கேட்டவாறு தியா அறைக்கு வர, “அப்படி கூப்பிட கூடாது தியா இன்றைய கதாநாயகி எங்கேன்னு கேட்கணும்” என்று கிண்டல் செய்தாள்.

““ஓஹோ அப்போ கதாநாயகன் எங்கே?”” என்று கிண்டலாக தியா கேட்டாள்

““அது கிளாஸ்கு போனால் தானே தெரியும்”” என்று கூறி கண்ணடித்தவாறு ஸ்வாரா வந்து சேர்ந்தாள்.

““ஐயோ ஒன்னு சேர்ந்துட்டிங்களா? போங்க போய் கிளம்புங்க”” என்று அடக்கியவாறு வந்தவள் பச்சை மரத்தில் மஞ்சள் நிற பூக்கள் இருந்தாள் எவ்வளவு எடுப்பாக இருக்குமோ அவ்வளவு அழகாக அதே நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்து மிதமான உப்பனையில் அழகாக வந்தாள்.

““ஹே அனு சூப்பர்.. அழகா இருக்க, ஆனால் ஏதோ குறையுதே”” என்று பக்கத்தில் வந்த மாதவி அனுவின் கைகளில் ஒன்றும் போடாமல் இருப்பதைப் பார்த்து “என்னது இது வளையல் எங்க?”

““வாங்களைடி எப்பவும் போடாமல்தானே இருப்பேன் இப்போ மட்டும் என்ன?””

““இன்னைக்கு அப்படிதான்”” என்று கூறி தன் பெட்டியில் வைத்திருந்த வளையல்களை எடுத்து தந்தாள் மாதவி, “பாரு பொருத்தமா இருக்கு!!!”

““பொருத்தமாதான் இருக்கு ஆனால் இது என்ன மணியா மணி தொங்குதே! கொஞ்சம் ஆடம்பரமா தெரியலை?”” என்று கேள்வியாக பார்க்க மாதவி முறைத்தாள்.

“சரி சரி போகலாம் வாங்க” ஒருவாறு கல்லூரிக்கு நகர்ந்தனர்.

அனைவரும் கிண்டல் அடித்து பேசிக்கொண்டே வகுப்பிற்கு சென்றனர், ஸ்வாராவும் அனுவும் கிண்டல் செய்து சண்டை போட்டுக்கொண்டு வர, ஸ்வாரா அனு தலையில் அணிந்து இருந்த கிளிப்பை எடுத்துக்கொண்டு முன்னால் வகுப்பறை நோக்கி ஓடினாள்.

““ஹே ஸ்வாரா நில்லுடி நில்லு...”” என்று வலது கையால் விரிந்து இருந்த தன் கூந்தலை பிடித்துக்கொண்டு துரத்திக்கொண்டேப் போனவள், எதிரில் அஸ்வத் வரவும் சுதாரித்து நிற்க முடியாமல் தவறி அவன் மேல் இடித்து விழ போனாள். கிழேவிழாமல் இருக்க அஸ்வத் ஒரு கையால் அவளை பிடித்து மறுகையால் கதவை பிடித்து தாங்க ஒருவாறு இருவரும் விழாமல் நின்றனர். “சாரி சாரி” என்று பலமுறை கூறி அனு நகர முற்பட அவளது வளையல் மணிகள் அஸ்வத்தின் சட்டையில் மாட்டிக்கொண்டது. அச்சச்சோ மாட்டிக்கிச்சே என்று மனதில் நொந்துக்கொண்டு, விடாமல் வளையலை இழுத்துக்கொண்டு இருந்தாள்.

வகுப்பின் வாயிலில் இது நடக்க உள்ளிருந்து,

“வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது

குளு குளு தென்றல் காற்றும் வீசுது....” என்று பாடல் வரிகள் கோரசாக வந்தது.

உள்ளிருந்த மாணவர்கள் கிண்டல் செய்ய, என்ன செய்தாலும் எடுக்க முடியாமல் மணி மாட்டிக்கொண்டிருக்க வெறுப்பை வளையல் மீது காண்பித்தாள் அனு. அந்த குயில் குரல் பாடகர்களின் தலைவனே அருண் தான். அனுவின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அஸ்வத் அருணை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, “ஒரு நிமிஷம்” என்று மெதுவாக அவளிடம்  கூற, தன் போராட்டத்தில் நிறுத்தி கண்கள் உயர்த்தி பார்த்தாள் அனு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.