(Reading time: 40 - 80 minutes)

 

சிறிது நேர உரையாடலுக்கு பிறகு அழைப்பு துண்டிக்கபட, இனிமேல் அனைவரிடமும் இருந்து தள்ளி இருப்பதுதான் தான் எடுத்த முடிவுக்கு சரி என்று தோன்றியது நிருவுக்கு. தேஜுவுக்கு தான் பொருத்தமானவன் அல்ல என்ற எண்ணம் மட்டும் நிருவுக்கு மாறவில்லை. அதனால் அஸ்வத் தன்னோடு கோவித்து கொள்ள கூட வாய்ப்புண்டு என்று அவன் அறிவான் ஆனால் அவனுக்கு சில நாட்கள் தனிமை தேவைப்பட்டது. அது தன் மனதில் உள்ள குழப்பத்தை ஆராய்ய கிடைத்த நாட்களாக எண்ணிக்கொண்டான்.

அவன் இவ்வாறு மாறிப்போக பெரிதாக எதுவும் காரணம் இருந்துவிடவில்லை. தன்னோடு இருந்த சில நண்பர்களுக்கு அவன் தேஜுவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறான். அனைவரின் எண்ணமும் ஒன்றாகத்தான் இருந்தது, “இவ்வளவு பெரிய பணக்கார வீட்டு பொண்ணு எப்படிடா உன்னை லவ் பண்ணுறா? நிஜமாவே காதலிகுரளா?” என்றெல்லாம் குழப்ப துவங்கினர். ஆனால் நிரஞ்ஜனுக்கு அவளது காதலின் மீது சந்தேகம் வரவில்லை மாறாக தான் பொருத்தமற்றவன் என்ற எண்ணம்தான் தலை தூக்கியது. எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுவது போல், அவன் அருகில் இருப்பவர்களில் சிலர் பொறாமையில் இன்னும் நிறைய ஏற்றி விட்டனர். நிரஞ்ஜன் குழம்பிப்போவது தான் அவர்கள் எதிர்பார்த்தது. அதுவும் நடந்தது, அந்த நேரம் தான் நவீன் அர்ச்சனா திருமணம் நடந்தேறியது. பெற்றோர்கள் எல்லாம் சேர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவரவர் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கையை கணக்கிட்டுக்கொண்டிருந்தனர்.

நிரஞ்ஜனின் துரதிஷ்டம் லதா தேஜுவை பற்றி பேசுவது மட்டும் காதில் விழுந்தது. தேஜு டாக்டர் ஆகிடுவாள், அதே மாதிரி எப்படியும் ஒரு டாக்டர் மாப்பிள்ளையை தான் பார்க்கணும் அப்போதான் ரெண்டு பேரும் எந்த வேறுபாடும் இல்லாம ஒருத்தரின் நிலைமையை மற்றவர் புரிஞ்சிக்க சரியாக இருக்கும்.

சரிதான் லதா, அதுவும் பெரிய இடமா தான் பார்ப்ப இல்லை?? அப்போதான் தேஜு இப்போ இருக்குற மாதிரியே சந்தோஷமா இருக்க முடியும் என்று இயல்பாக ஹேமா கூற, மகளின் சுக வாழ்க்கையை எண்ணிய தாய் உள்ளமும் ஒத்துகொள்ள செய்தது. அது எதார்த்தமான ஒரு எதிர்பார்ப்பு தான். அது மாறவும் வாய்ப்புகள் உண்டுதான் ஆனால் முன்பே குழப்பத்தில் இருந்தவன் லதாவின் பேச்சில் மொத்தமாய் குழம்பி போனான். தேஜுவுக்கு அவன் தகுதி உள்ளவன் என்று கூற சுற்றி யாரும் இல்லாமல் போக, எதிர்மறை எண்ணங்களே மேலோங்கியது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் மறுநாள் கிளம்ப அனைத்தையும் தயார் செய்தான் நிரஞ்ஜன்.   

“திரும்பி எப்போ வருவ நிரு?”

