(Reading time: 12 - 23 minutes)

நேரே சென்று மனோவின் அருகில் அமர்ந்தவளை பார்த்து அப்பா கேட்டார்.........

விவேக்கை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமாமா?

ஸோபாவில் சாய்ந்து  அமர்ந்துக்கொண்டு அவள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ.

'அது எப்படிப்பா? என்றாள் நிதானமாய் 'நான் சிங்கப்பூர் போயிட்டா என்னை விட்டு நீங்க தனியா இருந்திடுவீங்களாப்பா?

ஏனோ அந்த நேரத்தில் அவள் கண்களை சந்திப்பதை தவிர்த்தபடியே சொன்னார் அப்பா 'எல்லாம் பழகிக்க வேண்டியது தான்மா'

'என்னாலே முடியாதுப்பா' என்றாள் உறுதியாய் 'கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க என் கூடவே இருக்கணும்.

'அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை' என்றான் விவேக்.

'அப்பாவையும் நம்ம கூடவே கூட்டிட்டு போகலாம் அது முடியாதுன்னா நான் உனக்காக இந்தியாலே எங்கே வேணும்னாலும் வந்து செட்டில் ஆக தயார். ஐ கேன் ப்ராமிஸ் யு தட்'

விவேக் இப்படி சட்டென்று சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்.

'இப்போ சொல்லுமா' உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா'' என்றார் அப்பா

பதிலில்லை அவளிடமிருந்து.

'சொல்லுமா. விவேக்கை உனக்கு பிடிச்சிருக்கா? இல்லையா?

அந்தக்கேள்வியில் இமைக்க மறந்தான் விவேக். சுவாசிக்க மறந்தான் மனோ.

அந்த கேள்வி அவள் மனதை வசந்தை நோக்கி  சுழற்றி சென்ற அந்த நொடியில், சரியாய் அந்த நொடியில் ஒலித்தது மனோவின் கையிலிருந்த அவனது கைப்பேசி.

திரை வசந்தின் புகைப்படத்துடன் ஒளிர்ந்தது  'வசந்த்' 

தனிச்சையாய் திரும்பிய அர்ச்சனாவின் கண்கள் மெல்ல விரிய ,பார்வை திரையின் மீது பதிந்தது

அவள் அவனை நினைத்த நொடியில், அவன் சட்டென்று கண்முன்னே வந்து நின்றே விட்டதை போலே,  கண்கள் தவிக்க அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

அவள் முகத்தை விட்டு விலகவில்லை மனோவின் பார்வை

சில நொடிகள் ஒலித்து அது நின்று போன நொடியில், ஏதோ ஒன்று கையை விட்டு போனதைப்போல் அவள் கண்கள் சட்டென குளம் கட்டிக்கொண்டன,. அவளையே பார்த்துக்கொண்டிருந்த மனோவின் கண்களில் கூட லேசான நீர்க்கோடுகள் சேர்ந்து விட்டிருந்தன.

'அர்ச்சனா' 'பதில் சொல்லும்மா' அப்பாவின் குரல் கலைத்தது

'ஆங்...ம்? என்னப்பா? என்றவள் சில நொடிகளில் தன்னிலை பெற்று, சமாளித்துக்கொண்டவளாய் சொன்னாள்,

'நீங்க என் கூட  இருந்தா எனக்கு போதும்பா.  நீங்க என்ன சொன்னாலும் சம்மதம்.' எழுந்து விட்டிருந்தாள் அர்ச்சனா. 'நீங்க பேசி முடிவு பண்ணுங்கப்பா' என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்

அவள் சென்ற திசையை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் விவேக்.

அந்த அழைப்பு யாருடையதாக இருக்குமென்று  புரிந்துக்கொண்டு விட்டிருந்தான் விவேக். அவனுக்குள்ளே  கொதித்தது.

'எங்கேயோ அமர்ந்து கொண்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சின்ன தொலைப்பேசி அழைப்பில் அவனால் அவளை உலுக்கி விடமுடிகிறது என்றால், அவனை தோற்கடிக்காமல், அவள் மனதிலிருந்து அவனை வெளியே எடுக்காமல், அவளுக்கு தாலி கட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை'

அப்பாவின் பார்வை விவேக்கின் மீது திரும்பியது,

'நீ என்னப்பா சொல்றே?'

நிதானமாய் சொன்னான் 'எனக்கு கொஞ்ச நாள் டைம் வேணும் அங்கிள்'

'ஏன்பா'? என்றார் அப்பா. 'உனக்கு என்ன பிரச்சனை'?

