(Reading time: 26 - 51 minutes)

தெரிந்த பிறகும் எதுக்கு மூச்சிரைக்க ஓடி வந்தீங்க? ”

பதிலேதும் பேசாமல் ஆட்காட்டி விரலை அவள் சட்டையை நோக்கி காண்பித்தான்….அது அவள் மீது அவன் முன்பு உடுத்தி விட்ட சட்டை. வெகு நேரம் தூக்கம் வராமல் அவன் நினைவு அலைகழித்ததால் தனது நைட் பேன்ட் உடுப்பின் மீது அதைப் போட்டிருந்தாள்.

“ஆமா, உங்க டிஷர்ட்! பிடிக்காமலா போட்டு இருப்பேன்?“, சந்தியா.

“ஆனா, இப்போ பிடிக்கலைன்னு சொன்னியே”, என்றான் குழப்பத்துடன்.

“நீங்க இப்படி இருக்கிறது பிடிக்கலை. காதல் மன்னன் கார்த்திக்கா எப்போ மாறுவீங்க? ஏதாவது ரொமான்ஸ் பண்ணுவீங்கன்னு பாத்தா மூன்றாம் பிறை சீனுவாவே இருக்கீங்க. நானும் பை பை சொல்லிட்டு  போய்கிட்டே இருக்க வேண்டியது தான்” என அலுத்து கொண்டே சொல்லி விட்டு  கிளம்பினாள்.

அவன் சொன்னதும் குழம்பி பின் யோசித்து  தெளிந்து, மகிழ்ந்து அவளைத் தேடுவதற்குள் அவள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…

“ஹே...வள்ளிக்கண்ணு” என்று அழைத்துக் கொண்டே ஓடி வந்து பின்னாலிருந்து அணைத்து கொண்டான்… அவன் அணைத்த மயக்கத்தில் தன்னிலை மறந்த சில நொடிகளில் கழுத்து வளைவு ஈரமாக திடுக்கிட்டு திரும்பிவள் அவன் ஈர இமைகளை கண்டு கொண்டாள்...

“என்ன கார்த்திக் இது?ஆம்பிளை அழலாமா?”

“டியர் க்லான்ட்ஸ் இருக்கிற யார் வேணாலும் அழலாம். உன் லெட்டர் படித்தப்போ நான் பட்ட வேதனைக்கு அளவே இல்லை வள்ளிக்கண்ணு! என்னை நினைத்து எனக்கே வெறுப்பா இருந்தது! ஸ்டில், ஐ அம் நாட் யுவர் மிஸ்டர் ரைட்...”

“மிஸ்டர் ரைட்டும் வேண்டாம்… மிஸ்டர் ஒயிட்டும் வேண்டாம்….நீங்க நீங்களா இருங்க கார்த்திக். அது தான் எனக்கு பிடித்திருக்கிறது. அப்கோர்ஸ், முதல் நாள் நடந்ததை வைத்து உங்களை பத்தி பெரிய பில்ட் அப் பண்ணி வைத்திருந்தேன். உங்களை மிஸ்டர் பெர்பெக்ட்ன்னு நினைத்து வைத்து இருந்தேன். ஆனா, உண்மை தெரிந்தப்போ அதிர்ச்சியா இருந்தது! கோபம் வந்தது! டீஸ் பண்ணதுக்கு இவ்வளவு தூரம் யோசிப்பாங்களான்னு நினைத்தேன்”

“இட் இஸ் நாட் எ பெர்பெக்ட் வோர்ல்ட். யாருமே பெர்பெக்ட் இல்லை...நீங்களும் நானும் இதில் அடக்கம். 

