(Reading time: 18 - 35 minutes)

 

ண்களை இறுக மூடியவள் பின்னர் நிதானித்து திறந்தாள்.. அதை ஷன்வி குறித்துக் கொண்டாள்…

“என்னோட பெயர் நல்லா இருக்கா மிஸ் ???”

“ரொம்ப நல்லா இருக்கும்மா உன்னைப் போலவே” என்று சிரித்தாள் ரிகா…

“ஓ.கே மிஸ்… நான் class-க்கு போறேன்… நேரமாச்சு… இல்லைனா சுபா மிஸ் திட்டுவாங்க…” என்று சொல்லி கீழே இறங்க முயன்றாள்… அவளை இறக்கி விட்டவள், “நான் மிஸ் இல்லம்மா” என்று சொன்னாள்…

“நீங்க ஷன்வி மிஸ் ஃப்ர்ண்ட் தானே?? உங்களை நான் அடிக்கடி அவங்க ரூம்-ல பார்த்திருக்கிறேன் மிஸ்.. அதனால தான் உங்களை மிஸ் சொல்லிட்டேன்.. அப்போ நீங்க மிஸ் இல்லையா மிஸ்??”..

“இனி அவளும் மிஸ் தான் அபி… நீ class-க்கு போ சரியா??” என்று அவளை அனுப்பி வைத்தாள் ஷன்வி…

அவள் திரும்பி இருவருக்கும் கையசைத்துவிட்டு வகுப்பிற்குள் போனாள்…

ரிகா முன்னே செல்ல ஷன்வி அவளின் பின் சென்றாள்… அங்கே அட்மிஷனிற்கு நிறைய பேர் வந்திருந்தார்கள்… ஷன்வி ரிகாவிடம் அங்கே வரும் குழந்தைகளிடம் சிறு சிறு கேள்விகள் நீதான் கேட்க வேண்டும், நான் அவர்களின் பெற்றோரிடம் ஸ்கூல் குறித்தும், ஸ்கூலுக்கு வர வேண்டிய நேரம் பற்றியும் பேச வேண்டும் என்று வீட்டிலேயே கறாராக சொல்லிவிட்ட படியால் ரிகாவும் அப்படியே நடந்து கொண்டாள்… ஒரு வழியாக பாதி அட்மிஷன் முடித்து இருவரும் நிமிர்ந்த போது மணி இரண்டு ஆகிவிட்டது… சாப்பிட்டு முடித்து மீண்டும் அதே வேலையை ஆரம்பிக்க ஒரு வழியாய் அன்றைய அட்மிஷன் முடிந்த நிம்மதியில் இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்…

மாலை நேரத்தில் அந்தி மயங்குகிற பொழுதில் அந்த ஊட்டி குளிரில் இருவரும் இயற்கை காற்றை அனுபவித்தபடி வீடு வந்து சேர்ந்தனர்… செல்லம்மா பாட்டி ஸ்கூட்டி சத்தம் கேட்டதும்,

“வா ஷன்வி, வா ரிகா… சூடாக பஜ்ஜி செய்து வைத்திருக்கிறேன்… வாங்க 2 பேரும் சாப்பிடலாம்” என்றார்…

“சரி பாட்டி ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றாள் ஷன்வி…

“நானும் 5 நிமிஷத்தில் வந்துடுறேன் பாட்டி” என்றதும் இருவரும் ரிகாவா பேசினது என்று ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டனர்… அவள் பதிலுக்கு சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்… பாட்டி என்னவென்று கேட்க ஷன்வியோ பிறகு சொல்வதாக சமிக்க்ஷை செய்தாள்..

இரவு உணவு வேளையில் ஷன்வி மெதுவாக அந்த சிறு பெண்ணை நினைவுபடுத்தினாள்…

ரிகா ஹும் கொட்டினாள்… அவள் பெயரென்ன ரிகா??, பபி யா ? சுபி யா ? சரியாக நினைவில்லை..

