(Reading time: 40 - 79 minutes)

லோ  கார்த்திக்”, சக்தி.

“ஹாய் சக்தி. எம். எஸ். எப்படி இருக்கார்?”, கார்த்திக்.

“ம்..நல்லாயிருக்கார். நீங்க எப்படி இருக்கீங்க”, கேட்டாள் சக்தி. அவளிடம் இருந்து, மீண்டும் சந்தியா மீது பார்வையை வீசியவன்,

“ஐ அம் குட்.  ஹவ் ஆர் யு சந்தியா”,  

“ம்...நல்லாயிருக்கேன். “, சந்தியா.

“ஆண்ட்டிக்கு என்ன?”, கார்த்திக்.

“இவ்வளவு நேரம் போன்ல அதை தான  சொன்னேன் காதி”, அலுத்துப் போய் சொன்னாள் மது.

“சூர்யாகிட்ட பேசுனியா?”, சந்தியாவை கேட்டான் கார்த்திக்.

“நாங்க ஏற்கனவே வசூல் ராஜாட்ட  ஒபினியன் கேட்டோம்.“, சொன்னாள் சந்தியா.

வசூல் ராஜா என்றதும் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அவனைத் தான் உங்களுக்கு பிடிக்குமோ?”, பல்லைக் கடித்துக்  கடிந்தான் சந்தியாவை.

அவன் கோபம் அவளுக்கு பிடிக்கும். ஆனால் அதில் பொதிந்த அர்த்தம்...”மடையா உன்னைத் தான்டா பிடிக்கும்.”, அறைகூவலிட்டது காயப்பட்ட இதயம். அதை வெளிக்காட்டாமல்,

“அப்பா தான் சரண்கிட்ட பேசுனாங்க. நான் சூர்யாகிட்ட நாளைக்கு பேசுறேன் கார்த்திக். ” கவனமாக உணர்ச்சிகளை மறைத்து பேசினாள்.

அவள் பதில் அவனை அமைதி படுத்தினாலும், எங்கே ‘தனது’ பறிபோய்  விடுமோ என்ற தவிப்பு அவனிடம் இருந்தது.

“இதுக்கு  ஏன் காதி சந்தியா மேல இவ்வளோ கோபப்படுற?” கேட்டாள் மது.

கார்த்திக் பதில் பேசவில்லை. மாறாக சந்தியாவை பார்த்தான். அவனை நேரடியாக பார்க்க முடியாமல் “ஹே…..நிரு எங்க விட்டேன்,ம்ம்... நீ அழகா இருக்கன்னு நினைக்கலை”

“நீ அழுக்கா இருக்கன்னு நினக்கலே”, என்றான் நிரு.

அவன் சொன்னதும் அனைவரும் சிரிக்க, நிரு மதுவை ரசிக்க, கார்த்திக் விழி அகற்றாமல் சந்தியாவை ரசித்துக் கொண்டிருந்தான்.

“இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமாயிருக்கு. யோசிச்சு சொல்லு”  என அடுத்த வரியை கற்றுக் கொடுத்தாள் சக்தி.

“இதலாம் நடந்துடிமோன்னு பேய்ம்மாயிருக்குது...யாசி...யாசிச்சு  சொல்லுது ”, என்றான் நிரு.

“அய்யோ….ப்ரபோஸ் பண்ண சொன்னா ஜீராவை பிச்சை எடுக்க சொல்ற….” மது சொல்ல, மேலும் சிரிப்பொலி..

கார்த்திக்கின் பார்வை தன்  மீதேயிருப்பதை சந்தியா உணர்ந்தாள். “இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நான் எப்படி உன்னை சைட் அடிக்கிறது”, மனதிற்குள் திட்டினாள். அவன் போய்விட்டால் மீண்டும் பார்க்க முடியாதே ஆவலில் ஓரிரு முறை  அவள் விழி அவனிடம் சென்று, விலகுவதை அவனும் கவனித்தான்.  

அவளின் கால் வினாடி பார்வையிலே சறுக்கி விழுந்தவன், “மயக்கு மோகினி...அதென்ன கள்ளப்பார்வை”, உள்ளுக்குள் அவளை செல்லமாக திட்டினான்.  அந்த பார்வையில் வெறுப்பு இல்லை, வேதனை இல்லை …. “அப்பாடா…”, வெள்ளியிரவு இறுகிய மனம் சற்று தளர்ந்தது. உள்ளுக்குள்  நிம்மதி.

