(Reading time: 40 - 80 minutes)

 

வன் கூறுவதை கேட்டு சிரிப்பு வர, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள். தர்ஷன் அவனது நாரதர் வேலையை ஆரம்பித்தான். “அனு உன்கிட்ட ஒன்னு சொல்லணும், சொல்லுறதால எனக்கு எந்த பயனும் இல்லை ஆனால் நீ ஏமாந்திட கூடாதுன்னு தான் இதை சொல்ல வந்திருக்கேன். நீ அஸ்வத்தை லவ் பண்றன்னு எனக்கு தெரியும் ஆனால் அவன் உன்கிட்ட உண்மையா இல்லை அனு ஏமாந்திராத...” அவன் கூறிய செய்தி முதலில் சிரிப்பாக தோன்றியது என்ன உளறுகிறான் என்று எண்ணி மெல்லியதாக அவள் சிரிக்கவும் தர்ஷன் மீண்டும் தொடர்ந்தான். “நீ நம்ப மாட்டன்னு எனக்கு தெரியும் அனு, நேத்து முன்தின நாள் என்னோட வீட்டுக்கு அஸ்வத் வந்திருந்தான். அப்போ அவன் பேசுனது எங்க வீடு கேமராவில் பதிவாகிருக்கு பாரு என்று அவன் தன் கைபேசியை நீட்ட, முதலில் வாங்க மறுத்த அவளது கைகள் தானாக அவனிடம் சென்றது.. அதுவே தர்ஷனுக்கு முதல் வெற்றியாக தோன்றியது. அவள் videovai பார்க்க துவங்கினாள்.

முதலில் அவர்கள் பிரகாஷ் என்பவின் காதலை பற்றி பேசியது இருந்தது, அதற்கு அஸ்வத் கூறியது தொடர்ந்து வர, அதில் பெண்கள் எல்லாருமே இதில் முட்டாள்கள் தான் என்றதுமே கொஞ்சம் அனுவிற்கு முகம் மாறியது அதை தொடர்ந்து பேச்சுக்கள் எல்லாம் தோரணையாக மாற்றபட்டிருந்தது.

“நீ எந்த அளவுக்குடா அனுவை லவ் பண்ற?” – தர்ஷன்

அவன் கூறிய பதிலை மாற்றி அவன் முகம் பார்த்து பேசாமல் அவன் நக்கலாக சிரித்தது போல் அமைந்திருந்தது.

“இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் அஸ்வத்?”

“இல்லைன்னு அர்த்தம்” என்று எதுக்கோ அவன் கூறிய பதில் இவனது கேள்விக்கு பொருந்தியது.

“பாவம் அந்த பொண்ணு உன்கிட்ட வந்து மாட்டிகிட்டாள்”

தோளைக்குலுக்கி கொண்டு “அது அவள் தலையெழுத்து” என்று சிரிப்போடு வில்லன் போல அவன் கூறியதும் இருந்தது.

“எப்பா உனக்குள்ளையும் ஒரு வில்லன் இருக்கான்னு இப்போதான் தெரியுது அஸ்வத் சரியான கேடிதான் நீ... உன்னையும் அந்த பொண்ணு நம்புதே...”

“என்ன செய்வது அவள் ஏமாந்து போறது அவளுடைய தப்பு” என்று கண்சிமிட்டி கூறினான் அவன்... இவற்றை புதிதாக பார்பவருக்கு என்னவோ அஸ்வத் ஏமாற்றுவது போல தான் தெரியும் அப்படி வீடியோ எடிட் செய்திருந்தனர். அஸ்வத்தையும் தர்ஷனையும் தவிர யாருக்குமே உண்மை தெரியாது...

