(Reading time: 40 - 80 minutes)

 

ல்லவே இல்லைப்பா நீ நல்லாவே பண்ணலைன்னு சொன்னாலே 80% மேலே வாங்குவ.. இதுலே ஏதோ பண்ணிருக்கேன்னு வேற சொல்லுற அதான் கேட்டேன்”. அவள் பேசுவதையே வாய்திறக்காமல் கவனித்து கொண்டிருந்தவன், “என்ன மார்க் வாங்கி என்ன use அனு, ஒரே ஒரு subject மட்டும் புரியவே மாட்டிங்குது...” என்று குரலில் அலுப்போடு கூறினான்.

அவன் முகமாற்றத்தை கவனிக்காமல், “பாரேன்... உனக்கு கூட ஒரு subject புரியாமல் இருக்கே... என்ன subject டா? முடிந்தால் நான் வேணும்னா எனக்கு தெரிஞ்சதை சொல்லித்தரேன்” என்று வெகுளியாக கூறினாள்.

அவளது கூற்றில் அவனுக்கு சிரிப்பு வர, “ஆமா ஆமா நீ மட்டும் தான் இந்த subject எனக்கு சொல்லி தர முடியும்” என்று ரகசிய முறுவலோடு அவளோடு சேர்ந்து நடந்தான். அவனது குரல் வித்யாசத்தை உணர்ந்து அவள் திரும்பி அவன் முகம் பார்க்க அஸ்வத் சிரமப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பே அவன் எந்த அர்த்தத்தில் கூறினான் என்று காட்டிகுடுக்க, கையில் இருந்த புத்தகத்தை வைத்தே முதுகில் நன்றாக வைத்தாள் அவள். அவனும் அதன்பின் எதுவும் கேட்காமல் வர, அனு அவள் சிந்தையில் தொலைந்தாள். இன்னும் 1 வாரம் தான் அஸ்வத் பிறந்தநாள் வர போகுது, கரெக்டா அன்னைக்கு தான் கடைசி தேர்வும் கூட, எக்ஸாம் முடிஞ்சதும் தனியா கூப்பிட்டு சொல்லிடனும்... என்று என்னுகையிலேயே தானாக முறுவல் பூத்தது அவள் இதழ்களில்.. அஸ்வத் அதை கவனித்துவிட “என்னை அடுச்சிட்டு நீ மட்டும் என்னடி குதுகலமா சிரிக்குற???”

“ம்ம்ம்ம்... அது உனக்கு தேவையில்லாதது.”

“பாரா...”

“சரி சரி அஸ்வத் நமக்கு எப்போ அடுத்த எக்ஸாம்?”

“அதுசரி டைம் டேபிள் தெரியாமலா இருப்ப நீ? அடுத்து 1 வாரம் கழித்து தான்...” என்று அலுத்துக்கொண்டான் அவன். “இடையில யாரு 1 வாரம் லீவ் கேட்டால்? தேவையில்லாமல் 1 வாரம் கழித்து வைத்து வேஸ்ட் பண்றாங்க“ என்று பொருமினான்.

அவன் புலம்பலை எல்லாம் கேட்டவளுக்கு, “வேஸ்ட்டா? யாரோ ஒரு புண்ணியவான் நான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்காகவே கரெக்டா அன்னைக்கு எக்ஸாம் வைத்து எனக்கு நல்லது பண்ணிருக்கான் உனக்கு அது பொறுக்கலையாடா?! இதுவே நீ வீட்டுக்கு போயிட்டால் நான் எப்படி ப்ரொபோஸ் பண்ண முடியும் லூசு அஷ்குட்டி” என்று மனதில் அவனை செல்லமாக கடிந்துக்கொண்டாள்.    

