(Reading time: 40 - 80 minutes)

 

வன் கூறியதை சிறிது நேரம் யோசித்தவனுக்கு சிரிப்பாக தான் இருந்தது.. அவனது கூற்றை மீண்டும் யோசித்து பார்த்தால் ஏமாற்றுகிற நான் அஸ்வத்தை விட சாமத்தியமாக இருப்பது எனது தப்பில்லையே என்று தோன்றியது. அந்த யோசனையே அவனுக்கு நிம்மதியாக இருக்க, தானாக ஒரு முறுவல் தோன்றியது... அதை கண்டு அஸ்வத் என்னவென்று கேட்க, ஒன்றுமில்லை என்று சமாளித்தவன் மீண்டும் அனு விஷயத்திற்கே வந்தான்...

“நீ எந்த அளவுக்குடா அனுவை லவ் பண்ற?”

அவன் தன் காதலை பற்றி கேட்டதும் மனம் வானத்தில் பறக்க துவங்கியது, தன் சீண்டளுக்கெல்லாம் பொய்யாக முறைத்தும், சிரமப்பட்டு மறைக்கும் அனுவின் கன்னத்து சிவப்பும், உரிமையாக திட்டும் அவளது செல்ல கோவங்களும் அவன் கண்களில் வந்து சென்றது... அந்த நினைவிலேயே அமர்ந்த நாற்காலியில் உல்லாசமாக சாய்ந்துக்கொண்டவன் “விவரிக்க முடியாத அளவுக்குடா..” என்று கனவுலகில் மிதந்தவாறு கூறினான்.

அவனது முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு தர்ஷனுக்கு எருச்சலாக இருந்தது. “இருடா இரு நாளை மறுநாள் இந்த சந்தோஷத்துக்குலாம் முடிவு வச்சிருக்கேன்...”

“பாவம் அந்த பொண்ணு உன்கிட்ட வந்து மாட்டிகிட்டாள்” என்று கிண்டல் செய்வது போல் கூறினான்...

நண்பர்களுக்குள் பேசும் கிண்டல் பேச்சு தானே, தர்ஷனின் மறுபுறம் தெரியாமல் விளையாட்டாக பேசினான்... தோளைக்குலுக்கி கொண்டு “அது அவள் தலையெழுத்து” என்று சிரிப்போடு வில்லன் போல கூறினான்.

“எப்பா உனக்குள்ளையும் ஒரு வில்லன் இருக்கான்னு இப்போதான் தெரியுது அஸ்வத் சரியான கேடிதான் நீ... உன்னையும் அந்த பொண்ணு நம்புதே...” என்று என்னவோ பெரியதாக அவன் ஏமாற்றிவிட்டது போல அவன் கூற, விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த அஸ்வத்தும் அதற்கேற்றார் போல பேசினான்.

“என்ன செய்வது அவள் ஏமாந்து போறது அவளுடைய தப்பு” என்று கண்சிமிட்டி கூறினான் அவன்...

இப்படியே பேச்சு தொடர்ந்து போக அலுத்து போய் உறங்க சென்றனர் இருவரும்... காலை எழுந்தவுடன் அஸ்வத் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட, தர்ஷன் ஒரே ஓட்டமாக சென்று வீட்டின் பின் புறமாக வைத்திருந்த கண்காணிப்பு காமெராவின் videovai எடுத்து பார்த்தான்.... அதை ஒரு முறை ஓட விட்டு பார்த்தவன் வெற்றி புன்னகை உதிர்த்தான்.. அவன் நினைத்தது போலவே வீடியோ அமைத்திருந்தது... அவன் கேட்க நினைத்த கேள்விகளும் சரி அதற்கேற்றார் போல் அஸ்வத் தந்த பதில்களும் சரி... வெற்றி புன்னகையோடு அந்த videovai எடுத்துக்கொண்டு தன் நண்பனை (தேவைக்கு நண்பன் என்று சொல்லிக்கொள்ள கூடிய ஒருவனை) பார்க்க சென்றான்.    

முடிய போகும் தேர்வை பற்றிய நினைவுகள் ஒருபுறம்.. தோழிகள் எல்லாம் சேர்ந்து ஒரே அரட்டை அடிக்க, படிக்கவே யாருக்கும் தோன்றவில்லை. இன்னும் ஒரு நாள் தான் இன்னும் ஒரு நாள்தான் என்று சொல்லி சொல்லி மனதை தேற்றி படித்தனர்... அவ்வப்போது இடைவெளி விடும்போதெல்லாம் அனுவிற்கு, மறுநாளை பற்றிய கனவு தான்.. மறுநாள் அஸ்வத்தின் பிறந்தநாள், மனம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு, அஸ்வத் பல நாட்களாய் எதிர்பாத்த அந்த மூன்று வார்த்தைகளை சொல்ல போகும் சந்தோஷம் படபடப்பு எல்லாம் கலந்திருந்தது அவளுக்கு.. என்ன சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசித்தவளுக்கு எப்போது அடுத்த நாள் வரும் என்றிருந்தது.. அஸ்வத் துளைத்து விட்டதாக நினைத்த மோதிரத்தை அழகாக ஒரு குட்டி பெட்டியில் வைத்து ஒரு ரிப்பன் போல் அதன் மேல் கட்டி அவனுக்காக எடுத்து வைத்திருந்தாள்.

இரவு பன்னிரண்டை தொடுவதற்காக காத்திருந்தாள் அனு. புத்தகத்தை பார்ப்பதும் கைபேசி திரையை பார்ப்பதுமாக நேரம் கடத்தியவள் சரியாக 11.59 அவனுக்கு அழைத்தாள்... அவள் எதிர்பார்க்காத வண்ணம் முதல் அழைப்பிலேயே அஸ்வத் எடுத்துவிட்டான்... அனுவிற்கு ஆச்சர்யமாக தோன்ற “ஹே...என்ன நீ? படிக்கலையா? முதல் ரிங்க்லையே எடுத்திட்ட?”