அதன் பின் வந்த எதுவும் அனுவின் காதுகளில் விழவில்லை... என்ன நடக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை.. இவன் பேசுவதெல்லாம் உண்மையா அல்லது நடிக்கிறானா? என்னிடம் நடந்து கொண்டது தான் நடிப்பா? என்றெல்லாம் யோசித்தவள் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அமர்ந்துவிட்டாள். அவளது முகம் பார்த்தே அவளின் மனதை புரிந்துகொண்ட தர்ஷனுக்கு இது போதுமானதாக இருந்தது. எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல, “நீ நம்புறியோ இல்லையோ அனு, இதுதான் உண்மை. அவன் உன்னை காதலிக்கலை காதலிக்கிற மாதிரி நடிக்கிறான். கொஞ்ச நாள் உன்கூட பழகிட்டு எல்லாரையும் போல, நான் ஒரு தோழனா தான் பழகினேன் சொல்லுவான் இல்லை இதெல்லாம் மறந்திடுன்னு சொல்லுவான்.. அப்போ நீ அனுபவிக்குற வேதனையை விட இப்போவே முழுசிக்கோ” என்று ஏதேதோ வாய்க்கு வந்ததையெல்லாம் கூறிவிட்டு இடத்தை காலி செய்தான். ஒருபுறம் மனது இப்போது நடந்ததெல்லாம் பொய் தான் உண்மை இல்லை அஸ்வத் அப்படிப்பட்டவன் இல்லை என்றது இன்னொரு மனதோ ஒரு வேலை எல்லாம் நடிப்போ இல்லையேல் ஏன் இப்படி பேச வேண்டும் என்று குழம்பியது. அவள் குழம்பி இருக்கையில் அஸ்வத் அங்கு வந்தான்.

“ஹாய் மேடம் என்ன பலத்த யோசனை? காதல் கனவா?” என்று கிண்டலாக கேட்டுகொண்டிருந்தான்.

அவன் பேசுவதெல்லாம் காதில் விழ விழ அவளுக்கு தன்னையும் மீறி கோவம் வந்தது, பொறுமையை இழுத்து பிடித்துகொண்டு, “அஸ்வத் நீ என்னை லவ் பண்றியா?” என்று நேராக கேட்டாள். அவளது முகம் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்தவனோ சிறிது விளையாடி பார்க்க நினைத்து “லவ்வா? உன்னையா? அப்படியெல்லாம் வேற நினைப்பிருக்கா? ஏதோ அக்கா நாத்தனார் ஆச்சேன்னு கொஞ்சம் உரிமையா கிண்டல் செஞ்சேன் அவ்வளவு தான்” என்று அவன் கூறவும், மனதில் கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் சிதைத்துப்போக அவளையும் மீறி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது... “நினைச்சேன்டா உன்னையெல்லாம் நம்பினேன் பாரு என்னை சொல்லணும். இப்படியெல்லாம் ஏமாத்த வேண்டியது அப்பறம் ஏமாறுறது பொண்ணுங்க தப்புன்னு easya சொல்லிட வேண்டியது” என்று இருக்கும் கோவத்தில் கத்தினாள். அப்போது தான் அவள் முகத்தை திரும்பி பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது. கோவத்தில் முகம்மெல்லாம் சிவந்திருக்க, கண்ணீரோடு நின்றிருந்தாள். அவளது நிலையை கண்டு தவித்தவன், “என்ன அனு என்ன ஆச்சு?” என்று ஒரு அடி எடுத்து வைக்க..

“முன்னாடி வராத.. எனக்கு இருக்கும் கோவத்தில ஏதாவது சொல்லிட போறேன். தர்ஷன் சொன்னது உண்மைதான் போல” என்று வெறுப்போடு முடித்தாள். அதுவரை பொறுமையாக இருந்தவன் அந்த கூற்றில் “என்ன சொன்னான்” என்று புருவம் சுருக்கி வினவினான்.

“ஏன் பேசின உனக்கே தெரியாதா? பொழுதுபோக்குக்கு பழகிட்டு இன்னும் ஏமாத்தலாம்னு ஐடியா இருக்கா?” என்று கோவத்தில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசினாள்.

அவள் சொல்லிய சிறு கூற்றே என்ன எண்ணம் வைத்திருக்கிறாள் என்று காட்டிவிட, “அவன் சொன்னதை நம்புறியா அனு” என்று பொறுமையாக அவளது முகம் பார்த்து கேட்டான். இத்தனை தூரம் நடந்தை நினைத்து சோர்ந்து அமர்ந்திருந்தவள் அவன் முகம் பார்க்காமல். “அவன் சொல்லுறது என்ன நானே தான் கண்ணாலேயே பார்த்தேனே, அந்த வீடியோல நீ பேசுறதை இன்னும் என்ன இருக்கு...” என்று கூறி அழுதாள். இப்போது அவள் அழுவது அவனை அசைக்கவில்லை பொறுமையை இழுத்துபிடித்து கொண்டு மீண்டும் வினவினான். “சரி அனு பார்த்ததாகவே இருக்கட்டும் நீ அந்த videovai நம்புரியா?” இப்போது அவன் கேள்விக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளது பொறுமை அஸ்வத்திற்கு பெரும் கோவத்தை தந்தது, அப்போ அவள் தன்னை நம்பவில்லை ஏதோ சில நிமிடங்கள் வரும் videovai தான் நம்புகிறாள் என்று வெறுத்து அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டான்.அவன் போன திசையையே பார்த்திருந்த அனுவுக்கு தான் என்ன தப்பு செய்தோம் இவன் முறைத்துக்கொண்டு போக என்று வெறுப்பு வர, அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