'இல்லை அங்கிள்' என்றான் விவேக் .'எனக்கு பெங்களூர்லே ஒரு முக்கியமான வேலை இருக்கு. அங்கே போய் கொஞ்ச நாள் இருந்து முடிக்க வேண்டிய வேலை. அதை முடிச்சிட்டு உங்களுக்கு நல்ல முடிவா சொல்றேன்' எழுந்து விட்டான் விவேக்.

'ப்போ phone பண்ணது அந்தக்கடங்காரன் தானே?

மொட்டை மாடியில் நின்றுகொண்டு எதோ நினைவுகளில் ஆழ்ந்திருந்த மனோ தன் சித்தப்பாவின் குரலில் திடுக்கிட்டு திரும்பினான்.

அவர் வார்த்தையிலும், முக பாவங்களினாலும் சுள்ளென்று பொங்கிய கோபத்தை அப்படியே விழுங்கிக்கொண்டான் மனோ

பதில் பேசாமல் சுவற்றில் சாய்ந்தபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

என்னடா? என் பொண்ணை அவன் கூட சேர்த்து வைக்க திட்டம் போடறியா?

நீ போன தடவை வந்தப்பவே உன் மொபைலே அவன் போட்டோவும் பார்த்தேன், நீ கடைசியா அவன் கூடத்தான் பேசியிருக்கேங்கிறதையும் பார்த்தேன். அப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு டா' என்றார் அர்ச்சனாவின் அப்பா

மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர் செய்த காரியங்களுக்கும்,பேசிய பேச்சுகளுக்கும் இத்தனை நாள் அவர்  முகத்தையே பார்க்காமல் இருந்தாகி விட்டது.

இப்போது அர்ச்சனாவையும் வசந்தையும் சேர்த்து வைத்தே ஆக வேண்டும் என்பதற்காக மிகப்பொறுமையாய் பேசினான் மனோ

'உண்மைதான் சித்தப்பா. நான் அந்த எண்ணத்துல தான் இருக்கேன்' என்றான் நிதானமாய். பாவம் சித்தப்பா ரெண்டு பேரும். நீங்களே சேர்த்து வெச்சிடுங்களேன். இதுலே கஷ்டபடறது நம்ம அர்ச்சனாவும் தானே சித்தப்பா.

'முடியாது டா. இந்த ஜென்மதுல்லே அந்த வீணாப்போனவனை மட்டும் மாப்பிளையாக்கிக்க என்னாலே முடியாது.  அவனை தவிர வேற எந்தப்பிச்சைகாரனை  வேணும்னாலும் காட்ட சொல்லு நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.

உடலின் மொத்த ரத்தமும் தலைக்கு பாய , கொதித்தே போன மனோ சட்டென சொன்னான்

'உங்க சம்மதம் தேவையே இல்லை சித்தப்பா.ஒரு மரியாதைக்குதான் உங்ககிட்டே சொன்னேன். இன்னும் கொஞ்ச நாள்லே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி உங்க முன்னாடி நிறுத்தறேனா இல்லையான்னு பாருங்க.'

முயற்சி பண்ணுடா. உன்னாலே முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணு.

'நீ என்னதான் அவனோட சேர்த்து வைக்க முயற்சிபண்ணாலும் என் பொண்ணு என் வார்த்தையை மீற மாட்டாள் ,வார்த்தை என்ன? நான் ஒரு பார்வை பார்த்தால் போதும் என் கூட வந்திடுவா  தெருஞ்சுக்கோ' என்றார் அழுத்தமாய்.

அப்படி ஒரு வேளை அவள் மனசு மாறிட்டால்? கேட்டான் மனோ.

'அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஒரு வேளை அப்படி நடந்துட்டால் அதோட என் மூச்சு தன்னாலே நின்னுடும்'

கண்களில் தீவிரம் பரவ, அவன் கண்களுக்குள் பார்த்து உறுதியான குரலில் அவர் சொல்ல சற்று திகைத்துதான் போனான் மனோ.

அதற்கு மேல் அங்கே நிற்காமல் நகர்ந்துவிட்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

'காரணமே இல்லாமல் ஒரு மனிதன் மீது இன்னொரு மனிதனுக்கு இத்தனை வெறுப்பு சாத்தியமா ? புரியவே இல்லை மனோவிற்கு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.