(Reading time: 26 - 51 minutes)

சை தோசை” என்று கழுத்தை வெட்டி சொன்னவள் அவன் மடியில் விழுந்து கண் சிமிட்டி சிரித்தாள்… அதைக் கண்டதும், அவன் விரல்கள்  அவள் தலையை வருட, கண்கள் அவள் மலர்ந்த முகத்தை இமை விலகாமல் பார்த்தது!

“இந்த ட்விங்லிங் ஐஸ்ஸும், சியர்புல் வாய்ஸ்சையும் எவ்வளோ மிஸ் பண்ணேன் “, வாய் திறக்காமல் சொன்னான்…

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை “என்ன?” என புருவத்தை உயர்த்தி விழிகளால் வினவ, அவன் பதில் பாடலாய் வந்தது!

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

அடுத்த வரிகளை  பாட வந்தவனை தடுத்தவள்,

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

என முடிக்க, “லவ் யு வள்ளிக்கண்ணு “ என அவளை நெருங்கி நெற்றி முட்டி மூக்கை உரசினான்.

“ஹே… என்ன பண்ற  பழனியப்பா “, கேட்டாள் சந்தியா.

“கிஸ் பண்ணேன்….எஸ்கிமோ கிஸ்” என்று சொல்லி புன்முறுவளித்தான் கார்த்திக்.

“ஹைய்யோ! நார்த் போல்ல இருந்து எப்போ இறங்கி பிரான்ஸ்க்கு வருவ பழனியப்பா?”, சிரித்து கொண்டே கேட்டாள் சந்தியா.

அவள் உதடுகளை ரசித்துக் கொண்டே, “தூரம் கம்மி தான்.. ஆனா, அங்க ஆரம்பித்தா உலகம் முழுக்க சுத்த விட்டுடும்... கல்யாணம் முடியட்டும். ஆனா, வள்ளிக்கண்ணு... அன்னைக்கு பயங்கரமா வெட்கப்பட்ட? இன்னைக்கு என்ன திடீர் தைரியம்?” வியப்பாய் கேட்டான்.

“நீ எதுவும் செய்ய மாட்ட பழனியப்பா…. ! அந்த  தைரியம் தான்!” என்றவள் அவன் மடியிலிருந்து எழுந்து, “ஒரு கன்னத்தில் கிஸ் பண்ணா மறு கன்னத்திலயும் பண்ணனும். இல்லாட்டி ஜீஸஸ்க்கு பிடிக்காது” என்று சொல்லி அவனின் மறு கன்னத்தில் இதழ்களை அழுந்த பதித்தாள்.

அந்த முத்தம் தனது கட்டுப்பாட்டை இழக்க செய்ய, அவள் முகத்தை  இரு கரங்களால் கைக்குள் அடக்கி அவளை நெருங்கி வர பயத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்…. சற்று நேரம் ஒன்றும் நடக்காமல் இருக்க கண்களை விழித்தாள் சந்தியா. அவனோ அவளை ரசித்த படி பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன?”

“சான்ஸே இல்லை…..ஐ லவ் யுவர் ஐ லாஷஸ்”, என்று  ரசனையாய் விரல்களால் அதை தடவினான்.

“அய்யோ ..இதை தான் இவ்வளோ நேரம் பார்த்தீங்களா...கிஸ் அடிப்பீங்கன்னு ரெடியா இருந்தேன்!” என்று தலையிலடித்தாள் சந்தியா.

“சின்ன வயசுல இந்த ஐ லேஷஸ்க்காகவே மதுவோட  பார்பி பொம்மை எடுத்து வைத்து கொள்வேன் தெரியுமா? எனக்கும் அவளுக்கும் செம சண்டை வரும்.”, என்றான் பெருமையாக. அவன் சொன்னதும் மது நினைவு வர சந்தியா அவனிடம்,

“மது கூட நீங்க சரியாவே பேசலைன்னு மேடம் ஒரே புலம்பல்ஸ். ஏன் கார்த்திக்? ” என கேட்க, அதற்கு கார்த்திக் அண்ணாந்து வானத்தை பார்த்த வண்ணம்,

“பாரு வானத்தில் நட்சத்திரம் அழகா இருக்கு! ஆனா, அந்த அழகு சூரியன் இல்லாட்டி தானே தெரியுது! அதே மாதிரி நாங்க எல்லாம் அவளை கண்டுக்காமல் இருந்தோம். அதன் பின் தான் அவளுக்கு நிருவோட அருமை தெரியுது. அவங்க நெருக்கமா ஆகிட்டு வர்றாங்க வள்ளிக்கண்ணு. சந்தோஷமா இருக்கு!” என்றான் கார்த்திக், மகிழ்ச்சி பொங்க.

