Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 13 - 25 minutes)
1 1 1 1 1 Rating 4.47 (17 Votes)
எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23 - 4.5 out of 5 based on 17 votes

23. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

மொட்டை மாடி குட்டி சுவரில் தாவி ஏறி உட்கார்ந்த சந்தியா, “ருக்குமணின்னா என்னன்னு கேட்ட தானே? அது கல்யாணமான முதல் ராத்திரி….அதுக்கு சிட்டிவேஷன் சாங் தான் ருக்குமணி ருக்குமணி...”  என்றாள் மதுவிடம்  விளக்கமாக.

“ இவங்க பூமாக்கா பர்ஸ்ட் நைட்க்கு இந்த ஜந்து  என்ன செய்தா  தெரியுமா?”, கேட்டாள் சக்தி.

“நான் என்னடி செய்தேன். அவ தான் வந்து எங்க பர்ஸ்ட் நைட்டை மறக்கவே  முடியாத படி ரூமை செட் பண்ணி வைன்னு சொன்னா. அதான் நானும் வசூல் ராஜாவும்  சேர்ந்து இந்த ஐடியா ப்ளான்  பண்ணோம்.”, சந்தியா.

“அதானே அந்த வசூல் ராஜா கல்யாண மண்டபத்திலே ஒரு பொண்ணு விடாம கடலையை போட்டுக்கிட்டு இருந்தானே..உன்னை மட்டும் விட்டு வைப்பானா? மது, இதுங்க ரெண்டும் பூமாக்கு செய்த அநியாத்தை கேட்டா ரத்த கண்ணீர் வடிப்ப. அந்த பர்ஸ்ட் நைட் ரூம்மை டேகரெட் பண்றேன்னு சொல்லிட்டு, பெட்டிக்குள் பெட்டிக்குள் பெட்டிக்குள்ளன்னு …... கடிகாரத்தை போட்டு, ஒன்னா இரண்டா… இதே மாதிரி ஐந்து பெட்டி ரெடி பண்ணாங்க. அதோடு விட்டாங்களா ….. அதை டைம் பாம் மாதிரி அங்கங்க ஒளிச்சு வைத்துட்டாங்க. ராத்திரி 12 மணிக்கு ஒரு கடிகாரம் அடிச்சதா, அந்த சத்தம் கேட்டு அங்க இங்க தேடி ஒரு வழியா பெட்டிக்குள்ள பெட்டிக்குள்ள…..போட்ட கடிகாரத்தை கண்டுபிடிச்சு எடுத்து ஆப் பண்ணிட்டு அப்பாடான்னு அவங்க டியூட்டியை “ சொல்லும் போதே சந்தியாவை பார்த்து கண்ணடித்து, “டியூட்டியை ஆரம்பிக்கலாம்ன்னு பாத்தா….அடுத்த கடிகாரம் அடிச்சது….மறுபடியும் தேடு….இப்படியே தேடி தேடி….ஐந்து கடிகாரத்தையும் ஆப் பண்றதுக்குள்ள விடிந்து ….அவங்க பர்ஸ்ட் நைட்டே காலி”  என்றாள் சக்தி.

“ரூமை விட்டு வெளிய வந்ததும் என்னை பூமா பின்னி பெடலை எடுத்திட்டா. நொந்து நூடுல்ஸ் ஆன மாமா உனக்கும் கல்யாணம் ஆகும்ல அப்போ பாத்துக்குறேன்னு சவால் விட்டு போனாங்க. நல்ல வேளைக்கு மாமா தப்பா எடுக்கலை. அவர் எடுக்க மாட்டர்ன்னு இந்த வசூல் ராஜா சொன்னதுன்னால தான் இந்த வேலை பாத்தோம்.” என்று சொல்லி சிரித்தாள் சந்தியா.

“ஓ…இந்தளவுக்கு வேலை பாத்து வைச்சிருக்கியா?” , வியப்பாய் கேட்டு புருவத்தை உயர்த்தினாள் மது.

“என்ன ஓ…?? பர்ஸ்ட் நைட்க்கு ஓஓஓகோ போடணும்” என்றாள் சந்தியா.

“ஆனா என் பர்ஸ்ட் நைட்க்கு ஒஹ..ஹகோ பாடாதடி ப்ளீஸ்” கெஞ்சினாள் சக்தி.

“நீயேன்டி பயப்படுற...உங்களுக்கு பலத்த பாதுகாப்பு இருக்கே ?? எனக்கு போய் பயந்தா எப்படி?? “, என்றாள் சந்தியா ஏளன புன்னகையுடன்.