“அது... படுச்சிட்டு தான் இருந்தேன் மணி பார்க்க on பண்ணேன் கரெக்டா உன் கால் அட்டென் ஆகிடுச்சி” என்று நன்றாக மழுப்பினான்.

“பாருடா... நம்பிட்டேன்....” என்று ஒரு இழுவையோடு கூறினாள். அவளது பேச்சிலேயே அவள் நக்கல் செய்கிறாள் என்று புரிந்துபோக பதிலுக்கு பேச வாய்திரந்தவனை... “சரி சரி நீ எதுவும் பேச வேண்டாம்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் உனக்கு ரொம்ப நல்ல நாளா இருக்கும். நீ ஆசைப்பட்டதே தான் நடக்கும்” என்று முடித்தாள். அவனது பிறந்தநாளின் முதல் வாழ்த்து அதுவும் மனதுக்கு பிடித்தவளின் வாழ்த்து, தெவிட்டாத இன்பமாக இருந்தது அவனுக்கு. “thank you so much...” என்று ஆனந்தமாக கூறினான்.

“சரி நாளைக்கு எக்ஸாம் முடுச்சிட்டு வெயிட் பண்ணு” என்று எப்போதும் நடப்பதுதான் என்றாலும் ஆசையாக கூறினாள்..

“ஏம்மா ஏதாவது ஆசையா கொடுக்க போறியா?” என்று உல்லாசமாக அவளை கிண்டல் செய்தான்.

“ஆமா ஆமா நல்லா கன்னத்திலே கொடுப்பேன்” என்று அவள் ஒரு அர்த்தத்தில் கூற, “அதுக்கு நான் தயார்ப்பா” என்று வேறு அர்த்தத்தில் அஸ்வத் கூறினான்.

வினாடியில் அவனது கூற்று புரிந்துப்போக “இருப்ப இருப்ப, நல்லா உதய் கொடுத்தால் தயாராக இருப்ப” என்று பொய்யாக கோவித்து கொண்டாள்.

“சரி சரி கோவப்படாத.. எனக்கு என்ன gift அதை சொல்லு...”

“மக்கு மக்கு யாராவது கொடுக்குற கிப்டை சொல்லுவாங்களா? நாளைக்கே வந்து பார்த்துக்கோ அது வரைக்கும் யோசி” என்று அவனை கொஞ்சம் குழப்பிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அனு...

டுத்த நாள் விடியல் பரபரப்பாக இருந்தது... இரவு ஆரம்பித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், காலையும் தொடர்ந்தது. தோழர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவித்து கூடவே ட்ரீட்டும் கேட்டனர். அவர்களை ஒருவழியாக சமாளித்து பெற்றோரோடு பேசிவிட்டு தேர்வுக்கு கிளம்பினான். அவனுக்காகவே காத்திருந்தாற்போல் தர்ஷன் அறைக்கு முன்னே நின்றான், அனைவரையும் போலவே வாழ்த்துக்கள் கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்க, அனு ஓடிவந்தாள், “போகாத அஸ்வத் நில்லு” ஓடிவந்து மூச்சு வாங்கியவள், “many more happy returns of the day.. “ என்று கைக்கொடுத்து வாழ்த்தினாள். அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் அதை ரசித்து பார்க்கும் அஸ்வத்தையும் மாறி மாறி பார்த்தவாறு நின்ற தர்ஷன் இன்னும் எவ்வளவு நேரம்னு நானும் பார்க்குறேன் என்று மனதில் பொருமிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.    

தேர்வும் துவங்கியது..கடைசி நாள் என்பதாலோ என்னவோ தேர்வு எப்போது முடியும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் தலை தூக்கி நின்றது அனைவருக்கும்... பொருத்து பொருத்து பார்த்த சிலர் இந்த மதிப்பெண் போதும் என்று கூட வந்துவிட்டனர். அனுவும் வந்துவிட்டிருந்தாள், தேர்வு முடித்து வந்தவர்கள் எல்லாம் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர், கிண்டல் அரட்டை என்று எப்போதும் போல் அங்காங்கே நின்று பேசினர். இனிமேல் இப்படி சேர முடியுமோ என்ற வருத்தம் அனைவரிடமும் இருந்தது... ஒவ்வரு துறை கட்டடத்தின் முன்னே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்... இவையனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு அவ்வளவு தானே கல்லூரி வாழ்க்கை என்று வருத்தமாக இருந்தது.

அமைதியாக தேர்வு நடக்காத ஒரு அறையில் சென்று அஸ்வதுக்காக காத்திருந்தாள். மனம் கொஞ்சம் படபடக்க தான் செய்தது. அவள் எதிர்பார்த்து காத்திருக்க, அங்கே அஸ்வத்திற்கு பதிலாக தர்ஷன் வந்தான்.

“ஹாய் அனு என்ன அஸ்வத்காக காத்திருக்கியா?” என்று எதிர்பாராமல் வந்து நின்றான். அவன் வருவான் என்று எதிர்பார்க்காததால் கொஞ்சம் தடுமாறினாலும் கையில் இருந்த gift மெதுவாக மறைத்துவிட்டு “ஆம்” என்று தலை ஆட்டினாள்.

அவள் மறைத்ததை பார்த்தும் பார்க்காதவன் போல் இருந்துவிட்டு, “அவன் வர லேட் ஆகும், புத்தகத்தில இருக்குறதையெல்லாம் எழுதிட்டு தானே வருவான்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.