(Reading time: 40 - 79 minutes)

வியம் தீட்டி விட்டு, சிறிது நேரம் சதாசிவத்துடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, மது அவளது அறைக்கு அழைக்க, சென்று போய் பார்த்தால் ஸ்கைப்பில் நிரஞ்சனின் தாயார். “ஆண்ட்டி திஸ் இஸ் சந்தியா” என சந்தியாவை அறிமுகப் படுத்தி வைத்தாள்.  “ஆன்ட்டி பேரு பிந்தியா போஸ்” ஆர்வமாய் சந்தியாவிடன் சொன்னாள். முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு நறுங்கி போன உருவத்தில் கைத்தடியை அருகில் வைத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார் பிந்தியா. அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் பேச ஆரம்பித்தால்...இந்த நிலையில் இவ்வளவு தைரியமாக, தெளிவாக உற்சாகத்துடன் பேசுபவரை பார்த்து அசந்து விட்டாள் சந்தியா. (இவர்கள் பேச்சு ஆங்கிலத்தில்… அது பேச்சு தமிழில் கீழே பதிவு செய்துள்ளேன்)

“நான் இளம் விதவை. அப்போ இருந்து வாழ்க்கையில் போராட ஆரம்பித்தவள் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனா ஒவ்வொரு போராட்டத்துக்கு பிறகும் மனசு இன்னும் பக்குவப்படுது. அது முதுமையால உடம்பால முடியாட்டினாலும் சமாளிக்க முடியுது. ”

“இருங்க என் குழந்தையை உங்களுக்கு காட்டுறேன்...” என தட்டித் தடுமாறி அந்த கட்டை பிடித்தவாறு நான்கு முறை தோற்று ஐந்தாவது முறையாக எழுந்தார். மதுவிற்கும், சந்தியாவிற்கும் ஓடிப் போய் உதவி செய்ய வேண்டும் போல இருந்தது. அவர்கள் பார்வையை புரிந்தவராய் “இன்னும் இன்னொருத்தவங்க கையை எதிர்பார்க்கிற அளவு மோசமா ஆகலை.” தெம்பான குரலில் ஒலித்தார். அந்த கைத்தடியை பிடித்துக் கொண்டு ஓரிரு எட்டுக்கள் வைத்து தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்தவர் “கார்க்கி” என அழைத்துக் கொண்டே அதை இயக்கி கணினி திரையிலிருந்து மறைந்தார்.

சந்தியா மதுவிடம், “வாட் எ வுமன்??? சான்சே இல்லை. “ என சொல்ல மது ஆமோதித்தாள். “ஆண்ட்டிக்கு உலகமே பறவைகள் தான். அவங்க இயற்கையோட சேர்ந்து வாழ ஆசைப்படுவாங்க. நிரு வீட்டை அவங்களுக்கு ஏத்தமாதிரி கட்டியிருக்கான். அவங்க வீட்டிக்கு பின்னாடி காடு தான்… நிறைய பறவைகள் வரும்...அந்த பறவைகளை பாக்கிறதுலே அவங்க பொழுது போயிடும். இதுல அங்க ஒரு யுனிவர்சிட்டிக்கு கெஸ்ட் லெக்சர் எடுக்கிறாங்க. அடிக்கடி பக்கத்தில் உள்ள நேஷனல் பார்க்கு வாலண்டரி வொர்க், மலேஷியன் நேச்சர் சொசைட்டில முக்கியமான மெம்பர். இயற்கை பாதுகாக்குறதுல  ஏகப்பட்ட ஆர்வம் அவங்களுக்கு.” என்று பட்டியலிட்டாள் மது.

மது சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் திரையில் தெரிந்தார் பிந்தியா. தோளில் கிளியுடன். அந்த கிளியின் தலை முழுதும் மஞ்சள் நிறமாகவும் உடம்பு பச்சை நிறமாகவும் இருந்தது. அந்த கிளிக்கு ஒரு சிறகு கூட வெட்டப்படாமல் இருந்தது வியப்பு! கிளியை ஹாய் சொல்ல சொன்னார். அதுவும் ஹாய் சொன்னது. அதை அதிசயமாய் பார்த்தனர் சந்தியாவும் மதுவும். அடுத்து அது சொன்னதை கேட்டு அசந்து விட்டனர் அவர்கள்… ஏனெனில் அது சொன்ன வார்த்தை...“மதுமிதா”.

