(Reading time: 14 - 28 minutes)

"ந்த பொம்மைய கொன்னு அந்த ஆன்மாவை அழிக்க வேண்டியதுதானே?” – ஷானுதா.

“அதுக்காகத்தான் இந்த பையனையும் அந்த பொம்மையையும் இந்த ஜென்மத்துக்கு கூட்டிட்டு வந்து காட்டுகுள்ள அனுப்பி காட்டேரிகள் மூலமா சாகடிக்கலாம்னு பாத்தேன்....ஆனா இந்த பையனும் அந்த பொம்முவும் எப்படியோ தப்பிச்சு போய்டாங்க....ஆனா பைரவனை நம்ம காட்டேரிகள் கொன்னுடாங்க  “ – மாதவன் அரவிந்தை முறைத்தபடி.

“என்ன பைரவனை கொன்னுடான்களா?....என்னால நம்பவே முடியல....நானே அந்த கருப்பு நாய்கூட மோதி அதை கொல்ல முடியாம இத்தனை நாள் தவிச்சேன்....ஆனா என் காட்டேரிகள் கொன்னுடான்களா?....ரொம்ப சந்தோஷம்....அப்போ நாலாவது ஜென்மத்தையும் கொன்னாச்சு....இனி மிச்சம் இருக்கிறது அந்த ஆறாவது ஜென்மம்மான பொம்முவைதான்” – ஷானுதா ஆச்சிரியமாக.

“என் எதிரிக்கு நண்பனா இருக்கிற இந்த பையனையும் கொன்னுடறேன்....” என்று ஷானுதா அரவிந்தின் கழுத்தை பிடித்து நெரித்தாள். அரவிந்த் துடித்தான்.

“வேணாம்...அவனை கொல்லாதீங்க” – மாதவன் ஷானுதாவின் கைகளை பிடிக்க உடனே ஷானுதா அரவிந்தின் கழுத்தை விட்டாள்.

“இந்த பையன் சாதாரண பையன் இல்ல...இவனுக்குள்ள ஏதோ ஒரு சக்தி இருக்கு....அதனாலதான் இவன் கைபட்டதும் அந்த பொம்மைகுள்ள இருந்த ஆன்மா எழுந்துடிச்சு.....இவனால நமக்கு நெறய பலன் கிடைக்கலாம் எஜமானி..” – மாதவன்.

“அப்படியா?........நீ சொல்ற யோசனைய நான் எப்பவும் மறுக்கமாட்டேன் மாதவா....இனி இவன் நமகூடவே இருக்கட்டும்...ஆனா அந்த பொம்மு எங்கே?.” – ஷானுதா அரவிந்தை பார்த்தபடி.

அரவிந்த் முழித்தான்.

“தப்பிச்சு போயிருக்காள்.....இவங்களே அவளை தேடிபாத்துகிட்டு இருந்தத நான் கவனிச்சுகிட்டு இருந்தேன் எஜமானி.....” – மாதவன்.

மாதவன் அரவிந்தின் பக்கம் வந்தான்.

“உன்னையும் அந்த  துறவீகளையும் விட்டுட்டு அந்த பொம்மு ஓடிபோயிடுச்சு அரவிந்த்....உனக்கு அது துரோகம் பண்ணிடுச்சு....இப்போ நீ எங்ககூட வந்தாதான் உயிர் பிழைக்க முடியும்....அதாவது உன்னோட காலில் பரவி வர காட்டேரி விஷத்தை முறிக்க நீ எங்கூட வந்தாதான் முடியும்...” என்று மாதவன் கூற அரவிந்த் யோசித்தான்.

அரவிந்துக்கு ஷானுதா மேல் பயம். ஆனால் என்னதான் மாதவன் அவனுக்கு ஒரு கெட்டவனாக தெரிந்தாலும் அவன் சொல்லும் விஷயத்தை ஏற்கத்தான் வேண்டும். அரவிந்தை பொறுத்தவரை பொம்மு அவனைவிட்டு எங்கோ ஓடிவிட்டாள் என்று அவன் நம்பினான். இனி பொம்முவை அவன் நம்புவதாக இல்லை. அதனால் அரவிந்த் ஷானுதவுக்கு சேவை செய்ய ஒப்புகொண்டான்.

ஷானுதா தற்போது அங்கே மரத்தில் கட்டப்பட்டிருக்கும் துறவீகளை பார்த்தாள்.

“அட நீங்களா?...என்னை எதிர்த்து போர்ல மகேந்திரனுக்கு துணையா வந்த துறவிகள் தான?...உங்களோட மாயஜால சக்தி எங்கே?” – ஷானுதா.

“கடைசியா நடந்த போர்ல அவங்க அவங்களோட சக்திய இழந்துடாங்க எஜமானி....” – மகேந்திரன்.

“என் கண்ணுல அன்னிக்கு மண்ணை தூவிட்டு மகேந்திரனோட உடலோடு மாயமாகிடீங்க....இனிக்கு மாட்டிகிடீங்க” என்று ஷானுதா துறவீகளை நெருங்கினாள்.

“சூனியக்காரியே....  மகேந்திரன் இப்போ பொம்முவாக  வந்திருக்கிறான்....உன்னை அவன் நிச்சயம் கொல்வான்” – ஒரு துறவி கத்தினார்.

“அந்த 5 ஜென்மத்தையும் கொன்னாச்சு....இந்த ஆறாவது ஜென்மமான பொம்முவை அழிக்கிறது எனக்கு பெரிய விஷயமில்ல” – ஷானுதா தெனாவட்டாக.

“ஒருவேளை பொம்முவையும் நீ கொன்னுடீனா...அடுத்ததா கடைசி ஜென்மம்....ஏழாவது ஜென்மம் உன்னை வந்து கொல்லும்” – துறவி.

“உங்களுக்கு கடைசியா ஒரு உண்மையா சொல்றேன்...இப்போ நீங்க பொம்முனு சொல்ற மகேந்திரனுக்கு மொத்தம் 6 ஜென்மங்கள் தான் இருக்கு....அதனால இந்த பொம்முவை கொன்னுட்டா...அடுத்து எந்த ஜென்மமும் கிடையாதுன்னு நான் எப்போவோ கண்டுபிடிச்சிட்டேன்....” – ஷானுதா

துறவீகளும் அரவிந்தும் அதிர்ச்சியடைந்தனர். ஹானுதா கையை சொடுக்கினாள். உடனே அந்த மரம் 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 05

Go to Bommuvin Thedal episode # 07

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.