வரவர் எண்ணங்களில் இனிமையாக நேரம் கரைந்தது, அதே நேரம் அடுத்த தேர்வுக்காக அனைவரும் தயாரும் ஆனனர். அஸ்வத் தான் படித்தவற்றை அருணுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டு இருக்கையில் அவனது கைபேசி சிணுங்கியது. திரையில் இருந்த பெயரை அவன் பார்த்துக்கொண்டிருக்க, அருண் கிண்டல் செய்தான் “என்னடா உன் ஆளா?” என்று வினவ, மெல்லிய முறுவலோடு “இல்லைடா தர்ஷன் தான் ஃபோன் பண்ணுறான்” என்றான். ஒரு நொடி புருவம் முடிச்சிட, “ஓ... சகுனியா போ போ போய் பேசு” என்று அனுப்பிவைத்தான். அருணின் பேச்சு அவனுக்கு பழகியமையால் எதுவும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டான்.

“சொல்லு தர்ஷன்...”

“சாரி அஸ்வத் disturb பண்ணிட்டேனா?”

“அப்படில்லாம் இல்லைடா அருணுக்கு தான் சொல்லிகொடுத்திட்டு இருந்தேன்.”

அவன் கூறுவதை கேட்டவன் ஒரு பெருமூச்சோடு “பக்கத்திலேயே சொல்லிக்குடுக்க ஆள் இருந்தால் நல்லா தான் இருக்கும்... என்ன பண்றது” என்று சோகமாக முடித்தான்.

“ஏன்டா நாளைக்கு வேணும்னா காலேஜ் வா எப்பவும் போல சொல்லித்தரேன்” என்றான் தர்ஷனின் புத்தி புரியாமல்.

“இல்லை அஸ்வத், உன்னால இன்னைக்கே என் வீட்டுக்கு வர முடியுமா? இன்னைக்கு இருக்க டவுட் கிளியர் ஆகாமல் என்னால மேல படிக்க முடியலை” என்று வருந்தும் குரலில் பேசினான். அவன் வருத்தமாக கேட்கவும் அஸ்வத் உருகிவிட “சரிடா நான் ஒரு 7 மணி போல வரேன்”

அவனது ஒப்புதல் தர்ஷனுக்கு சந்தோஷம் தர, “சரி அஸ்வத் நீ வரேன்னு சொன்னதே போதும். இன்னைக்கு என்கூடவே தங்கிக்கோ” என்று கூறிவிட்டு அவன் பதில் எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.

தர்ஷன் வைத்ததுமே மறுபடியும் அஸ்வத்தின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“சொல்லுடா மாப்ள? எப்படி இருக்க? exams எப்படி பண்ணின? உனக்கு இன்னையோட முடியுதுல?”

“ஹே இருடா இரு ஒன்னு ஒன்னா கேளு” என்று அஸ்வத்தை இடைவெளி எடுத்துக்க சொல்லிவிட்டு தொடர்ந்தான் நிரஞ்ஜன். “நல்லா இருக்கேன். exams எல்லாம் நல்லா பண்ணிருக்கேன். இன்னையோட முடியுது அதுனால தான் உன்னை கொஞ்சம் disturb பண்ணலாமேன்னு ஃபோன் பண்ணேன்” என்று எப்போதும் போல் உற்சாகமாக பேசினான்.

“சரி சரி என்ன விஷயம் அதை முதலில் சொல்லுங்க சார், விஷயம் இல்லாம பேச மாட்டிங்களே” என்று அவனை சரியாக கணித்தான் அஸ்வத்.

உண்மை உறுத்த சிறிது நேரம் அமைதியாக இருந்தவன். “இல்லை அஸ்வத் உனக்கு முன்னாடியே தெரிந்த விஷயம் தான். exams முடிஞ்சதும் மும்பை வேலைல join பண்ண சொல்லி இருந்தாங்க, சோ நாளைக்கு நைட் train” என்று கோர்வையாக மெதுவாக சொல்லிமுடித்தான். அவன் சொல்லும் வரை பொறுமையாக கேட்டவனுக்கு இது ஒன்றும் புது விஷயம் இல்லைதான் ஆனால் இவ்வளவு சீக்கரம் அந்த நாள் வரும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“ம்ம்ம்ம்... சரி... பத்திரமா போயிட்டு வாடா...” என்று சிரமப்பட்டு உற்சாகமாக பேச முயன்றான். அவனிடம் என்ன பேசுவது என்ன சொல்லி சமாளிப்பது என்றே நிரஞ்ஜனுக்கு புரியவில்லை. “என்னடா கோவமா?”

