(Reading time: 40 - 79 minutes)

து ஒரு பெரிய கதை. நிருவை அண்ணான்னு ஹிந்தியில கூப்பிட்டுகிட்டு இருந்தேன். ரக்ஷாபந்தன் அன்னைக்கு  விஷ் பண்ண அவன் காலேஜ் ஹாஸ்டலுக்கு கூப்பிட்டேனா  அன்னைக்கு நிரு அழுதுகிட்டு இருந்தான். “

“என்னன்னு பாத்தா நம்ம ஊரில வளைகாப்புக்கு வளையல் போடுற மாதிரி அவங்க காலேஜ்ல ஒரு பொண்ணு விடாம  அவன் கையே தெரியாத அளவுக்கு ராக்கி கெட்டி விட்டிருந்தாங்க”

“ப்ளீஸ் இனி என்னை பேரு சொல்லியே கூப்பிடு. ஐ டோன்ட் வான்ட் எனி மோர் சிஸ்டர்ஸ்…”

அப்படின்னு கெஞ்ச சரின்னு சொல்லிட்டேன்” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே  நிரஞ்சன் அழைக்க,

“ஹாய் நிரு.”

கும்பலாக மூன்று பேர் சொல்லவும் அவன் அரண்டு,

“இன்னிக்கு மூணு பேரு டீச் பண்ணுது. நான் செத்தது”,

“ஜந்து,  இவர் தமிழ் மேல இப்படி கொலைவெறியா இருக்காரு? ”, கேட்டாள் சக்தி.

“ஹாய் ரசகுல்லா. இது சக்தி. என் நண்பி. மது எங்க வீட்டில இன்னைக்கு ஸ்லீப் ஓவர்”, என்றாள் சந்தியா.

“ஓ...குட். குட். மது முகம் டையர்டா இருக்குது. வேல நரியா  இருக்குது?”

“எனக்கும்  தான் வேல நரி இருக்குது.  நான் டையர்டா தெரியலையா?”, கேட்டாள் சந்தியா.

“மஞ்சிங் மான்ச்டர்க்கு கொஞ்சம் தெரிது. மதுக்கு நிறைய தெரிது”, என்ற நிரஞ்சனை  சந்தியா இப்போது தான் நேருக்கு நேர் பார்க்கிறாள். இதற்கு முன் நிரஞ்சனும் சந்தியாவும் போனில் தான் அறிமுகம் ஆனார்கள்.

“நான் மஞ்சிங் மான்ச்டரா….சும்மா சொல்லக் கூடாது சூப்பர் பிகரா இருக்கீங்க…..மது சொன்னா ஒரு பொண்ணு விடாம உங்களை  காலேஜ்ல பைய்யான்னு கூப்பிடும்ன்னு. நம்புற மாதிரியே இல்லையே??”, கேட்டாள்  சந்தியா.

“அதானே! உங்களை பாத்தா அத்தனை பொண்ணுங்களும் காபி தான் வாங்கி குடுக்கும்….ராக்கியா வாங்கி குடுக்கும்?”  ஒத்து ஊதினாள் சக்தி.

மாட்டிக் கொண்ட கள்ளனாட்டம் மலங்க மலங்க விழித்த நிரஞ்சன்,

“ஜூனியர்ஸ் தான் அண்ணா சொல்லும். சீனியர்ஸ் சொல்லாது” சொல்லி வழிந்தான். மதுவிடம் இருந்து  அண்ணா வை நீக்க  தானாகவே கட்டிக் கொண்ட ராக்கிகள்  தானே அவை...

“அய்யோடா….என்ன கண்டுபிடிப்பு...நம்பிட்டோம். தமிழ்த்தாய் வாழ்த்து எந்த அளவுக்கு இருக்கு மது”, கேட்டாள் சந்தியா.

“நிரு பாடு”, என்றாள் மது.

“நீராரும் கல்..கடலேத்தா

திகில் பறக்க கண்டம் ஆதில் “, பாடினான் நிரஞ்சன்.

“என்னடி திகில் பறக்க பாடுறார் தமிழ்த்தாய் வாழ்த்து. உங்க தாகூர் சொன்ன ஜன கன மன எல்லாம் நாங்க சரியா பாடுறோம்ல…. எங்க மணி சொன்னதை ஒழுங்கா பாடி பழகுங்க” சொன்னாள் சக்தி.

சக்தி மிரட்டலில் கொஞ்சம் நிரஞ்சன் அரண்டு விட்டான். “ஓகே சக்தி” தலையாட்டினான்.

“சரி நீங்க ஜீராவுக்கு தமிழ்ல ப்ரொபோஸ் பண்ணா எப்படி பண்ணுவீங்க? நம்ம மணி சார்  அதுக்கு ஸ்கிர்ப்ட் எழுதி இருக்கார். அதை உங்களுக்கு இன்னைக்கு சொல்லிக் கொடுக்கிறோம். ”,  என்றாள்  சந்தியா.

“தமில் தாய் எழுதுனதா? அது படிக்க  நான் கஷ்டப்படுது”, நிரஞ்சன்.

“இந்த மணி வேற….மணிரத்னம் டைரக்டர்… ப்ராப்போஸ் பண்றப்போ சொல்லணும். எங்க  சொல்லுங்க ….நான் உன்னை விரும்பலை”, சொன்னாள்  சக்தி.

