(Reading time: 26 - 51 minutes)

கல்யா, பி.காம் படிக்குராங்கனு சொன்னாங்க” என்று பொறுமையாக பதில் அளித்தான் அர்ஜுன்.

அஹல் எனக்கு தெரிஞ்சு பி.காம் 2nd இயர்ல அகல்யானு ஒரு பொண்ணுதான் இருக்காள் அவளாகத்தான் இருக்கணும் என்று அர்ச்சனா கூறினாள். பி.காம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை கம்மியாக இருந்தமையால் அவர்களுக்கு கண்டுபிடிக்க எளிதாக இருந்தது.

அவள் கூறியதை கேட்ட அஹல்யா “அப்போ அவளை கூப்பிடலாம்வா” என்று கூறிக்கொண்டே திரும்ப வாயிலின் இன்னொரு இடத்தில் அந்த அகல்யா யாருக்காகவோ காத்திருப்பதுத் தெரிந்தது.

“அகல்யா இங்கவா” என்று அர்ச்சனா அழைக்க விறுவிறுவென வந்தாள், “நீங்க தேடுற அகல்யா இவள்தான்” என்று கைக்கட்டினாள் அஹல்யா

இந்த முறை சுதாரித்தவன், “உங்க அம்மா பேரு ராகவியா?” என்று கேட்க அந்த பெண் ஆம் என்று யோசனையாக தலையாட்டினாள். “நான் உங்க பக்கத்துவீட்ல தான் இருக்கேன் அர்ஜுன்” என்று கூறி சாப்பாட்டை நீட்டினான். அவன் என்ன கூறினாலும் கண்டுக்கொண்டதை போல் தெரியாமல் போக “அனுவோட அண்ணன்மா” என்ற கூறியவுடன் தான் அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பே வந்தது.

““ஓஹோ நீங்கதான் சென்னைல வேலை செய்யுறதா, சாரி அண்ணா நான் உங்களை பார்த்தது இல்லையா அதான் கொஞ்சம் குழம்பிட்டேன். நீங்க வருவீங்கனு தெரியாது, அதான் அங்க நின்னு தேடிக்கிட்டு இருந்தேன்”” என்று தன்னிலை விளக்கம் தந்து இடத்தை காலி செய்தாள்.  

அவன் வண்டியை எடுத்து கிளம்ப முற்பட முன்பு இருந்த அதே போஸில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள் அர்ச்சனா, “என்னங்க நீங்க கிளம்புற ஐடியால இல்லையா” என்று கேட்டான்

““இல்லை... நிஜமாவே நீங்க இந்த வேலையாக தான் வந்தீங்களா இல்லை நின்னு சைட் அடிப்பிங்கலானு பார்க்கத்தான் நிக்குறேன்”” என்று நக்கலாக பதில் அளித்தாள் அர்ச்சனா.

இம்முறை குரலை உயர்த்தாமல், “இப்படி லூசு மாதிரி பேசாமல் உங்க ப்ரிண்ட் மாதிரி தெளிவா பேசக்கத்துக்கோங்க” என்று சிரித்தவாறே கூறிச் சென்றான் அர்ஜுன்.

அவன் கூறியதில் அர்ச்சனாவிற்கு கோவம் வர அஹல்யா சிரித்தாள். “என்னடி சிரிப்பு? என்னை கிண்டல்ப் பண்ணா சிரிப்பா இருக்கா உனக்கு?” பொய் கோவத்தோடு கூறினாள்.

““நீ அவரை சைட் அடிக்க வந்திங்கன்னு கிண்டல் பண்ண பதிலுக்கு அவரு உன்னை லூசுன்னு சொன்னாரு சரியா போச்சு இதை எதுக்கு பெருசாக்குற விடு”” என்று பொறுமையாக கூறினாள் அஹல்யா.

“பாருடா இவ்ளோ சப்போர்ட் பண்ற, முதல் பார்வைலேயே விழுந்துட்டியா?” என்று அர்ச்சனா கிண்டல் செய்ய ஆம் என்று மனம் கூறினாலும் “அதெல்லாம் இல்லை உண்மையை சொன்னேன் வா போகலாம்” என்று அவளை கல்லூரிக்குள் அழைத்து சென்றாள் அஹல்யா.