ஸ்வத் வேறு ஒரு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தான். உல்லாசமாக அந்த videovaiye மீண்டும் போட்டு பார்த்துக்கொண்டிருந்த தர்ஷன் அருணின் கண்ணில் பட்டுவிட, அந்த வீடியோவும் நன்றாக கேட்டது. திடிரென வந்து அவனிடம் இருந்து வாங்கி அதை பார்த்தவனின் கண்கள் பெரிதாக விரிய, அஷ்வத்தா இப்படி பேசியது என்று ஒரு நிமிடம் சந்தேகமே வந்துவிட்டிருந்தது. சில நொடிகளில் சுதாரித்தவன், தர்ஷனை அடிக்க செல்ல, அவன் நடந்தவற்றை உளறிவிட்டிருந்தான். அவனை அழைத்துக்கொண்டு அனுவிடம் சென்றவன், “என்ன அனு இப்படி பண்ணிட்ட? உனக்கு யாரை நம்புறது யாரை நம்ப கூடாதுன்னு கூடவா தெரியாது? போயும் போயும் இவனை போய் நம்பிருக்கியே” என்று தர்ஷனை சுட்டி காண்பித்தான்... “வீடியோவில் என்ன இருந்தாலும் அப்படியே நம்பிடுவியா? ஏன் நானும் எந்த நடிகையும் வேணும்னாலும் ஒன்னாக இருக்குற மாதிரி கூடத்தான் வீடியோ செய்ய முடியும் இதில பேசுகிற வசனத்தை மாத்திறதா பெரிய விஷயம்” என்று அவன் கொஞ்சம் கோவத்தோடு கூறும் போது தான் அனு அந்த உலகிற்கே வந்தாள், அஸ்வத் அப்படி பட்டவன் இல்லை என்று மனம் கூறியதை கேட்காமல் கோவத்தில் பேசிய வார்த்தைகளை நினைத்து வருந்தினாள்...

கோவத்தில் விடும் வார்த்தைகளும் சரி எடுக்கும் முடிவும் சரி சரியானதாக இருப்பதில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது அவளுக்கு... அருண் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் பார்க்க, அருண் மீண்டும் மிரட்டி அடிக்க வரவும் தர்ஷன் அவனிடம் கூறியதை அப்படியே ஒப்புவித்தான். முன்பு கேட்ட செய்தியை விட, இது இன்னமும் அவளை நிலைகுலைய செய்தது. எந்த முகத்தோடு இனிமேல் அஸ்வத்தை காண்பது என்று வருந்தினாள். நினைக்க நினைக்க அழுகை நிக்காமல் பெருக்கெடுக்க என்ன செய்வதென்று அறியாமல் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டிருந்தாள். அருண் அவளது நிலையை நினைத்து வருந்தி தர்ஷனை ஒரு முறை முறைக்க, அடுத்து எப்போது அடிவிழுமோ என்று பயத்துடனே அருகில் நின்றான் அவன்.. அருண் ஒருவாறு அனுவை சமாளித்து அவளை அழைத்துக்கொண்டு அஸ்வத் இருக்கும் இடத்திற்கு சென்றான். அஸ்வத் கடும் கோவத்தில் இருப்பது அவனது செய்கையிலேயே தெரிந்தது. கோவத்தில் கைகளால் ஓங்கி சிவற்றில் குத்திக்கொண்டிருந்தான். ஐயோ அந்த அடியில் ஒன்னு நமக்கு கிடைத்தாலும் செத்தோமே என்று பயந்துக்கொண்டே தர்ஷன் நிக்க, அருண் தான் முதலில் ஆரம்பித்தான் “அஸ்வத்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.