பறவை உருவத்தில் மனிதக் குரலில் பேசிய கிளியை பார்த்து விக்கித்து போய் நின்றனர். சந்தியா ஆர்வமாக “கிளி சந்தியா சொல்லுமா?” கேட்டாள். “பிந்தியா தான் சொல்லும். “ என சொல்லி சிரித்த பிந்தியா, “அதை அப்படி கூப்பிட கொஞ்ச நாள் பழக்கணும்” என்றார்.

“அப்போ மதுமிதான்னு கூப்பிட ஏற்கனவே பழக்கி இருந்தீங்களா?” கேட்டாள் மது.

“பேசப் பழக்குறது எல்லாம் நிரு தான் செய்வான்” சந்தியாவிற்கு காரணம் புரிந்து விட்டது. மதுவிற்கு புரியவில்லை. “அப்போ கார்த்திக் சொல்லுமா?”, கேட்டாள் மது.

அவள் கேள்வி என்ன பதில் சொல்ல தெரியாத பிந்தியா “அதுக்கு விருப்பம் இருந்தா தான் சொல்லும். ஆனா பாட்டு பாடும், என அதை பாட சொல்ல அது அழகாக பெங்காலி பாட்டின் இரு வரிகளை பாடியது. இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. “பேசாம தமிழ் தாய் வாழ்த்துல ரெண்டு லைன்ன பாட இந்த கிளிக்கு பழக்க சொல்லி நிருகிட்ட சொல்லணும்” என்றாள் மது சந்தியாவிடம். அதைக் கவனித்த பிந்தியா கிளிக்கு ஆங்கில பாடல் ஒன்றை நிரஞ்சன் கற்றுக் கொடுத்திருக்கிறான் என சொல்ல ஆர்வமாக கிளியை பார்க்க அது,  “ஐ அம் செக்ஸி அன்ட் யு நோ இட்” என பாட விழுந்து விழுந்து சிரித்தனர்.

காலையில் அங்கே சிற்றுண்டியை முடித்து விட்டு மதுவுடன் அலுவலகம் கிளம்பினாள். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து அலுவலகம் வருகிறாள். கார்த்திக்கின் அறையில் அமர்ந்து அவளால் வேலை பார்க்க முடியவில்லை. தனிமையில் அவன் நினைவுகள் இன்னும் வாட்டின. அந்த நேரம் சக்தி அழைத்து,

“ஜந்து வைவ்வா வாஸ்க்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. ரிப்போர்ட் ரெடி பண்ணனும். ஆபிஸ்ல இன்னைக்கே பிரிண்ட் அவுட் எடுத்திட்டு வந்துடு. அப்போ தான் பைண்டிங் குடுத்து வாங்க டைம் இருக்கும்.”, கல்லாரி ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை தயார் செய்ய நினைவுறுத்த சரியென அந்த வேலைகளை ஆரம்பிக்க தனது மேஜை டிராயரில் இருந்து பிரிண்ட் கொடுக்க பேப்பர்களை எடுத்த போது...அவள் கையை போட்டோகாப்பி எடுத்த தாளும் அதனோடே சேர்ந்து வந்தது.

அன்று அவன் காபி குடிக்கும் இடத்தில், “ஏன் லெப்ட் ஹேண்டை பக்கவாதம் வந்த மாதிரி அசைக்காமலே  வைச்சிருக்க?” என்று கேட்டதற்கு “இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். உங்களுக்கு புரியாது” என அவள் அளித்த பதில் நினைவிற்கு வந்தது.

அவன் முதன் முதலில் ஹாய் பை கொடுத்த கரத்தை  எதையும் தொடாமல் பத்திரமாக பாதுகாத்து கையை ஜெராக்ஸ் மெசினில் அவனுக்கு தெரியாமல் ஓடி வந்து நகல் எடுத்தாளே! அந்த நகல் தான் அது.