“ச்சே ச்சே இதில கோவப்பட என்ன இருக்கு மாப்ள, அடிகடி ஃபோன் பண்ணுடா, எல்லாருக்கும் இன்போர்ம் பண்ணிடு. நடுல எதாவது லீவுக்கு வருவதானே?”

அவனது குரலில் இருந்த சோகம் நிருவையும் கொஞ்சம் தாக்க தான் செய்தது. “சொல்லிடுறேண்டா... வரணும்... வரேன்” என்று ஒரு இழுவையோடு முடித்தான். நண்பர்களா அல்லது சகோதர்களா என்று புரியாத அளவுக்கு ஒன்றாக வளர்ந்தபின் இந்த தூரம் கொஞ்சம் சங்கடத்தை தான் தந்தது. இப்போதும் நினைத்தவுடன் பார்க்கும் தூரத்தில் இல்லைதான் ஆனால் குடும்பத்தில் ஒரு விழா என்றால் வரவாவது முடிந்தது ஆனால் மும்பை சென்றபின் முன்பை போல் வர முடியுமா என்று தான் இருவருக்கும் சந்தேகம். மௌனமான நொடிகள் கரைய ஒருவழியாக சுதாரித்த அஸ்வத், “சரி விடு மாப்ள எங்க போக போற, எப்படியும் என்கிட்ட தான் வந்து மாட்டனும் நீ... போர் அடிக்குதுன்னு அங்கேயே ஒரு ஆளை பார்த்து செட் பண்ணிடாதடா” என்று சிரித்தவாறு பேச்சை மாற்றினான்.

“ஏன்டா உனக்கு இந்த நல்ல எண்ணம்? என்னை விட நீ ரொம்ப ஆர்வமா இருப்ப போல? இரு இரு அனுகிட்ட ஒரு வார்த்த சொல்லி வைக்குறேன்..”.

“ஹா ஹா... சொல்லு சொல்லு அவள் கண்டிப்பா நம்ப மாட்டாள்..” என்று உறுதியாக கூறினான்.

“இது கொஞ்சம் ஓவர் confidenceடா இருந்தாலும் பரவால்லை நல்லா இருந்தால் சரிதான்” என்று சிறிது நேரம் வேடிக்கையாக பேசிவிட்டு வைக்கப் போனவனை அஸ்வத் தடுத்தான். “டேய் இதை தேஜு எப்படி எடுத்திகிட்டாள்? அழுதாளா?” என்று அவன் சரியாக கணித்தான்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “ஆமாம்டா அவளைத்தான் என்னால தேர்த்தவே முடியலை. முன்னாடி இருந்தே அதுக்கு தான் கொஞ்சம் கொஞ்சமா சொல்லிகிட்டே இருந்தேன். இப்போ அவளுக்கு புரிந்தாலும் ஏத்துக்க மாட்டிங்குறாள். சரியாவே பேசலை” என்று வருந்தும் குரலிலேயே முடித்தான்.

“அவளும் பாவம்தானேடா விடு போக போக புரிஞ்சுக்குவா, சரி முன்னை போல நீ திரும்பி குழம்பி போகலை இல்ல??? நீ வேற ஊருக்கு போறதுக்கே அழுகுறவள் நீ முட்டாள் தனமான முடிவெடுத்தால் என்ன ஆவாள்னு யோசிச்சு பாரு.. நீ குழம்பிபோகலன்னு நினைக்குறேன்” என்று நவீன் அர்ச்சனா கல்யாணத்தன்று பேசியதை நினைவூட்டினான்.

“எல்லாமே நியாபகம் இருக்குடா, எது சரி எது தப்புன்னு புரிஞ்சிருச்சு... இனிமே எதுவும் மாறாதுடா கவலைபடாதே” என்று அவன் வேறு அர்த்தம் பொதித்து பேச, அஸ்வத் வேறு வகையில் புரிந்துக்கொண்டு நிம்மதியுற்றான்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.