ந்த நேரம் மதுவின் போனிற்கு அழைப்பு வர, “காதியா தான் இருக்கும்” என சொல்லிக் கொண்டே மது  கைப்பைக்குள் இருந்த போனை எடுக்க படிகளில் இறங்கி வந்தாள். அவள் சொல்வதை கேட்டவுடன் சந்தியாவின் முகம் வாடுவதை கவனித்த சக்தி,

“உன்னை நினைச்சேன்...பாட்டு படிச்சேன் ...தங்கமே ஞானத் தங்கமே

என்னை நினைச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே”

“உன்னை நினைச்சேன்…” அழுவது போல பாவனையுடன், “நானும் “ என்று பாடத்துவங்கி முடியாமல் கேவலுடன் அழுவது போல நடித்துக் காட்ட,

“ப்ச்.. வாயை மூடு சக்கு” எரிந்து விழுந்தாள் சந்தியா.

“ஜந்துக்கு வெ. மா. சூ. சு. வெல்லாம் இருக்குதா! சகுனி உன்கிட்ட பேசாம மதுகிட்ட பேசுறான்னு கோபமா வள்ளிக்கண்ணுக்கு?”, சக்தி அவன் வைத்த செல்லப் பெயரை அழைத்தவுடன் அவளுக்குள் இனம்புரியாத தவிப்பு வந்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. அவன் யார்கிட்ட பேசுனா எனக்கு என்ன? அதான் சாரி சொல்லி  எல்லாத்தையும் தலை முழுகிட்டானே” கவனமாக உணர்ச்சிகளை துடைத்து விட்டு சொன்னாள்.

“என்னடி சொல்ற? சும்மா இருந்த உன்னை பின்ன எதுக்கு விரட்டி விரட்டி வந்தாராம்? ”, கோபமாக கேட்டாள்.

“நான் பேசப்போய் தான வந்தான். சும்மா அவன் மேல  கோபப்படாத சக்கு.”, இப்போது சக்தியை திட்டினாள்.

“எப்ப்ப்பாடி ஜந்து, என்னம்மா பல்டி அடிக்கிற. உலகம் தாங்காது.” என்று அங்கலாய்த்தவள், அப்போதும் உணர்ச்சியற்ற முகமாய் இருந்த சந்தியாவை பார்க்க பாவமாய் தோன்ற, “என்னை ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்டிங்கிற? நெஞ்சு நிறைய காதலை வைச்சுக்கிட்டு அவன்கிட்ட பேச வேண்டியது தான? நான் வேணா உன் சார்ப்பா பேசட்டா” கரிசனத்துடன் கேட்டாள் சக்தி.

“ப்ச்...காதல்ன்னு நீயா ஏதாவது கற்பனை பண்ணி உளறாத “, அழுத்தமாக சொல்லி சக்தியின் வாயை அடைக்கப்  பார்த்தாள்.

அந்த நேரம் மது போனையும் கணினியையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள். அவள் கண்களில் அத்தனை ஆர்வம்.

“ஹே நிருக்கு தமிழ் கிளாஸ். பாக்க வர்றீங்களா? இன்னும் அஞ்சு நிமிஷத்தில ஸ்கைப்ல வருவான்” சொல்லிக் கொண்டே கணினியை உயிர்ப்பிக்க,

சக்தி நிரஞ்சனை பற்றி சந்தியாவிடம் விசாரித்தாள்.

“சந்தியா, உனக்கு தெரியுமா நிருக்கு ஒரு தமிழ்  கேர்ல் ப்ரண்ட் இருக்காங்க.  அவங்களை ப்ரபோஸ் பண்றதுக்காகவே அவன் தமிழ் படிக்கிறான். அந்த பொண்ணு ரியலி லக்கி தான்”, என்றாள் மது.

“ஏன் லக்கின்னு சொல்ற?”, கேட்டாள் சந்தியா.

“நிரு பேசுற தமிழ் கேட்டு அந்த பொண்ணு சிரிச்சுகிட்டே ஹேப்பியா இருக்கும் தானே”, மது

“எனக்கு என்னமோ அந்த பொண்ணு லக்கின்னு தோணலை. “, சந்தியா .

“ஏன்?”, கேட்டாள் மது.

“சிரிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதும் நீ சொல்ற…. அந்த பொண்ணு சொல்லணுமே. எனக்கு என்னமோ அது நிருவுக்கு நோன்னு சொல்லிடும்ன்னு தோணுது.“, அலுத்துக் கொண்டாள் சந்தியா.