“அடுத்த அஞ்சு நிமிசத்துல நான் மீட்டிங் போகணும். சரியா பாக்கட்டி நல்லா  பாத்துகோங்க“, அறிவிப்பு வெளியிட்டு அவன் மீது அவளுக்கு சலனம் இருக்கிறதா என  அறிய எண்ணினான்.

அவன் தன் மனதை அறிய முற்படுவதை உணர்ந்த சந்தியா விடாப்பிடியாக அவன் பக்கம் தன் பார்வையை திருப்பவே இல்லை.

“அடம்பிடிச்ச பேய்.. சொல்லாம இருந்தா கூட பாத்திருப்பா….” தன்னை நொந்தான்.

சற்று நேரம் கழித்து நிரஞ்சன் கேட்டான், “கார்த்திக், ஆய்ந்து நிமிஷத்தில மீட்டிங் சொன்னது. இன்னும் உட்கார்ந்திருக்கு”

“அய்யோ...நிரு உன் தமிழ் புலமையில் மயங்கி உட்கார்ந்துட்டேன். சரி நான் கிளம்புறேன். மது தூக்கம் வராட்டி பேஸ்புக்ல என் பாட்டை அப்லோட் பண்றேன். கேட்டுட்டு தூங்கு. அடுத்து ஒரு வாரத்துக்கு பேச முடியாது. பாக்க முடியாது. எல்லாரும் நல்லா  கேட்டுக்குங்க  எங்கூட பேச முடியாது, பாக்க முடியாது. நான் ரொம்ப பிசி.”, சற்று குரலை உயர்த்தி அடுத்த அறிவிப்பை வெளியிட்டவனுக்கு இணைப்பை துண்டிக்க எண்ணமே இல்லை. நல்ல வேளை, அந்த அலுவலகத்தில்  அவனுக்கு தனியறை ஒதுக்கி இருந்தனர்!

அவன் மேஜையில் இருந்த இண்டர்காம் ஒலிக்க, “மீட்டிங்கிற்கு தான் வெயிட் பண்ணுவாங்க…. பத்து நிமிஷம் லேட் உன்னால! என்னை பாக்க மாட்டியா….இரு இரு கூடிய சீக்கிரம் பாக்க வைக்கிறேன்” என எண்ணிக் கொண்டே வீடியோ கான்பரன்ஸ்சை துண்டித்தவன், கலந்தாய்வு அறைக்கு விரைந்தான்.

கார்த்திக் சென்று விட,  நிரஞ்சனின்  தமிழ் வகுப்பு தொடர்ந்தது. மதுவிற்கு தனிமை அளிக்கும் பொருட்டு சக்தியை கூப்பிட்டு கொண்டு சந்தியாவும் ஏதோ வேலை இருப்பதாக நழுவ முயற்சிக்க, மது, “சந்து இரு ஒரு டூ மினிட்ஸ்ல வந்துடுறேன்.” என்று இடைவேளை கேட்டவாறு குளியலறை நோக்கி சென்றாள். அவள் சென்றதும் நிரஞ்சனிடம் சந்தியா “உங்களுக்கு ஜீரா நோ சொன்னா மதுவே நாலு சாத்து சாத்துவேன்னு சொல்ற அளவுக்கு  உங்களை  பிடிச்சிருக்கு” என்றதும் அவன்  முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்!

“ரியலி??” ஆனந்த கண்ணீருடன் கேட்டதற்கு, ஆமாமென்று தலையாட்டினாள் சந்தியா. அப்பொழுது தான் சக்திக்கு ஜீரா யார் என விளங்கிற்று.ஆனால் அதே நேரம் பார்த்து அவளின்  வருங்கால கணவனின் அழைப்பு வர ஓடிப்போய் அழைப்பை எடுத்து, தனிமையை நாடி சந்தியா அறையிலிருந்த பால்கனிக்கு சென்றாள்.

