(Reading time: 14 - 28 minutes)

முதல்ல உன்னையும் உன்கூட இருந்த பையனையும் காட்டேரிகள்கிட்ட இருந்து காப்பாத்தி நிலாயுகத்தின் கோவிலில் விட சொன்னான்....அப்புறம் அந்த கருப்பு நாய் கருப்பு நாய் பைரவனோட உடலை அவனிடம் ஒப்படைக்க சொன்னான்....அப்புறம் இனிக்கு சாயங்காலம் உன்னையும் அந்த பையனையும் தூக்கிகிட்டு கிழக்கே இருக்குற காட்டில தூக்கி போட சொன்னான்....இது எல்லாத்தையும் என் கழுகுகளை வச்சு நான் செய்தேன்....கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாதவனை சந்திச்சு வரைபடம் இருக்கிற இடத்தை கேட்டேன்...அவன் அந்த வரைபடம் ஒரு நதிகரை பக்கம் இருக்குனு சொன்னான்....நான் என் கழுகுகளை வச்சு எல்லா நதிக்கரையிலும் தேடினேன்...ஆனா அது கிடைக்கலை.....அந்த மாதவன் என்னை ஏமாத்திட்டான்....இந்த உன்மைகள உன்கிட்ட சொல்ல தோணுச்சு அதான் சொன்னேன்.” – பொம்மு.

“அவன் சொன்னது உண்மைதான்...அந்த வரைபடம் நதிகரையிலதான் இருந்துச்சு...இதோ அதை நான் தான் வச்சிருக்கேன்” என்று பொம்மு கையிலிருக்கும் அந்த வரைபடத்தை காண்பித்தாள்.

“என்ன ? அது உன்கிட்ட தான் இருக்கா? உன்னோட அதிஷ்டம்! “ என்றான் ராஜேந்திரன் ஏக்கத்தோடு.

“கவலைபடாதீங்க....அந்த அமிர்த்ததில உங்களுக்கும் பங்கிருக்கு.....” என்று பொம்மு கூறியவுடன் ராஜேந்திரன். முகம் பிரகாசமாகியது.

“ரொம்ப நன்றி.....என் நாட்டு மக்களுக்கு நீ உயிர் பிச்சை கொடுத்திருக்க...நிச்சயம் உனக்கு துணையா நான் இருப்பேன்!” என்று கண்ணீருடன் மண்டியிட்டு எழுந்தான் ராஜேந்திரன்.

“பரவாயில்ல....வாங்க... உங்களைபத்தி  என்னோட நண்பனுக்கும் துறவீகளுக்கும் சொல்றேன்” – பொம்மு சந்தோஷமாக.

“போகலாம்....ஆனா அதுக்கு முன்னாடி நீ இன்னும் சில விஷயங்கள தெரிஞ்சுக்கணும்....” – ராஜேந்திரன்.

ரவிந்தும் துறவீகளும் நன்கு உறங்கியிருந்த சமயம் அவர்களை நோக்கி ஏதோ ஒன்று நெருங்கிக் கொண்டிருந்தது. அரவிந்த் கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்தான். பொம்முவை காணவில்லை.

“பொம்மு ! பொம்மு “ என்று பதறியபடி அரவிந்த் எழுந்தான். அவன் சத்தத்தை கேட்டு துரவீகளும் எழுந்தனர். பொம்மு அங்கே இல்லாததை அவர்களும் தெரிந்துக் கொண்டு அவர்களும் குரல் எழுப்பி தேட ஆரம்பித்தனர். ஒரு கருப்பு உருவம் தூரத்தில் நிற்பதைக் கண்டான் அரவிந்த். தை நோக்கி சென்றான். அதை நெருங்க நெருங்க அது பொம்மு இல்லை என்று அறிந்தான் அரவிந்த், இருந்தும் அதை நெருகினான். இருட்டில் அதை வனால் சரியாக காண முடியவில்லை. அந்த உருவம் எதையோ தேடியபடி இங்கேயும் அங்கேயுமாக தேடிக் கொண்டிருந்தது.

“யாரது?” – அரவிந்த் மெல்ல.

உடனே அது கோர சத்தத்துடன் அரவிந்தை திரும்பி பார்த்தது. மின்மினிபூச்சிகளின் வெளிச்சத்தில் தெரிந்தது அந்த உருவதின் முகம். அது ஒரு காட்டேரி. உடனே அரவிந்த் உடல் நடுங்கியது. அங்கிருந்து அவன் திரும்பி ஓட ஆரம்பித்தான். அந்த காட்டேரி அவனை துரத்த ஆரம்பித்தது. அரவிந்த் இருட்டில் எப்படி ஓடுவதென்று புரியாமல் ஓடினான். அவனை இரண்டு முறை வாயில் கவ்வ தவறியது அந்த காட்டேரி. அரவிந்த் அந்த விழுந்து புரண்டு கடைசியில் அவன் துறவிகள் இடத்திற்கே வந்து சேர்த்தான். ஆனால் அங்கே அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

அவனை சுற்றி நிறைய காட்டேறிகள் நின்றிருந்தன. துறவிகள் அருகில் இருக்கும் ஒரு பெரிய மரத்தில் கையிற்றால் கட்டப்பட்டிருந்தன. அரவிந்த் சுற்றி சுற்றி பார்த்தான். எங்கும் தப்ப வழியில்லாத அளவுக்கு காட்டேரிகளின் கூட்டம். அப்போது யாரோ அவன் பின்னே அவன் தோளில் கை வைத்தனர். அதிர்ச்சியில் அரவிந்த் திரும்பி பார்த்தான்.