அவள் சொன்னவுடன் மது அவனுக்காக பரிந்து, “அதெல்லாம் இல்லை. நிருவை எந்த பொண்ணுக்காவது பிடிக்காம இருக்குமா? நிருக்கு மட்டும் நோ சொன்னா நானே அந்த ஜீராவை  நானே நாலு சாத்து சாத்துவேன் ”, முடிக்கும் போது மிரட்டலாக முடித்தாள்.

“என்னது ஜீராவா?” புரியாமல் கேட்டாள் சக்தி.

“ஆமா, ஜீரா தான்  நிருவோட கேர்ல் ப்ர்ண்ட் “, மது.

“உனக்கு இதை யார் சொன்னா?”, மதுவிடம் விசாரித்தாள் சந்தியா.

“காதி”, சொன்னாள் மது .

“உங்க காதி உனக்கு ஜீரான்னு சொன்னாரா?”, இரு பொருள் பட கேட்டாள் சந்தியா. “உனக்கு ஜீராவென பேர் வைத்தானா” என குறிப்பு காட்டி பேசியதை சந்தியா எதிர்பார்த்த படியே மது உணராமல்,

“ஆமா...ஏன் கேக்குற”, மது

“நான் நிருக்கு ரசகுல்லா ன்னு பேரு வைச்சேன். ஜீரா ன்னா பேர் பொருத்தம் பிரமாதமா இருக்கே அதான்”, சந்தியா.

“ஜீரா வா? இப்படி ஒரு பேரா”, விவரம் தெரியாத சக்தி வியப்பு காட்டினாள். சந்தியா குறும்பு புன்னகையுடன்  மது அறியாவண்ணம் சக்தியை பார்த்து கண்ணடித்தாள். அதிமேதாவி சக்தி அவள் குறிப்பை உணர்ந்து,

“என்னடி கண்ணடிச்சு சிக்னல் காட்டுற? ஜீரான்னா  யாருக்காவது கோட் வேர்ட்டா ?” , ரகசியத்தை மது முன்னாலே கேட்டாள் சக்தி.

தான் தான் ஜீரா என அறியாமல் யார் என தெரிந்து கொள்ள  ஆர்வமாய் சந்தியாவை ஆர்வமாய் பார்த்தாள் மது.

கடுப்பான சந்தியா “சக்கு மக்கு”, பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

“ஏதாவது சீக்ரெட்னா இப்படி தான சிக்னல் காமிப்ப? இப்போ எதுக்கு திட்டுற?” அப்பாவியாய்  வினவினாள் சக்தி.

“கண்ணுல தூசி விழுந்தாலும் கண்ணடிப்பாங்க. மனுசன் ஒரு நிமிசத்துக்கு பத்து தடவையாவது  கண் சிமிட்டுவான் பேக்ட்டுடி  பேக்ட். புரிஞ்ச்சுக்கோ. சக்கு மக்கு ”,அருகிலிருந்த சக்தியின் தலையில் அடிக்காத குறையாக  சொல்லி  சமாளித்தவள் மதுவிடம் திரும்பி,

“ஏன் மது நிரு காதி காலேஜ் பிரண்ட்ன்னா உன்னை விட வயசு கூட தான? வா போன்னு  கூப்பிடுற?”, கேட்டாள் சக்தி.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Usha A (Sharmi)

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Nanthini 2014-02-07 20:38
Very interesting Usha :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23shreesha 2014-02-07 00:18
hey waiting for next episode...... when will u update it???? quickkkkk.....
Reply | Reply with quote | Quote
# Reshalli 2014-02-04 16:19
Good story. However, I feel that there are unnecessary parts such as song lyrics and over description of casual dialogs makes the story quite boring. Pls give some importance to story content rather continuos dialogs. Thanks!
Reply | Reply with quote | Quote
# RE: Reusha A 2014-02-05 01:51
Thank you Shalli.... இது கன்னி முயற்சி அதனால் மன்னித்து விட்டு விடுங்கள்... ;-) இந்த கதையே நாடக பாணியில் வசனங்கள் வைத்து தான் நகல்கிறது.... இனி வரும் தொடர்களில் நீள வசனங்களை தவிர்க்க பார்க்கிறேன்....