அவள் மெலிதாக உச்சரித்தாள்… அழுத்தமாக…. “அ…..பி…” …

“யெஸ்… அ…பி… அ…பி… அழகான பெயர் தான்… இல்லையா ரிகா ?...” என்று கேட்டதும்,

வாயருகே கொண்டுபோன சாப்பாடை ஒரு நிமிடம் நிறுத்தியவள் பிறகு வலுக்கட்டாயமாக அதை விழுங்கிவிட்டு, போதும் பாட்டி… என்று எழுந்து சென்று விட்டாள்…

அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்த பாட்டி “என்னாச்சு மா இவளுக்கு ?? அதிசயமாய் கொஞ்சம் சிரித்த முகமாக இருக்கிறாளே, இன்னைக்கு 2,3, வார்த்தைப் பேசிவிட்டாள் என்று சந்தோஷப்பட்டேன்… இப்போ மறுபடியும் சோகமாக மாறிவிட்டாளே.. என்ன மா விஷயம் ?? என்ன நடந்தது ???”

காலையில் நடந்ததை சொல்லிவிட்டு, இப்பொழுது அவளின் முகம் அந்த பெயரை கேட்டதும் மாறியது போல் ஸ்கூலிலும் மாறியதை பாட்டியிடம் எடுத்துரைத்தாள்…

ஷன்வி சொல்லியதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்த பாட்டி, “அந்த பெயருக்கும் இவளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு, அது மட்டும் நன்றாக தெரிகிறது.. நீ அவளின் வழியிலேயே சென்று சரி செய்… என்னால் ஆன உதவியை நானும் செய்கிறேன்.. நீ சீக்கிரம் போய் தூங்குமா ஷன்வி..” என்றபடி சென்றுவிட்டார்…

ந்து மாதங்கள் ஓடி விட்டது… வழக்கம் போலவே ரிகா ஓரிரு வார்த்தை, சிறு தலை அசைப்பு,  குட்டிப்புன்னகை… அதுவும் அன்று அந்த குழந்தையைப் பார்த்தால் மட்டுமே… அவளையும் ரிகா இத்தனை மாதங்களில் பார்க்காத நாட்களை எண்ணிப் பார்த்து விடலாம்…

பல நாள் நீயும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடு என்று ஷன்வி கெஞ்சி பார்த்தும் முடியாதென்றவள் அபியின் வகுப்பிற்கு தானே முன் வந்து சொல்லிக்கொடுக்கிறேன் என்றாள்… ஷன்விக்கு அவளின் முடிவு மகிழ்ச்சியைத் தந்தது…

 ரிகா சின்ன சின்ன ஒவியங்கள் வரைய, குட்டி குட்டி கதை சொல்ல, எளிமையான பாட்டு, முறையான பரதம் என தனக்கு தெரிந்தவற்றை எல்லோருக்கும் கற்று கொடுத்தாள்… குழந்தைகளுக்கு பிடித்தமான தோழியாகவும் மாறிப்போனாள்… அதோடு அந்த வகுப்பின் நல்ல ஆசிரியை என்ற பெயரையும் தனதாக்கிக்கொண்டாள் ரிகா… அதன் விளைவு, அபியின் அம்மா அனுவிற்கும் அவளைப் பிடித்து விட்டது..

அனு இவளிடம் சகஜமாக பேசுவாள், அபியை ஸ்கூலில் விட வரும்போதும் சாப்பாடு கொடுக்க வரும்போதும்… ரிகா பதிலுக்கு அதே அக்மார்க் லேசான சிரிப்பை மட்டுமே தந்தாள்… அப்படி இருந்ததாலோ என்னவோ அனுவிற்கு ரிகாவை மிகவும் பிடித்தது… அவளே தானாக வந்து ஷன்வி-ரிகா விடம் பேசுவாள்…

ஷன்வியும் ரிகா மற்றவர்களிடம் பேசி பழகினாளாவது அவளுடைய அந்த ஒதுக்கம் மறைந்து பழைய ரிகாவாக மாறிட மாட்டாளோ என்ற நப்பாசையின் காரணத்தினால் அனுவிடம் பேச சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பாள் தான்… ஆனால் இவளல்லவோ பேசவேண்டும்.. ஹ்ம்ம்..