“நோ….நோ….நான் விரும்புது”, நிரு  அவசரமாக திருத்தினான்.

“அய்யோ….இதுல ட்விஸ்ட் லாஸ்ட் லைன்ல தான் வரும். நீங்க அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புச்சா போதும். கேள்வி கேக்கக்கூடாது சரியா?”, கேட்டாள்  சந்தியா.

பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினான் நிரஞ்சன்.

“.நான் உன்னை விரும்பலை.”, சக்தி.

“நான் உன்ன விரும்பலலே”, நிரஞ்சன்.

“என்ன லே லே ன்னு திருநெல்வேலி ஸ்லாங்கல பேசுறீங்க” சந்தியா சொல்ல மதுவும் சக்தியும் சிரித்தனர்.

“உன் மேல ஆசைபடலை”, சக்தி

“உன் மேல் ஆஷா பட்லே”, நிரு

“நீ ஜீரா ன்னு சொன்ன ஜந்து, இவர் ஆஷா ன்னு சொல்றார். ஒரே கல்லுல்ல ரெண்டு மாங்காவா  அடிக்க பார்க்கிறாரா?”, சந்தேகம் கேட்டாள் சக்தி.

“யாரு நிரு, ஆஷா? சொல்லவே இல்லை?”, வியப்பாக கேட்டாள் மது.

“அய்யோ...நான் சொல்லுது இச்சா”, எங்கே தன் காதலி தப்பாக நினைத்து விடுவாளோ என பதறி விளக்கினான்.

“ஆஷாக்கு  இச்சா?… எத்தனை இச்?”, சிரித்த படி கேட்டாள் சந்தியா.

“இச்சா மீன்ஸ் விஷ்...தமில்ல ஆஷா சொல்லுது...பெங்காளில இச்சா சொல்லுது”, விளக்கினான் நிரஞ்சன்.

“மது, பெங்காலில வார்த்தை எல்லாம் செம  ரொமாண்டிக்கா இருக்குல”, மதுவிடம் திரும்பி சந்தியா சொல்ல, அவளை ஆவலாய் பார்த்தான்  நிரஞ்சன்.

“ப்ச்...எனக்கு அப்படி எல்லாம் தோணலை “, என்றாள் மது அலட்சியமாக.

அதைக்கண்ட நிரஞ்சன் முகத்தில் கவலை அப்பிக் கொண்டது. சந்தியா அதைக்  கவனித்தாள்.

ப்போது கார்த்திக் மது போனில் அழைக்க, “காதி அப்படியே ஸ்கைப் க்ரோப் சேட்க்கு வரமுடியுமா? நிரு தமிழ் கிளாஸ் இண்டரஸ்டிங்கா போகுது” கேட்டாள் மது.

“ஏ..நான் கிளயண்ட் ஆபிஸ்ல இருக்கேன். இப்போ வீடியோ சேட் பண்ண முடியாது. ஆண்டிக்கு ஒன்னும் ப்ரிச்சனை இல்லையே”, கேட்டான் கார்த்திக்.

“அவங்களுக்கு ஸ்கேன் நார்மலா தான் வந்திருக்கு. இப்போ நல்லாயிருக்காங்க. நான் இன்னைக்கு இங்க தான்  ஸ்லீப் ஓவர். சந்தியா, சக்தி எல்லாம் சேர்ந்து  நிருவை ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்கோம். அதான் உன்னையும் கூப்பிட்டேன். நீ பிஸியா இருக்கியே. பை.” என்று இணைப்பை துண்டிக்க போனாள்.

“ஹே...சந்தியா வீட்டுல இருக்கியா?”, கார்த்திக்.

“ம்”, மது

“சரி நான் சேட் ல ஜாயின் பண்றேன்”, கார்த்திக்.

“இப்போ தான் வீடியோ சேட் பண்ண முடியாது ன்னு சொன்ன?”, மது

“என் பேய்யை சமாளிக்க நிருவால முடியாது. நான் அவனுக்கு ஹெல்ப் பண்ண வாரேன்”, கார்த்திக்.

“கிளயண்ட்  ஆபிஸ்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”, மது.

“அதுக்கு என்ன பண்ண முடியும்?”, கார்த்திக்.

“அப்போ தினமும் சேட் பண்ண வேண்டியது தான”, மது

“நீயும்  தினமும் ஸ்லீப் ஓவர் போட வேண்டியது தான”, கார்த்திக்

“அதெப்படி முடியும். இன்னைக்கே எப்படி தூங்க போறேன்னு தெரியலயே”, மது

“நீ தூங்கவே வேண்டாம். முதல் தடவையா ப்ரண்ட்ஸ் கூட வெளிய தங்குற. நல்லா என்ஜாய் பண்ணு. சரி நான் சேட்ல ஜாயின் பண்றேன் பை”

அவனும் ஸ்கைப்பில் வந்து இணைந்தான்.

திரையில் அவன் முகம் தெரிந்ததும்  சந்தியாவின் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. வந்தவன் அவளருகில் இரண்டு ஜீவன்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் பார்வையை விலக்காமல் சந்தியாவையே பார்க்க, ஆசை இருந்தாலும் தயங்கி அவனிடம் இருந்து பார்வையை விலக்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.