பாடல் வரிகள் அந்த சூழ்நிலைக்கு பொருந்துவது போல் இருப்பதால் முழுவதுமாக கொடுக்க வேண்டியுள்ளது....
(அதை ஸ்கிப் செய்து படித்து கொள்வதற்கு வசதியாக தான் போல்ட் எழுத்துக்களில் தனி பத்தியாக கொடுத்துள்ளேன்.... )
Reply | Reply with quote | Quote
+1 # RE: ReNanthini 2014-02-10 04:50
Hi Usha, Just out of curiosity, Ithu unga first story-a? Really amazing! Nenga niraiya kathai ezhuthi irukkingannu yeno nane manathil mudiVu seithu vachirunthen. Great! GTK!
Reply | Reply with quote | Quote
+1 # RE: Reusha amar 2014-03-03 02:48
Vino... I am sorry... I missed you comment BTW.... Sorrry.... I am not sure will you see this or not... But THANKS A LOT... yenakkulla sleeping singathai yezuppi vittathu namma chillzee thaan and especially MUV series thaan... Atharkku naan thaan thanks sollanum.. ;)
Reply | Reply with quote | Quote
+1 # RE: ReNanthini 2014-03-08 09:29
Ha ha ha... singathai thatti ezhupiyathu ellam sari anal reason-i matum change seithidunga :)

