(Reading time: 26 - 51 minutes)

ர்ஜுனை முதலில் கண்ட அர்ச்சனா, “அஹல்யா நெக்ஸ்ட் டார்கெட் ரெடி” என்று சிரித்துக்கொண்டே கூறினாள்

“ஹ்ம்ம் கண்டுக்காதடி” என்று அலுத்துக்கொண்டாள்.

“அதெப்படி முடியும், அது நம்ம அர்ஜுன் ஆச்சே” என்று ரகசியமாக அவள் காதில் கூறிய அடுத்த வினாடியே அஹல்யாவின் கண்கள் அவனை தேடி கண்டுக்கொண்டது. அவனும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளுக்கு இதழோரம் மென்மையாக புன்முருவல் தோன்றியது.

முன்பே அவளது குரலில் சொக்கிப்போனவன் அவளது பார்வையிலும் மெல்லிய புன்னகையிலும் அவளிடம் வீழ்ந்தேவிட்டான்.

“அடிப்பாவி அவருக்கு மட்டும் advantage தரலாமா!” என்று ரகசியமா அவளை கிண்டல் செய்ய வெட்கத்தில் வார்த்தை வராமல் “போதும் வாடி” என்று காய்களை வாங்கி நகர்ந்தாள்.

அவளது பார்வையில் சொக்கிப்போனவன் பிரம்மை பிடித்தவன் போல் நிற்க “என்னடா யோசுச்சியா?” என்று ஹேமா கேட்டார்

““ம்ம்ம்ம் எதை பத்தி?”” என்று பாதி கனவில் இருந்து மீண்டு வந்தவன் கேட்க

“”கல்யாணத்தை பத்திதான்””

““ம்ம்ம்ம் யோசுச்சேன் யோசிச்சேன், செட் ஆகட்டும் சொல்றேன்”” என்று ரகசிய புன்முறுவலுடன் கூறினான்.

காய்களை சரிபார்த்துக்கொண்டு இருந்தவர் ““என்ன செட் ஆனதும்”” என்று புரியாமல் கேட்டார்.

““அது...அது.. மைன்ட் தான்மா.. மைன்ட் செட் ஆனதும் சொல்லுறேன்”” என்று ஏதோ கூறி சமாளித்தவன் தன் சிகையை கோதியவாறு முன்னேச் சென்றான்.  

ன்னதான் நாட்கள் வேகமாக சென்றாலும் ஒவ்வரு நாளும் யாராவது ஒருத்தருக்கு அது காதல் மலர் பூக்கும் நாளாகதான் இருக்கும், அதுபோல் அன்று அர்ஜுனின் காதல்ப்பூ பூத்தது.

கண் இமைக்கும் நொடியில் நாட்கள் நகர அனன்யாவின் பிறந்தநாளும் வந்தது. நாளைக்கு நம்ம பர்த்டே ஆச்சே எப்படி நம்மலே சொல்றது?! சரி நாளைக்கு சொல்லிக்கலாம் என்று எண்ணிக்கொண்டு செல்லை நோண்டிக்கொண்டு இருந்தாள் அனன்யா.

““ஹே என்னடி இப்படி உட்காந்திருக்க? நாளைக்கு என்ன நாள்னு நியாபகம் இருக்கா?”” என்று கேட்டுக்கொண்டே ரியா உள்ளே வர

இவள் என்ன நம்ம கேட்க வேண்டியதை கேட்குறாள் என்று கொஞ்சம் குழப்பத்துடன் “உனக்கு எப்படிடி தெரியும்?”

““எப்படி தெரியுமா? என்ன உளறுற நம்ம கிளாஸ்கே தெரியும்.””

““கிளாஸ்கேவா?! யாரு சொன்னது?”” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

““நம்ம லேகா மேடம்தான்”” என்று ரகசியமாக சிரித்துக்கொண்டே கூறினாள்.

லேகா மேடம்மா என்ன உளறுறாள்?! ““ஹே என்னடி சொல்லுற? எதை சொன்னாங்க?”” என்று விடை தெரியாமல் ரியாவிடம் கேட்டாள்.

““நல்லா கேட்டப்போ... நாளைக்கு தான் அவங்க ப்ரோக்ராம்ஸ் எழுதிட்டு வர சொன்னாங்க போகலைன்னா இன்னொன்னும் சேர்த்து தருவாங்க”” என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டு புத்தகத்தை எடுத்தாள்.

அவள் பேச்சில் எழுந்த ஆவல் எல்லாம் நொறுங்கிப்போக உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அவளும் புத்தகத்தை எடுத்தாள்.

““ஹே ரெண்டு பேரும் என்ன பண்ணுரிங்க?”” என்று ஹெட்செட்டில் பாடலை கேட்டவாறு வந்த பிருந்தா அவர்கள் ப்ரோக்ராம்ஸ் போடுவதைப் பார்த்துவிட்டு, “அடி பாவிங்களா நீங்க மட்டும் தனியா பண்ணுரிங்க?” என்று திட்டிக்கொண்டே அவளும் அமர, “நாங்க முடுச்சதும் தந்தால் எழுத உங்களுக்கு வசதியா இருக்குமேன்னு பார்த்தேன், சரிவா நீயும் யோசி” என்று பாவமாக பார்த்தவாறு தொடர்ந்தனர்.     