“லூசாப்பா நீ..அவன் தொட்டதும் உன் கை ரேகை எல்லாம் அழிந்து போச்சா...இல்லை மாறி தான் விட்டதா? காப்பி எடுத்து வைச்சிருக்க“ தன் செய்கையை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள். மீண்டும் செல்போன் சிணுங்கியது “பழம் நீயப்பா...ஞானப் பழம் நீயப்ப்பா...தமிழ் ஞானப் பழம் நீயப்பா”, துள்ளிக் குதித்து எடுத்தாள். அது அவனுக்காக பார்த்து பார்த்து வைத்த ரிங் டோன்.

“ஹே...சந்தியா” அழைத்த அவன் குரலில் கிறங்கியவள், பதிலாக

“ம்ம்…”, அந்த “ம்ம்” இல் ஆர்வம் ஒலித்தது.

“பிஸியா? “ ஏக்கமாய் ஒலித்த அவன் குரல் அவளை ஏதோ செய்தது.. சந்தோஷமும், நடுக்கமும் ஒரு சேர வதைக்க சில நொடி மவுனத்திற்கு பின்,

“இல்லை. என்ன சொல்லுங்க”, என்றாள் மென்மையாக.

“ஒரு அஞ்சு நிமிசம் பேசலாமா? “

“யு ஆர் மை பாஸ், கார்த்திக்”, என்று அவள் சொல்லும் தோரணை “என் முதலாளி என்னிடம் பேச அனுமதி கோரலாமா?” என்பதை உணர்த்தியது.

“ஆபிஸ் விஷயத்தை ஆபிஸ்ல தான் பேசணும் சந்தியா தி கிரேட் சொல்லியிருக்காங்களே...அப்புறம் பர்சனல் விஷயத்தை பேச பெர்மிஷன் கேக்கணுமே”

அவன் பேச்சில் குறும்பு எட்டிப் பார்க்க பறந்தது அவள் மனம். அவனும் அதை எதிர்பார்ப்பான் என அவள் அறியவில்லை. அவன் பேசி விட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள். புன்னகையை பதிலாக அளித்தாள். அது அவனுக்கு தெரியுமா என்ன?

எதிர்முனையில் பதில் வராது கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்தான்.

“ஹே… பேச வேண்டாமா” தயக்கமாக கேட்டான்.

“ஊகூம்….பேசணும்”, கட்டளையாக  சொன்னாள்.

“எஸ் பாஸ்” என்றான் சந்தோசமாக.

அதற்கு அவள் அவனை அறியாமல் புன்னகைத்தாள்…

“நைட்டு பேஸ் புக்ல அப்லோட் பண்ண பாட்டு கேட்டியா?”

“பாட்டு நீங்க எதுவும் அப்லோட் பண்ணலையே “, யோசனையாய் பதிலளித்தாள்.

“என்னை எதிர்பாத்திருக்கா” என அவள் பதிலில் சந்தோசமானான்.

“ஹம்...ஆமா பண்ணலை...சோ மதுக்கு சொன்னதை நீங்க பாலோ பண்ணியிருக்கீங்க பாஸ்”, தனது கணிப்பை சொன்னான்.

“சகுனி...போட்டு வாங்க பாக்குறியா” மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் “நான் பேஸ்புக் பாக்கலை. மது தான் சொன்னா”, அழகாக தப்பித்தாள்.

அவள் பதிலில் அவனுக்கு கவலை தொற்றிக் கொண்டது.

“ஹே...ஹிந்தி தெரியுமா உனக்கு?”, கார்த்திக்

“ஊகூம்…“, சந்தியா.

“தற்செயலாக சந்தித்தோம்...தொலைவில்  இருந்தும்  பேசினோம்...ஆனா, கொஞ்ச கொஞ்சமா என்ன ஆச்சு தெரியுமா? அதை உன்கிட்ட என்னால சொல்ல முடியுமா ? ஏன் என் இதயம் துடிக்க திணறுது? ஏன் என் உடலும் உயிரும் நடுங்குது? ஏன் என்னோட புத்தியிழந்து தவிக்கிறேன்? அதை உன்கிட்ட எப்படி சொல்ல?” என்று பொருள் படும் வரிகளை ஹிந்தியில் சொன்னான்.

“என்ன கார்த்திக் சொல்றீங்க? எனக்கு புரியலை…”

“எனக்கும் புரியலை சந்தியா…. நீ என்ன நினைக்கிறன்னு”

“உன்னைத் தான் நினைக்கிறேன்” சொன்னாள், வாயை திறக்காமல்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.