“ஆமா, கார்த்திக். அவ மனசுல நிரு நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இருக்கான். ஜீரா அவ தான் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு” என அவன் கருத்தை ஆமோதித்தாள் சந்தியா.

“ம்ம்...நானும் அதே தான் நிருகிட்ட சொன்னேன். அவன் என்னை விட மோசம். பயந்து சாகுறான்.” என்றான்  கார்த்திக்.

“தோடா….வீரப் பரம்பரை...முத்தம் கொடுத்து சாச்சு புட்டாரு”, நக்கலடித்தாள் சந்தியா.

“பேசு...பேசு….எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்”, கார்த்திக்.

ப்படியாக பேசி, பேசி தூக்கம் கண்களை தழுவ இருவரும் படுப்பதற்கு கீழே இறங்கினர். தரையோடு விரிக்கப் பட்ட மெத்தையில் படுக்க போன கார்த்திக் திடீரென சிரிப்பு சத்தம் கேட்க திடுக்கிட்டு பார்த்தால், அவனருகில் படுத்திருந்த சிவா தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தான். “ஆடுறா ராமா….ஆடுறா ராமா” என்று சொல்லிக் கொண்டே. கார்த்திக்கிற்கு கடுப்பானது. தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினான்.

“என்னடா?”, என்றான் சிவா, பாதி கண்களை திறந்த படி.

“தூங்குறியா மச்சி?”, கேட்டான் கார்த்திக் சிரித்துக் கொண்டே.

கடுப்பான சிவா, “இதை கேக்க தான் தூங்கறவனை எழுப்பி விட்டியா? “, என கேட்டான்.

“ஆமா மச்சி, எனக்கு தூக்கம் வந்தது. குட் நைட் சொல்லலாம் எழுப்பினேன்.”, என்றான் கார்த்திக் பாசத்துடன்.

அப்பொழுது விசும்பல் சத்தம் கேட்க, “யாரோ அழுதுக்கிட்டு இருக்காங்களோ” என கேட்டுக் கொண்டே அருகிலிருந்த படுக்கையை நோட்டம் விட்டான் சிவா.

கார்த்திக்குடன் பேசி விட்டு தோழிகளுடன் படுக்க வந்த சந்தியா, அந்த அறையோடு அமைக்கப் பட்ட பால்கனியில்  விசும்பல் சத்தம் கேட்டதும்,   பதறி சென்று பார்த்தால், அங்கே மது அழுது கொண்டிருந்தாள். “ஹே...மது.. என்ன ஆச்சு?” அதிர்ச்சியாய் கேட்ட சந்தியாவிற்கு  பதிலேதும் பேசாமல் மது அழுது கொண்டே இருக்க, அவளை சமாதானப் படுத்த எண்ணிய சந்தியா, “என்ன புது இடம்னு பயமா? நிருகிட்ட பேச வேண்டியது தானே?” என கேட்டது தான் தாமதம், 

“நிருவை பத்தி பேசாத!  ஐ ஹேட் ஹிம்”, என்று  சொல்லி விட்டு வெடித்து அழுது கொண்டே உள்ளே ஓடினாள்… அவள் பின் சென்று சந்தியா சமாதானப் படுத்த முயல,

“நான் எந்த கோழைத் தனமான முடிவும் எடுக்க மாட்டேன். என்னை தனியா விடு சந்தியா ப்ளீஸ்…” என்று சொல்லிக் கொண்டே சுலோ பாட்டி அறைக்கு ஓடிச்சென்று அவருகில் இருந்த படுக்கையில் விழுந்தாள்.

ஒன்றும் புரியாமல் சந்தியா குழம்பிய நேரம், அவள் போனில் கார்த்திக்கின் அழைப்பு வர எடுத்தவளிடம் கார்த்திக், “வள்ளிக்கண்ணு, நிரு அவசரப்பட்டான்…”

“என்ன ஆச்சு ? அவ அழுதுகிட்டு இருக்கா..”, என்றாள் சந்தியா புரியாமல்.

“நிரு உணர்ச்சி வசப்பட்டு மதுக்கு முத்தம் கொடுத்துட்டானாம்..” என்றான் ரகசியமான குரலில்.

“நிருவா???!!!!”, கேட்டாள் சந்தியா நம்ப முடியாமல்!  

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 27

 

Next part of the series will be published on 14th Mar. This series is updated weekly on Fridays

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.