நாளைக்கு தன் பிறந்தநாள் என்று இவளிடமாவது சொல்லலாம் என்று உற்சாகமாக வாய் திறந்தாள் அனு, “ஹே ரியா உனக்கு நியாபகம் இருக்கா நாளைக்கு தீபா மேடம் கிளாஸ் இருக்கு போனதடவையே மாட்டவேண்டியது தப்புச்சாச்சு நாளைக்கு கண்டிப்பா என்கிட்ட கேள்வி கேப்பாங்க, மறக்காம போன கிளாஸ்ல என்ன நடத்தினாங்கன்னு சொல்லுடி” என்று ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தாள்.

இம்முறை வாய்ப்பை இழக்க இன்னொரு முறை சொல்வதற்காக அனு வாய்திறக்க ஆர்த்தி வந்து சேர்ந்தாள்.

““ஹே என்னப்பா பண்றிங்க? ஓஹோ ப்ரோக்ராமா பண்ணுங்க பண்ணுங்க எழுதி முடுச்சதும் நோட்டை என் ரூம்க்கு வந்துதா ரியா சரியா?”” என்று நொறுக்கு தீனியை காலி செய்துக்கொண்டே கூறினாள்.

““பார்த்தியா?! நீ எப்படி ரியாக்ட் பண்ணின அவள் எப்படி ரியாக்ட் பண்றாள்னு, விட்டால் எழுதியும் தர சொல்லுவாள், போடி பூசணிக்கா”” என்று பிருந்தாவிடம் ஆர்த்தியை கிண்டல் செய்தாள்.

““யாரு நானா நீதான்?”” என்று பேச்சு ஆரம்பித்து அடுத்த நொடி அவர்கள் இருவரும் தலையணை போர் துவங்கினர், வாய் இருந்தாள் கத்தி ஊரை கூட்டும் அளவிற்கு அந்த தலையணைகளை பெரும்பாடுப் படுத்திக்கொண்டு இருந்தனர் இருவரும்... இரு தலையணையும் போராடிக்கொண்டு இருக்க பிருந்தா அவர்களது சண்டையை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தாள், இவையனைத்தையும் வயிறு வலிக்க சிரித்தவாறு பார்த்துக்கொண்டு இருந்தாள் அனு.

விசில் சத்தம் கேட்டு இருவரும் போரை நிறுத்த அங்கு தியா வந்தாள், ““போதும் போதும் உங்க சண்டை வாங்க சாப்பிட போகலாம்”” பொறுப்பாக பொறுப்பான வேலைக்கு அழைத்து சென்றாள்.

ருவழியாக உணவு உண்டு பேசி சிரித்து உணவு செரித்து எல்லா வேலைகளையும் முடித்து பேச அமர்ந்தாள் அனு, ஆனால் ஒவ்வொருத்தராக ஆரம்பித்தனர்.. “ஹே எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” என்று முதலில் கழண்டது ஆர்த்தி அதை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.

““ஹே என்னப்பா மணி 10 தான் ஆகுது புதுசா என்ன அதுக்குள்ள தூங்க போறீங்க”” என்று அழுத்துக்கொண்டாள் அனு.

எல்லாரும் ஏதோ ஒரு காரணம் சொல்லிப் படுக்க, அனுவிற்கு தூக்கமே வரவில்லை ச்சே இன்னிக்குனு பார்த்தா எல்லாரும் சீக்கரம் தூங்க போகணும் இப்போ காலைல தான் சொல்ல முடியும். தன் பிறந்தநாள் இவ்வாறு வெறுமையாக கடக்க போகிறதே என்று எண்ணிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தவளுக்கு தூக்கம் தழுவத்துவங்கியது..

“டொப்ப்....” என்று காதருகே ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு பதறி எழுந்தாள் அனு...அவள் எழுந்து அமர

“ஹாப்பி பர்த்டே டு யூ...

ஹாப்பி பர்த்டே டு யூ...

ஹாப்பி பர்த்டே டு அனு....”

என்று பாடியவாறு கையில் அழகான கேக் ஏந்தி நின்றுக்கொண்டு இருந்தனர் அனுவின் தோழிகள். இந்த இன்ப அதிர்ச்சியை எதிர் பார்க்காதவள் ஆச்சர்யத்தில் வாயை கைகளால் மூடி திருதிருவென முழித்தாள்.

““ஹே முளுச்சது போதும்டி மெழுகுவத்தியை ஊது”” என்று சிரித்துக்கொண்டே அபிக்கூர அப்போதுதான் கையில் ஏதோ சொரசொரப்பாக இருப்பதையே உணர்ந்தாள்.. கைகளில் இருக்கும் மெஹந்தியை பார்த்தவளுக்கு மேலும் ஆச்சர்யமாக இருந்தது.

“”என்னடி பிடுச்சுருக்கா? மாதவி தான் போட்டுவிட்டாள்”” என்று ஸ்வாரா கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.