சக்தியும், மதுவும் அருகில் இல்லாததால் கார்த்திக்கின் வருத்தத்தை பற்றி சந்தியாவிடம் சொல்லி விட வேண்டும் என நிரஞ்சன் துடித்தாலும், அவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிடுகிறோமோ என சொல்ல முடியாமல்  தயங்கி கொண்டிருக்க, சந்தியாவோ இது தான் மதுவை பற்றி நிரஞ்சனிடம் பேச தக்க தருணம் என்று மெல்லிய குரலில்,

“இனிமே தான் நீங்க பொறுமையா, நிதானமா, புத்திசாலி தனமா மூவ் பண்ணனும். அவளுக்கு உங்க கூட பேச பிடிச்சிருக்கு. உங்க கூட வாழ பிடிக்கணும்ன்னா உங்க மேல அவளுக்கு நம்பிக்கை வரணும். நம்பிக்கை வரணும்ன்னா நீங்க அவ கூட நேர்ல வந்து தான் பழகணும். அதுக்கு நாம சென்னை போற மூணு நாள் பத்தாதோன்னு தோணுது. நீங்க இங்க மூவ் பண்றதை பத்தி யோசிச்சீங்களா?” கேட்டாள் சந்தியா.

“அது டஃப் சந்தியா. கமிட்மெண்ட்ஸ் இருக்குது. பராடக்ட்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்குது. லோன் இருக்குது. இத்னே  வர்ஷம் வளர்த்த கம்பெனி. அம்போன்னு விட முடியாது. பர்சனலி மாம் ஆர்த்ர்டிஸ் பேஷன்ட். நரியா கேர் வேணும். உங்க ஊரில் மாம்க்கு   லேங்குவேஜ் ப்ராப்ளம்  வருது...பட், எனக்காக  மாம் செய்யும். வேற  சாய்ஸ் கிடயாது ன்னா  கட்சில யோசிக்குது.“

“மலேசியால உங்க கூட யாரெல்லாம் இருக்காங்க? ”, சந்தியா வினவ,

“மாம் மட்டும் தான். சிஸ்டர் நியூசிலாண்ட்ல இருக்குது. மது மாம் கூட பேர்ட்ஸ் பத்தி தான் முந்தி பேசுது.  மாம்க்கு மது பிடிக்கும்.”, நிரஞ்சன்.

“அவங்க கூட தினமும் பேச வைக்கலாமா? மதுவுக்கு உங்க பாமிலி பத்தியும் தெரியணும், பழகணும் இல்லையா? லேங்குவேஜ் ப்ராப்ளம் வருமா?”, கேட்டாள் சந்தியா.

“குட் ஐடியா. பட் மாம் நரியா நட்க்க முடியாது. லோன்லியா பீல் பண்ணுது. மது பேசுதுன்னா ஹேப்பி தான்.  மாம் ஹிந்தி, இங்கலிஷ் நல்லா பேசுது. இத்னே நாள் என்க்கு இது தோணவே இல்லே  சந்தியா”, என்றான் நிரஞ்சன்.

”இன்னைக்கு அவளோட கஷ்டத்தை எங்க கூட வெளிப்படையா ஷேர் பண்ணா நிரு. அதிக நேரம் அழுதா...அம்மா வந்து சமாதான படுத்தின பிறகு தான் அழுகையை நிறுத்தினா. அவளுக்கு கொஞ்சம் அரவணைப்பு தேவை. உங்க மேல நம்பிக்கை வர்றதுக்கு, உங்களை நம்பி மலேசிய வர்றதுக்கு, உங்க அம்மாகிட்ட அவ சகஜமா பழகுனா ஈசியா இருக்கும். இது என்னோட வைல்ட் கெஸ் தான்…”, என்று தனது யோசனையை அவனிடம் சொன்னாள்  சந்தியா.

“மது அழுததா”, பதறினான் நிரஞ்சன்.

“ஒரு விஷயத்தை மனசுக்குள்ளே போட்டு விரக்தியா இருக்கிறதுக்கு அழுது ஷேர் பண்ணா  நல்லது ரசகுல்லா. ஆனா, உங்க கூட பேசுன பிறகு அவ சரியாகிட்டா “, என்றாள் சந்தியா சந்தோஷமாக.

சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மது வர, “மது நாங்க வேற இடையில் புகுந்து உங்க தமிழ் கிளாஸ்சை சொதப்பிட்டோம். நீ உருப்படியா சொல்லிக் கொடு. ரசகுல்லா ஒரு மணி நேரம் கூட ஆனாலும் பொறுமையா தமிழ் கத்துக்கோங்க. என்னை அப்பா கூப்பிட்டாங்க. என்னன்னு கேட்டு வந்துடுறேன்” என அவர்களுக்கு தனிமை அளித்து அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.