நேரில் பார்த்தப்பொழுது ஏற்படாத ஈர்ப்பு தள்ளிவந்ததும் அர்ஜுனுக்குத் தோன்றியது, என்ன அழகான குரல், என்னதான் அவள் உருவம் மனதில் இருந்தாலும் அவனை கவர்ந்தது என்னவோ அவளது குரல்தான்... அஹல்யாவின் குரலில் மலர்களின் மேல் ஓசை எழுப்பாமல் அமரும் வண்ணத்துபூச்சியை போல் மிக மென்மையாக உணர்ந்தான். மீண்டும் அவளை பார்க்கும் ஆவல் எழ, இதுபோல் ஒரு பெண்ணிற்காக தான் இப்படி ஏங்கியது இல்லையே, இது என்ன உணர்வு என்றும் மனம் குலம்பிபோனது. அவனை மேலும் குழப்பாமல் உணர்வை உறுதி செய்ய மறுநாளே ஒரு வாய்ப்பும் வந்தது.

““அர்ஜுன் வாடா சந்தைக்கு போயிட்டு வரலாம், காய் வாங்கிட்டு உடனே வந்துடலாம்”” என்று தன் கெஞ்சிய குரலிலேயே மகனை கிளப்பிக்கொண்டு இருந்தார் ஹேமா.

““இப்படி கெஞ்சியே என்னை கிளப்புங்கம்மா... ஏன் அப்பாவ கூட்டிட்டு போகலாம்ல”” என்று அலுத்துக்கொண்டேக் கூறினான்.

““யாரு உங்க அப்பாவா கிளம்பிட்டுதான் மறுவேலை ஏன்டா நீ வேற!, வா போகலாம்”” என்று பேசிக்கொண்டே இருவரும் சந்தையை அடைந்தனர்.

““அர்ஜுன் பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்கோயேன்”” என்று காய்களை பார்த்தவாறே ஹேமா கேட்டார்.

கல்யாணம் என்றதும் அஹல்யாவின் முகம் மனதில் வந்து போக, அவளது நினைவு ஏன் வரவேண்டும் என்று குழம்பினாலும் சில நொடிகளில் சமாளித்து “ஏம்மா திடிர்னு?” என்று கேட்டான்.

““எனக்கும் சமைச்சு சமைச்சு அலுத்துபோச்சு மருமகள் வந்தா எனக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும்ல, பேச்சுத்தொனைக்கும் ஆளு கிடைக்கும், அப்பறம் இப்படி உன்னை கூட்டிகிட்டு சந்தைக்கு வர தேவையில்லை நானும் என் மருமகளும் வருவோம்ல”” என்று அவர் தன் மனதில் பட்டதை கூறினார்.

““அது சரி நீங்க ஜோடி போட்டு சுத்துரதுக்காகலாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா அம்மா””. கிண்டலாக கேட்டான்.

““அம்மாக்காக கொஞ்சம் யோசிச்சு சொல்லுடா...”” என்று அவர் கொஞ்சுவது போல் கேட்டபின்பு தான் அவர் என்னதான் வெகுளித்தனமாக காரணங்கள் கூறினாலும் கல்யாண பேச்சை அவர் விளையாட்டாக எடுக்கவில்லை என்று தோன்றியது. .

““ம்ம்ம்ம், யோசிச்சு சொல்லுறேன்....”” என்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் போஸ் கொடுத்தான். சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவன் கண்கள் ஒரு வினாடி பளிச்சிட்டது.

““ஹே அஹல்யா, உன்னை ஒருவன் உத்து உத்து பார்க்குராண்டி”” என்று அர்ச்சனா அவள் காதில் ஓதினாள்.

