(Reading time: 40 - 80 minutes)

 

ருண், தர்ஷன் வீட்டுக்கு போயிட்டு வரேன்டா. அனேகமா இன்னைக்கு அங்கதான் தங்குவேன்னு நினைக்குறேன்” என்று அவன் தேவையானவற்றை எடுத்துவைக்க, அதை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.

“சரி இல்லையே.... சகுனி ஏதோ பிளான் போட்டிருக்கான் போலவே” என்று மனதில் நினைத்ததை வாய் விட்டு கூறினான்.

“ச்சே ச்சே அப்படி எல்லாம் தெரியாம பேசாதடா”

“ஆமா ஆமா அப்படியே உனக்கு மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரிதான், நம்பலாம் ஆனால் உன் அளவுக்கு எல்லாரையும் கண்ணை மூடிகிட்டு நம்பக்கூடாது...” அவன் கூறிய பதிலை வைத்தே அவனை மடக்குவதாக நினைத்து அஸ்வத் பதில் தந்தான்.

“அப்படி பார்த்தால் உன்னையும் தான் நான் நம்ப கூடாது...”

“நம்பாத... என்னையும் தான் சேர்த்து சொல்லுறேன். ஒருத்தர் மேல முழு நம்பிக்கை தானாக வர வரைக்கும் யாரையும் நம்பாத... இதான் எதார்த்தம்...”

அவன் பதிலில் கொஞ்சம் யோசித்தாலும், உடனேயே பதிலும் தந்தான், “உனக்கு அது சரின்னு படுது எனக்கு எல்லாரையும் நம்புறது தான் சரின்னு தோணுது, எந்த ஒரு உறவுக்குமே நம்பிக்கைதான் முக்கியம் அருண், அது பெற்றோரோ, நண்பர்களோ, வாழ்க்கை துணையோ, மனதால நம்பிக்கை வைக்கலைனா அந்த உறவு நீடிப்பதில் அர்த்தமே இல்லை. என்னை பொறுத்த வரை ஏமாத்தணும்னு நினைக்குறவன் கூட நீ உண்மையாக இருந்தால் கண்டிப்பா மாறுவான்.”

அவன் கூறியதை கவனித்தவனுக்கு, தான் கூறியது சரியா அல்லது அவனது கணிப்பு சரியா என்றே குழப்பம் வந்தது. தர்ஷனிடம் கூறியபடி அஸ்வத் அவனது வீட்டிற்கு செல்ல, அவன் எதிர்பார்த்தது போலவே தர்ஷனின் வீடு பெரியதாகவே சொல்ல போனால் மிக பிரம்மாண்டமாக கூட இருந்தது. அத்தனை பெரிய வீட்டில் கூப்பிட்டால் எட்டிப்பார்க்க கூட யாரும் இல்லாமல் வெருசோடி இருந்தது. தர்ஷனை வாய்விட்டு கத்தி அழைத்து அழைத்து பார்த்தவன் பொறுமை இழந்து அவனது கைபேசிக்கு அழைத்தான். அதே சமயம், தர்ஷனது சிந்தனையோ, அஸ்வத் வரேன்னு சொல்லிட்டான், அவனை நம்ம உண்மையாவே படிக்க கூப்பிடலை ஏதாவது பிரச்சனை கொண்டுவரணும் ஆனால் எப்படின்னுதான் தெரியலை... பேசாம படத்தில் வர மாதிரி கொன்னுடுவோமா? என்று நினைத்தவனுக்கு தன் நினைப்பை நினைத்தே சிரிப்பாக இருந்தது... ரொம்பவும் அவன் மூளையை கசக்க விடாமல் கடைசியாக ஒரு யோசனை வந்தது... அடடே இது முன்னாடியே தோணலையே!!! ஆனால் சரியா வருமா? ம்ம்ம்ம்... முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று தனக்கு தானே ஒரு முடிவெடுத்து தனது யோசனையை செயலாற்ற நினைத்தான்... அஸ்வத்தின் குரல் கேட்காவிட்டாலும் அவனது அழைப்பு கேட்டுவிட, அதை எடுத்து பேசிவிட்டு முன்னறைக்கு சென்றான்.

“வா அஸ்வத்...”

“என்னடா பண்ணிட்டு இருந்த? அத்தனை தடவை கூப்பிட்டேன்...”

“சாரிடா கேட்கவே இல்லை”

ஆமா ஆமா இவ்வளவு பெரிய வீட்ல பக்கத்துல இருந்தாலே கேட்காது தான்... என்று எண்ணிக்கொண்டு “வீட்ல யாருமே இல்லையாடா?”

“எப்பவுமே யாரும் இருக்க மாட்டங்கடா, வேலைக்கு ஒரு ஆள் உண்டு அவனும் இரவு  அவனோட வீட்டுக்கு போயிடுவான்”.

அவன் கூறியதை கேட்டு பாவம் கல்லூரியில்தான் யாரும் சேர்த்துக்கொள்வதில்லை என்றால், இங்கும் அவனுக்கு யாரும் இல்லையே என்று வருந்தியது அஸ்வத்தின் (மங்குனி) உள்ளம்... நிஜமாகவே இருக்கும் நண்பர்களை விரட்டி அடிக்காமல் இருந்தால் அதுவே அதிகம் தர்ஷனுக்கு அது அஸ்வத்க்கு புரியவில்லை. சிறுவயதில் இருந்தே தாய் தந்தையின் அருகாமை கிடைக்காததாலோ என்னவோ யார் மீதும் அன்பு காட்ட அவனுக்கு தெரிந்ததில்லை, அவன் வயதரிந்து தாய் பற்றி விசாரிக்கும் பொழுது அவனது தந்தையிடம் பதில் இல்லை. இறையடி சேர்ந்துவிட்டார் என்பதற்கு அடையாளமும் இல்லை... அவன் தந்தைக்கு அதை பற்றி பேசவும் நேரம் இல்லை. அவர் அறிந்ததெல்லாம் ஊர் சுற்றும் வாலிபன் போல் பல நாடுகள் சுற்றுவதே... தர்ஷனுக்கு துணையே வீட்டில் வேலை செய்பர்கள் மட்டும் தான், வளர்ந்தது முதல் அவன் அறிந்த ஒரே ஜீவன்கள்... செல்லும் இடமெல்லாம் வீடிருந்தது, தேவையை பார்த்து செய்ய வேலை ஆட்கள் இருந்தனர், அவ்வப்போது தலை காட்ட அப்பா இருக்கின்றார்... இது தான் தர்ஷன் வாழ்க்கை... மற்றதை பற்றி அவன் கவலையும் பட்டதில்லை.