றுநாள் அதிகாலையில் பொழுது விடிந்ததும் ஷன்வி ரிகாவைத் தேடி வெளியே வந்து அவள் வழக்கமாக இருக்கும் இடத்தில் பார்த்ததும் அவளுக்கு பகீர் என்றது.. அங்கு அவள் இல்லை… வேறெங்கு போயிருப்பாள் என்று சிந்திக்கும் முன் பாட்டி வந்து அவளைக் காணோம் என்று கூறிய பதிலில் மேலும் உறைந்துவிட்டாள்…

இரண்டு மணி நேரம் சென்ற பின்பும் அவளைக் காணாது தெருக்களில் தேடி அலைந்தாள்… அவர்கள் வழக்கமாக செல்லும் கடை, பூங்கா, ஸ்கூல், மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் தேடினாள்… அவள் இல்லாது போகவே, என்ன செய்வது இனி என்று வீட்டிற்கு வந்தாள்,

அங்கே பாட்டி கவலையோடு நிற்பதைப் பார்த்ததும் இனி தேடி பலனில்லை, பேசாமல் போலீஸ் கம்ப்ளெய்ன்ட் கொடுத்து விடலாம்,, அது தான் சரி என்று முடிவெடுத்து பாட்டியிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல எத்தனித்தவள் அங்கே ரிகா வருவதைக் கண்டு ஓடி போய் அவளைப் பளார் என்று அறைந்தாள்…

அறை வாங்கிய அவள் அழவில்லை.. ஆனால் ஷன்வி தான் அழுதுகொண்டே அவள் தோளைப் பற்றி உலுக்கினாள்..

“எங்கடீ போயிருந்த?? உன்னைக் காணாமல் எவ்வளவு நேரம் தெருவெல்லாம் சுத்தினேன் தெரியுமாடீ ?? சொல்லுடீ.. கேட்கிறேனே… இப்படி உன்மத்தம் பிடித்தவள் போல இருந்து இன்னும் எத்தனை நாள் நீ தாக்குப் பிடிக்கப்போறடீ ??? பதில் சொல்லு… சொல்லப்போகிறாயா இல்லையா நீ ??.. எங்கே போயிருந்தாய் சொல்லுடீ ??..”

“கோவிலுக்குப் போயிருந்தேன்…….”

“கோவிலுக்கா???!!!... “பாட்டியும் ஷன்வியும் ஒரே நேரத்தில் ஒரு சேரக் கூவினர்…

இங்கு வந்த இத்தனை நாட்களில் அவள் கோவிலுக்கு போவது இதுவே முதல் முறை… அதனால் அவர்கள் திகைத்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லையே… முதலில் தன்னிலைக்கு வந்தது பாட்டி தான்..

“அதை சொல்லிட்டுப் போயிருக்கலாமே மா???... நாங்க பயந்து போயிட்டோம்… சரி சரி உள்ளே வா… வந்து சாப்பிடு… “

“மன்னிச்சிடுங்க பாட்டி, சாரி ஷன்வி, சீக்கிரம் வந்துடலாம் என்று போனேன்… நேரம் ஆகிவிட்டது… இனி இப்படி பண்ண மாட்டேன்… சாரி ஷன்வி…” என்று அவளின் கைப்பிடித்து மன்னிப்பு கேட்டுவிட்டு, “பாட்டி எனக்கு பசியில்லை.. நீங்க சாப்பிடுங்க..” என்று உள்ளே சென்றுவிட்டாள்..

ஷன்வி ரிகாவிடம் அடித்ததற்கு மன்னிப்புக்கேட்டாள்… “எனக்கு எந்த கோபமும் இல்லை ஷன்வி.. நிஜமா எனக்கு சந்தோஷமாக தான் இருந்தது.. என்னை தேடவும் ஒரு ஜீவன் இருக்கேன்ற நினைவு எனக்கு இன்றைக்கு கிடைத்தது.. வா மணி இப்பவே 12.. ஸ்கூலுக்குப் போகலாம் என்று அவளையும் கிளப்பினாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.