அஜூக்கு   நிஜமாவே சீஸர் அதே ஹாஸ்பிட்டல்ல தானே அட்மிட் பண்ணப்போ அது புரிந்தது. நீங்க கார் எடுக்க போனப்ப நானும் சூர்யாவும் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணோம். நீங்க போறதை பாத்த அந்த ரிசப்ஷனிஸ்ட் சுஜி, உங்களை யாருன்னு அடையாளம் கண்டுகிட்டு, லூசுன்னு பக்கத்தில் உள்ளவங்ககிட்ட எல்லாம் சொல்லி உங்க காது படவே கிண்டல் பண்ணா…. ஆனா, நீங்க அதை கண்டுக்காம போனீங்க கார்த்திக். ஏன்?”

“அப்படியா?”,கேட்டான்  கார்த்திக்.

“ம்ம்… உங்களுக்கு பின்னாடி பல அடி தள்ளி வந்த எங்களுக்கு கேட்டது...உங்களுக்கு கேக்கலையா?

“அதெல்லாம் கவனிக்கிற நிலைமையில் நான் இல்லையே… “, கார்த்திக்.

“நாங்க கவனித்தோம். “உன் கூட பிறந்தவங்களை யாராவது இப்படி கிண்டல் பண்ணா உனக்கு எப்படி இருக்கும்?”ன்னு சூர்யா என்னிடம் கேட்டார்..  என்னால பதில் சொல்ல முடியலை… நான் உங்களை அன்னைக்கு தண்டிக்கனும் தான் டீஸ் பண்ணேன்.. விளையாட்டா செய்துட்டு மறந்துட்டேன். ஆனா, மத்தவங்க இதை மனசுலே வைத்து பார்க்கிற நேரமெல்லாம் டீஸ் பண்ணுவாங்க நான் எதிர்பார்க்கலை…உங்களுக்கு பொண்ணுங்களே பிடிக்காதுன்னு தெரியும் கார்த்திக். ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கணும்னு  முடிவெடுக்கிற அளவுக்கு தூண்டி விட்டுட்டேன்னு நினைத்து வருத்தமா இருந்தது. ஆனா, அதுக்காக உங்க மேல கோபமும் குறையலை! அஜூவை நினைத்து வேற கவலை….நீங்க சொன்னதை எல்லாம் கேக்கிற நிலைமையில் அந்த நேரம் நான் இல்லை...ஒரே நாளில் எத்தனை ப்ரிச்சனையை தான் எதிர்கொள்ள முடியும் சொல்லுங்க? “

“நம்பிக்கை துரோகத்தை யாராலும் லேசா எடுத்துக்க முடியாது.உங்களோட பழகி ரெண்டு வாரத்தில் அரும்பிய இது காதல் தான...நீங்க விரட்டியதில், உங்க காதல் வசனத்தில், நீங்க தயாளு மனம் போல் காட்டியதில்  ஏற்பட்ட ஈர்ப்பா… என்னன்மோ குழப்பமா இருந்தது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற எந்த முடிவும் தப்பா தான் இருக்கும். அந்த நேரம் எனக்கு தனிமை தேவை பட்டது கார்த்திக். ஆனா, இங்க வந்த பிறகு தனிமை அதைவிட  கொடுமையா இருந்தது….ஒவ்வொரு நாளும் நகற்ற எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? நாளாக ஆக நீங்க வந்து என்னை சமாதானப்படுத்தணும், கெஞ்சணும், உருகி உருகி பேசணும் அப்புறம் நான் கொஞ்சம் பந்தா பண்ணிட்டு அப்படி இப்படி இழுத்தடித்து அப்புறமா தான் கொஞ்சல்ஸ்ன்னு கனவு கண்டுகிட்டு இருந்தா... ” என ஏக்க பெருமூச்சு விட்டு,

“நீங்க என் பக்கம் திரும்பி கூட பார்க்கலை...இளவு விழுந்த மாதிரி முகத்தை வைத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க.  என் கார்த்திக் எனக்கு வேணும்ன்னு சொல்ல நான் உனக்கு வேண்டாமா? பொருத்தம் வருத்தம்னு புலம்பிகிட்டு இருக்கீங்க” என கேட்டாள் சந்தியா.