Chumave sila per komboda suthuraanga :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Bala 2014-02-04 01:54
fantastic update mam.. songs ellam super... :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-02-05 01:52
நன்றி பாலா (மேடம்!)
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Harshi 2014-02-01 22:03
super update mam..niru romba paavam...madhu is so sweet..karthik-Sandhya conversation super.. :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-02-05 01:53
Thank you Harshitha
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Meena andrews 2014-02-01 08:41
Nice update. karthick-sandhya pesura scenes super. anda hindi song super.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-02-05 01:53
Thank you Meena Andrews
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23shreesha 2014-01-31 23:07
super usha..... thanks for lengthy update.... dialogues and songs allam super pa.... waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-02-01 00:02
Thank you Shreesha
Reply | Reply with quote | Quote
+4 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Aayu 2014-01-31 20:29
super Usha, pesaama neenga cinema kku kadha eluthalaam. ELLAME super. " Manirathnam paathi Goutham menan paathi kalanthu seitha kalavai neenga , veliye Sundher.C Ulle Crazy Mohan vilanga mudiyaa kavithai neenga........................... " Unna ninaichchu paakkum pothu kavidha manasula aruvi maathiri kottuthu, Aanaa....... atha eluthanumnu (computer munnaala) ukkaanthaa antha....... eluththuthaa..... Vartha ........... " ABIRAAMI ...........ABIRAAMI........... sry sry USHA ..........USHA..............
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-02-01 00:01
haa...haa...lol... ungalukku nalla sense of humor....thanks!
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Aayu 2014-02-02 10:06
En Guruve neengathaanga
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23vathsu 2014-01-31 16:58
super.............
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 19:22
nandri Vathsu...
Reply | Reply with quote | Quote
+2 # YPMIPreethi 2014-01-31 16:21
what a story usha.....???? wowwww no words to explain.. skype chat indirecta pesurathu phone conversation yellame super romba romba super. adhuvum karthick paadura paattu yellam cha chancelessnga.... neraya sollitte pogalam usha. rendu loveyume neenga equala kondu poringa adhu yenakku romba puduchuruku. sandhya inspiring characterna, madhu sweet cute character... really superb :):D
Reply | Reply with quote | Quote
# RE: YPMIusha A 2014-01-31 19:23
ப்ரீத்தி.....உங்களிடம் இருந்து வரும் இந்த பாராட்டு மிகவும் மன்மகிழ்ச்சியாய் இருக்கிறது...மிக்க நன்றி...
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23selvarani 2014-01-31 15:31
Super ah irundathu inda episode thanks for the lengthy update...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 19:24
நன்றி செல்வராணி....
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Nithya Nathan 2014-01-31 13:37
Super update. storylavara ovvoru linesum songsum supera iruku. Hindi song athukkana Arththam ellame kalakkal.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 19:26
ஒவ்வொரு வரியும்...பாடல்களையும் ரசித்தேன் என்பதில் மகிழ்ச்சி....
Reply | Reply with quote | Quote
+1 # eppa pei mathiri irukkaREVINA.R 2014-01-31 12:51
hi usha very nice
Reply | Reply with quote | Quote
# RE: eppa pei mathiri irukkausha A 2014-01-31 19:26
மிக்க நன்றி....ரவினா...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23hills7 2014-01-31 12:04
அவள் மவுனம் அவனை வதைக்க, “யு தேர் சந்தியா??”
“ம்ம்”, சொல்லும் போதே அவளை அறியாமல் கண் கலங்கினாள். தவிப்பை மறைப்பது எளிதல்லவே!
அந்த “ம்ம்…” மே அவள் ஏதோ அசௌகரியமாய் உணர்வதை தெரிவிக்க மேலும் அவளிடம் அதைப் பற்றி பேசாமல், “ஹே...காலேஜ்ல இந்த பாட்டை நான் பாடினா கண்டிப்பா எல்லாரும் ஒன்ஸ் மோர் கேப்பாங்க...அந்த அளவுக்கு என் வாய்ஸ்க்கு கரக்ட்டா செட் ஆகும். ஹிந்தி பாட்டு. கேக்குறியா?” கனிவாக கேட்டான்.
“ம்ம்ம்” , என்ற பதில் தான் இதற்கும். ஆனால் இந்த “ம்ம்ம்" மை உதிர்த்த வேகம் அவள் ஆர்வத்தை அவனுக்கு காட்ட, பூரித்தான்.
“முதல்ல இந்த பாட்டுக்கு அர்த்தத்தை சொல்லிடுறேன்…”
“இந்த பெண்ணை பார்த்த பொழுது அவள் எப்படி இருந்தா தெரியுமா…
மலரும் ரோஜாப்பூ போல…
கவிஞனின் கனவு போல….
பிரகாசமான ஒளிக்கீற்றை போல…
காட்டில் ஓடும் மான் போல…
நிலாக்காயும் இரவு போல…
இதமான வார்த்தை போல…
கோவிலில் எரியும் தீபத்தை போல….” என்று சொல்லிவிட்டு,
“கண்களை மூடியவன் கண் முன், முதன் முதலில் பார்த்த சந்தியா தோன்ற ,
“ஏக்கு லடுக்கி கோ தேகா தோ ஏசே லகா…” என்ற பாடலை உணர்ச்சிப்பூர்வமாக பாடினான். இசையை ரசிக்க மொழி தெரிய வேண்டிய கட்டாயம் இல்லையே! அவள் உருகி விட்டாள்..அவளை நினைத்து பாடுகிறான் என அவள் அறிந்ததே!
பாடி முடித்த பின்னும் அவள் நினைவில் மிதந்தான். எத்தனை நிமிடங்கள் அமைதியாக கழிந்ததோ! இயல்பு நிலைக்கு திரும்பிய சந்தியா, “ஒன்ஸ் மோர் கார்த்திக்” கொஞ்சலாக கெஞ்சினாள். Nice
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 19:27
உங்களுக்கு பிடித்த வரிகளை கோட் செய்ததற்கு நன்றி....ஹில்ஸ் 7
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23hills7 2014-01-31 11:57
Nice update friend
Reply | Reply with quote | Quote
+2 # YPMIIndu 2014-01-31 11:15
Very Nice update Usha....Thanks for giving lenghty update :)
Keep rocking
Reply | Reply with quote | Quote
# RE: YPMIusha A 2014-01-31 19:29
நன்றி இந்து...இதே போல பெரிய அப்டேட்கள் கொடுக்க முயற்சிக்கிறேன்....
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Keerthana selvadurai 2014-01-31 10:31
Usha mam supera poitruk ku... :) next friday varaikum wait pannanumanu :sad: All lines and songs are fantastic....
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-02-01 00:00
Thank you So much Keerthana Selvadurai!
Reply | Reply with quote | Quote
+3 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Aayu 2014-01-31 08:19
Yeh pulla Usha , Arumayaa irukku ley, karthik paadura songs semaya irukku ley. Storya seekramaa mudichchiraatheenga please.......
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 23:58
nandri Aayu pulla ;)
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Chandrubaa 2014-01-31 03:13
Very nice update,
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 23:58
Thank you Chandrubaa
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Admin 2014-01-31 02:35
Nice update Usha
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 23:57
Thank you Shanthi...
Reply | Reply with quote | Quote
+3 # EPMIJansi 2014-01-31 01:59
Hi Usha, too good episode. :)
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-01-31 23:57
Thank you so much Jansi!
Reply | Reply with quote | Quote
+5 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23Thenmozhi 2014-01-31 00:01
Very interesting and entertaining episode Usha :)

Thanks for the timely and lengthy update!
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 23usha A 2014-01-31 23:56
Thank you Aadhi...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Ithaya siraiyil aayul kaithi

Home care tips

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Announcements

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
08
KVJK

PVOVN

NiNi
09
MINN

PPPP

MAMN
10
PMNa

EMPM

MUN
11
EEU01

KaNe

KPY
12
TAEP

UVME

Enn
13
VVUK

NKU

Tha
14
KI

-

-


Mor

AN

Eve
15
KVJK

ST

NiNi
16
MMSV

PPPP

MAMN
17
GM

EMPM

MUN
18
ISAK

KaNe

KPY
19
-

Ame

-
20
VVUK

NKU

Tha
21
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top