அது ஒரு பெண். அவள் தன் இரண்டு  கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை ஒரு துணியால் மறைத்திருந்தாள். அவளது நீண்ட கூந்தல் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தது. அவளின் இரண்டு கண்களும் பூனையின் கண்கள் போல இருந்தது. அவள் சுடிதார் போன்ற ஒரு ஆடையை அணிந்திருந்தாள். அவள் கழுத்தில் விதவிதமான மணிகள் இருந்தது. இடது கையில் வில்லும் முதுகில் அம்புகளையும் கொண்டிருந்தாள். மொத்தத்தில் அவளின் தோற்றம் ஒரு போர் வீராங்கனை போன்று இருந்தது.

Bommuvin thedal“யாரு நீ?” என்று அந்த பெண் கேட்டாள். அவளின் குரல் கர்வம் கொண்டிருந்தது.

“என் பெயர் அரவிந்த்....” – அரவிந்த் மெல்ல கூறினான்.  அந்த பெண் தன்னை காப்பாற்ற வந்திருக்கிறாள் என்று அரவிந்த் நினைத்தான்.

“நீ எங்கிருந்து வந்திருக்க?...யாரு உன்னை இங்க கூட்டிட்டு வந்தது?” – அந்த பெண்.

“நான் இந்த காலத்தை  சேர்ந்தவன் இல்ல...நான் பொம்முகூட வந்திருந்தேன்...” – அரவிந்த்

“என்ன பொம்முவா? யாரது?” – அந்த பெண்.

“அது என்னோட பொம்மை.....அது ஒரு மந்திரபொம்மை ...அது பேசும்...மனிஷங்களை போல நடந்துக்கும்...” – அரவிந்த்.

“நீ எப்படி இந்த காலத்துக்கு வந்த? யாரு உங்களை கூட்டிட்டு வந்தது?...” – அந்த பெண்.

“நான்தான் எஜமானி “ என்று ஒரு புதிய குரல் அங்கே வந்தது. எல்லாரும் திரும்பியபோது மாதவன் தன் குதிரை வண்டியில் அங்கே வந்து நின்றான். அந்த பெண் அவனை கண்டுகொள்ளவில்லை. மாதவன் வண்டியை விட்டு இறங்கி அந்த பெனின் முன் மண்டியிட்டு எழுந்தான்.

“இவன்தான்...இவன்தான் எங்களை இந்த காலத்துக்கு கூட்டிட்டு வந்தவன்....” – அரவிந்த்.

அந்த பெண் இப்போதுதான் மாதவனை கண்டாள்.

“என்ன இது மாதவா?” எதுக்காக இவனை கூட்டிட்டு வந்த? யாரு இவன்?” – அந்த பெண்.

“சொல்றேன் எஜமானி.....ராஜா மகேந்திரன் இன்னும் இறக்கல...இத்தனை நாள் அவர் ஒரு ஆன்மாவா  உங்களோட பொம்மைகுள்ள  நடைபிணமா கிடந்தார். எனக்கு அது தெரிஞ்சுபோச்சு...அதனால உங்களோட பொம்மைய உங்களுக்கே தெரியாம திருடி அந்த பொம்மைகுள்ள நடைபிணமா இருக்கிற அந்த ஆன்மா முழிக்க வைக்க ஒரு வேலைய செய்தேன்....” – மாதவன்.

அரவிந்துக்கு ஒன்றும் புரியவில்லை.

“அந்த ஆன்மாவ எழுப்ப என்ன பண்ண ?” – அந்த பெண்.

“ மகேந்திரனோட நாலாவது ஜென்மம் தான் பைரவன்னு உங்களுக்கு தெரியும்...அதனால இந்த ஆன்மாவ எழுப்ப அந்த பைரவன்கிட்ட உதவி கேட்டேன்.....அந்த பைரவன் அந்த பொம்மைய பல ஜென்மங்கள் தாண்டி ஒரு பையன்கிட்ட  கொண்டு போய் பிறந்தநாள் பரிசா கொடுத்துச்சு.....அந்த பையன் அந்த பொம்மைய தொட்டதும் அந்த பொம்மைக்குள்ள இருக்கிற ஆன்மா எழுந்துடுச்சு....அந்த பையன்தான் இந்த அரவிந்த்.....பொம்முனு சொல்ற இவனோட பொம்மைதான் உங்களோட பொம்மை...அதாவது மகேந்திரன் இப்போ பொம்முவா வாழ்ந்துக்கிட்டு இருக்காரு,...” – மாதவன் கள்ளசிரிப்புடன்.

இதைகேட்டு அந்த பெண் ஒருப்பக்கம் அதிர்ச்சியானாள். மறுப்பக்கம் அரவிந்த் அதிர்ச்சியானான். பொம்முவின் நாலாவது ஜென்மம்தான் பைரவன் என்பதும் அவன் முன் நிற்கும் அந்த பெண்தான் சூனியக்காரி ஷானுதா என்று அவன் புரிந்துக்கொண்டதும் அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்ற?...நான் கஷ்டப்பட்டு கொன்ன மகேந்திரனோட ஆன்மா ஏன் அழியல?” – ஷானுதா.

“இல்ல எஜமானி...நீங்க மகேந்திரனை கொல்ல அனுப்பின சாபம். தப்பா போயிடுச்சு....அதனால் மகேந்திரன் ஆன்மா இறக்காமல் உங்களோட பொம்மைகுள்ள பதுங்கிடுச்சு.....” – மாதவன்.

“இவளோ தெளிவா எல்லாத்தையும் தெரிஞ்சவச்சுகிட்ட நீ எனக்கே துரோகம் செய்யறியா மாதவா?” – ஷானுதா கோபத்துடன்.

“நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணேன்?” – மாதவன் அப்பாவியை போல்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.