“வேண்டும் தான்….ஆனா, சக்தி மட்டும் இல்லைன்னா நிஜமாவே மூன்றாம் பிறை சீனுவாகி இருப்பேன் வள்ளிக்கண்ணு”, என்றான் அவள் தோள் பட்டையில் நாடியை வைத்து அழுத்தியவாறு.

“வெரி குட். மிஸ் பண்ணீங்களா...கேக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு கார்த்திக்”, பின்புறத்திலிருந்து தன் இடையை வளையமாய் அணைத்திருந்தவனின் தலையை கோதியவாறு.

“என்னை பைத்தியக்காரனாக்கி பாக்கிறதுல தான உனக்கும் சிவாவுக்கும்  என்ன சந்தோஷம்... சரி,  உன் மடியில் படுத்துகிட்டே உன் மொக்கையை கேக்குறேனே! ” என கேட்க, சரியென சுவரோரத்தில் அவள் சாய்ந்து அமர்ந்து கொள்ள  மடியில் தலை வைத்து படுத்தான்..அவன் முடியை கோதியவாறு,

“கார்த்திக், உங்க பாட்டை நிறையவே மிஸ் பண்ணேன். இன்னைக்கு பாடுனது என்னை நினைத்து தான?”, கேட்டாள் காதலுடன்.

“என்னைக்கு உன்னை பாத்தேனோ அப்ப இருந்து உன்னை நினைத்து பாடுறேன்…”, காதலால் சொன்னான்.

“பொய்…”, சந்தியா.

மறுத்து  தலையாட்டிவனின் விழிகள் உண்மை பேசியது!

“நீங்க இன்னைக்கு பாடுன மாதிரி இது ஜென்ம பந்தமா?”, காதலால் கேட்டாள்.

“ஜென்ம சாபம்...முதல் நாளே சாபம் போட்டியே...பழித்து விட்டது குழந்தாய்”, என்றான்  குறுப்பாக. அவன் குறும்பை ரசித்தவள்.

“சேட்டையை ஆரம்பித்தாச்சா? உங்களை ” என அடிக்க கை ஓங்கினாள்.

“அய்யோ...இதுக்கு மேலயும் உன் மடியில் படுக்கிறது ரிஸ்க்”, என வேகமாக எழுந்து அவளருகிலே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான்…அவன் உட்கார்ந்தது தான் தாமதம்,

“ஹே...மை டர்ன்”, என வேகமாக அவன் மடியில் பூவாய் விழுந்தாள்.

அவன் கண்ணைப் பறித்த அவள் கன்னத்தை கிள்ள வந்த விரல்களை கட்டுப்படுத்தினான். “ஏன் கார்த்திக் கன்னத்தை கிள்ளி விட்டு, வலிக்குதான்னு கேட்டுகிட்டே சுரண்டுவீங்களே...அதை செய்யலையா?” என்றாள் பின் வாங்கிய அவன் விரல்களைப் பற்றி சொடக்கிட்ட படி.

“அதை ஆரம்பித்தா...நிறுத்த முடியாது! நடுராத்திரி மயக்கு மோகினிட்ட சிக்கினா இந்த கன்னிப் பையன் என்ன ஆவான்?” கண்களில் போலியான பயத்தை காட்டினான்.

“விடுன்னு சொன்னா விட்டுடுவோமா...நீ வேணா பழுத்த பழனியப்பாவா இருந்துக்கோ..என்னால முடியாது” என்று சற்று எம்பி தன் கோர்த்த கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கி அவனை நெருங்கி கன்னத்தில் அழுத்தமான முத்தத்தை பதித்தாள். அது அவன் வேட்கையை கன்னாபின்னாவென கிளப்பி விட, அவளை தன்னிடம் இருந்து விலக்கி விட்டு  “நீ என்னை ஏதாவது செய்துடுவ..ஓடிப்போ” என விரட்டினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.