““அவனை ஏன் நீ பார்க்குற கண்டுக்காத, நீ பார்த்தாள் தான் அவனுக்கு advantage கொடுக்குற மாதிரி இருக்கும்”” என்று கண்களை மேல் எழுப்பாமல் நிதானமாக காய்களை வாங்கியவாறு கூறினாள்.

““இதை கொஞ்சம் எடை போடுங்க”” என்று எடுத்த காய்களை கடைகாரரிடம் நீட்ட அவளை உத்து பார்த்துக்கொண்டு இருந்தவன், அவள் அருகில் உரசியவாறு நின்றான்.

அவனது செயலில் அணிட்சையாக தோன்ற அவனை ஒரு முறை முறைத்துவிட்டு நகர்ந்து நின்றாள். அவள் நகர்ந்து சென்றும் மீண்டும் அவன் அவளது அருகில் வந்தான், இம்முறை இதை கவனித்துக்கொண்டு இருந்த அர்ஜுனுக்கு கோவம் வந்தது, அஹல்யா நிற்கும் பக்கத்துக்கு கடைக்கு நகர அவன் முற்பட அங்கு நடப்பவையை கண்டு நின்றான்...

““அய்யோ அம்மா...”” என்று சில்மிஷம் செய்தவன் கால்களை பிடித்துக்கொண்டு கத்தினான்.

““ஏம்மா கீழ பார்க்க கூடாதா?”” என்று அவன் அஹல்யாவிடம் வாக்குவாதத்திற்கு வர பதிலுக்கு அவள் தந்த முறைபிலேயே இடத்தை காலிச் செய்தான். அவன் தான் எச்சரிக்கை செய்தும் தன்னிடம் நெருங்கி வர அஹல்யாவிற்கும் அர்ச்சனாவிற்கும் கோவமாக வந்தது, அர்ச்சனா சண்டை போட முன்வர அவளது கைகளை மெல்ல அழுத்திவிட்டு “அண்ணா அந்த பாத்திரத்தை கொஞ்சம் எடுங்களேன்” என்று நகர்வதுபோல் தான் அணிந்து இருந்த ஹீல்ஸ் மூலம் நன்றாக அவனது காலை நசுக்கினாள் அஹல்யா...

இதை கவனித்த அர்ஜுனுக்கு ஆச்சர்யமாக இருந்தது புத்திசாலிதான் என்று மனதில் மெட்சிக்கொண்டான். அவளது செயல் அவளை இன்னும் அழகேற்றி காட்ட நின்ற இடத்திலேயே சொக்கி போனான் அர்ஜுன்.

“எப்படி அஹல்யா இவ்வளவு பலசாலியான?” என்று கொஞ்சம் கிண்டல் ஆனாலும் ஆர்வமாக  கேட்டாள்

“பலசாலியா? என்ன கிண்டலா? இதுக்கு பலம் வேண்டாம் தைரியம் இருந்தால் போதும் ஒருத்தன் உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணால் நீ அவனுக்கு நான் நீ நினைக்குற மாதிரி soft target இல்லை hard targetனு செய்துக்காட்டு அது போதும்”.

“ என்னென்னம்மோ சொல்லுற எனக்கு ஒண்ணுமே புரியலை எங்க இதை எல்லாம் கத்துக்கிட்ட அஹல்?” என்று ஆர்வமாக கேட்டாள்.

அவளது தலையில் லேசாக கொட்டி, “இதற்கு தான் எப்போப்பார் டிவியில பாட்டு மட்டும் கேட்கக்கூடாது இந்த மாதிரி நிகழ்ச்சியும் பார்க்கணும். இன்னும் நிறையா இருக்கு ஒருத்தரை தாக்குறதுக்கு நீ பலசாலியா கராத்தே காத்திருக்கணும் இல்லை, கண் கழுத்து முட்டி இந்த மாதிரி மென்மையான உருப்புல தாக்கினாலே தப்பிச்சுடலாம்” என்று பொறுப்பாக தான் கற்றுக்கொண்டதை தன் தோழிக்கு சொல்லிக்கொண்டு இருந்தாள்.. அவள் கூர்வதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனாவின் கண்களில் அர்ஜுன் தென்ப்பட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.