இப்படி ஒவ்வொருவரின் நினைவுகளிலேயே சிறிது நேரம் கடந்துவிட, அதன்பின் அழைத்ததற்காக அஸ்வத் சொல்லித்தருவதை கவனித்துக்கொண்டிருந்தான் தர்ஷன். வெகுநேரமாக படித்ததால் அலுத்துப்போக காலை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். தூக்கமும் வராமல் போக, அஸ்வத்திடம் பேச்சுகொடுத்தான் தர்ஷன்.

“நீ சரக்கு அடிப்பியாடா?”

“ம்ம்ம்ம் ஹ்ம்ம்.. ஏன்?”

“இல்லை பீர் அடிக்கணும் போல இருக்கு, அதான் கம்பனிக்கு கேட்டேன்...”

“நீ வேணும்னா குடி நான் கோக் குடிச்சுக்குறேன்” என்று எப்போதும் தன் நண்பர்களோடு செய்வதை செய்தான்.

பின்னால் இருந்த நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து தர்ஷன் பீர் குடிக்க, அஸ்வத் coke குடித்தான். பேச்சுக்கள் பொதுவான விஷயங்களை கடந்து, ஆண்களுக்கே உரியதான பேச்சுக்களையும் கடந்து, கடைசியாக அனுவில் வந்து நின்றது..

“அஸ்வத்...”

“என்னடா?”

“ஒருவேளை உன்னை அனு ஏமாத்திடாள்னா என்னடா பண்ணுவ?”

அவனது கூற்றில் பார்வை கூர்மையாக, “ஏன் அப்படி சொல்லுற?”

“இல்லை எல்லா பெண்களுமே அப்படிதானே... சுத்துறவரைக்கும் சுத்திட்டு ஏமாத்திடுவாங்க அவளும் அப்படிதானே இருப்பாள்..” என்று ஓர கண்ணால் அவனை அளந்துக்கொண்டே கூறினான்.

அவன் கூறியதும் அஸ்வதின் முகம் இறுகிவிட, “அனு அப்படியெல்லாம் கிடையாது...” என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டான். அவனது குரலின் மாற்றத்தை வைத்தே இந்த பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்தது தர்ஷனுக்கு... ச்சே என்னமா நம்புறான்... என்று மனதில் பொருமிக்கொண்டு பேச்சை வேறு திசைக்கொண்டு சென்றான். “சாரிடா... சரி அதை விடு.. நம்ம கிளாஸ் பிரகாஷ் இருக்கான்ல.. அதான் நம்ம கிளாஸ் நிஷாவை கூட லவ் பண்ணானே...”

“அது என்ன பண்ணான்னேனு சொல்லுற? இப்போ என்ன ஆச்சு???”

“இப்போ பிரிஞ்சிட்டாங்க, அவன் லவ்லா பண்ணலையாம் பிரிண்ட்ஸ் மாதிரி தான் பழகினானாம் இந்த பொண்ணு தப்பா நினைச்சிகிட்டால் நான் பொறுப்பான்னு திமிரா பதில் சொல்லுறான். அந்த பொண்ணு யார்கூடையும் பேசவே பேசாதுல ரெண்டு நாளா ஆளே காணாம போயிடுச்சாம்... ஏதாவது தப்பா நடந்திருக்குமோன்னு எல்லாரும் பயந்திட்டாங்கலாம்... திரும்பி வந்திட்டாள் போல ஆனால் ஆளே ஒரு மாதிரி இருக்காளாம் எப்போ பார்த்தாலும் அழுராளாம்” என்று ஒரு கதையை சொல்லி முடித்தான் தர்ஷன். இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தவன் முகத்தில் எதுவுமே காட்டாமல் “ஓஹோ...” என்று மட்டும் கூறினான்.

“என்னடா நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கேன் வெறும் ஓஹோன்னு சொல்லுற?”

“பின்ன என்ன சொல்ல சொல்லுற?”

“உனக்கு வருத்தமா இல்லையா?”

“எதுக்கு வருத்தப்படனும்? ஒருத்தன் உண்மையா காதலிக்குறானான்னு கூட தெரியாமல் ஊரை சுத்த வேண்டியது, அப்பறம் அவன் ஏமாத்திட்டான்னு அழ வேண்டியது... எத்தனை வர்ஷம் ஆனாலும் இந்த பொண்ணுங்க எல்லாம் இந்த விஷயத்தில முட்டாளாகத்தான் இருக்காங்க...”

“அப்போ பிரகாஷ் மேல தப்பில்லைன்னு சொல்லுறியா?”

“தப்பு தான் ஆனால் ஏனோ ஏமாறுரவங்களை பார்த்தால் எனக்கு பரிதாபம் வரதில்லை... ஏமாத்திரவன் அவங்கள விட சாமத்தியமாக இருப்பது அவன் தப்பில்லையே...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.