“ஹே நான் என்ன மிலிட்டரிக்கா போறேன்? இப்படி பீல் பண்ணுற? மும்பைக்கு தானே போறேன் எப்பவெல்லாம் வர முடியுமோ அப்போல்லாம் வரேன்” என்று சோர்ந்து இருந்த தேஜுவை தேற்றினான்.

பெரிதாக கண்டுகொள்ளதவள் போல் முகத்தை வைத்துக்கொள்ள நினைத்தாலும் அவளால் முடியாமல் தான் போனது. அவளது உள்ளுணர்வு ஏனோ இந்த இடைவெளி பெரிதாகப்போவது போல் உணர்த்தியது. “தினமும் ஃபோன் பண்ணுவியா?”

அவள் கேள்வியில் நிமிர்ந்தவன், அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து மீண்டும் கைபேசியில் ஏதோ பார்ப்பவன் போல் குனிந்துக்கொண்டு, “எப்போவெல்லாம் நான் ப்ரீயா இருக்கேனோ அப்போவெல்லாம் பண்ணுறேன்” என்றான். இவ்வாறு அவள் கேட்பதற்கெல்லாம் எப்பவெல்லாம் முடியுதோ என்று மேலோட்டமாக பதில் தந்தான் அவன். அவனது பேச்சு அவளுக்கு அபாயத்தை உணர்த்தத்தான் செய்தது ஆனாலும் கிளம்பும் நேரத்தில் அவனிடம் சண்டை போடும் எண்ணம் இல்லாமல் அமைதியாகவே நேரத்தை கழித்தாள் தேஜு. மனம் சொல்ல முடியாத ஏதோ ஒரு கனத்தை தர, அவன் கைகளை பிடித்துகொண்டு அமர்ந்தாள். அவளது செய்கையில் நிரஞ்ஜனுக்கு கண்களில் நீர் சுறக்க, சிரமப்பட்டு தடுத்தான். நான் உன்னை விட்டு போறேன் தேஜு, பத்தரமா இருந்துக்கோ, முதல்ல கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கும் ஆனால் பின்னாடி, நான் எடுத்த முடிவுதான் சரின்னு தோணும்... என்று மனம் வேதனையில் அழுதது. இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் தன்னை தானே கட்டுபடுத்த முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் போக, “சரி தேஜு நான் கிளம்புறேன், போகுற வழியில ஃபிரிண்ட் join பண்ணிக்குரதாக சொன்னான். நான் கிளம்புறேன்” என்று கூறி அவன் கைகளை அவளிடம் இருந்து பிரித்துக்கொண்டான். (இந்த நேரத்துல நீங்க குஷி படத்துல வர சீன் imagine பண்ணிக்கணும் slow motionla கைகள் பிரியுற மாதிரி) அவன் பிரித்து சென்ற நொடியே அனைத்தும் இழந்தது போல் உணர்ந்த தேஜுவின் கண்களில் இருந்து தன்னையும் அறியாமல் நீர் கசிந்தது. அவன் போவதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.  

என்னதான் வெளியே கஷ்ட்டத்தை காட்டாமல் இருந்தாலும், கதறி அழ துடித்தது நிருவின் மனம். தேஜுவை அந்த நிலையில் விட்டு வந்தது இன்னமும் அவன் கண்கள் முன் வந்து நிற்க, உடனேயே அனுவிற்கு அழைத்தான். அவர்களின் நிலை உணர்ந்தமையலோ என்னவோ அனுவின் குரலில் உற்சாகம் இல்லை, “சொல்லு நிரு...”

“நான் கிளம்புறேன் அனு...”

“ம்ம்ம்ம்... பத்திரமா போயிட்டுவா...” முன்பே தெரிந்தமையால் பேச்சுக்கள் பெரிதாக இல்லை.

“ம்ம்ம்ம்...”

“....”

“அனு...”

“தேஜு எப்படி இருக்காள்?” சொல்லாமலே புரிந்துகொண்ட அவளின் நட்பை கண்டு இனி இவள் தேஜுவை பார்த்துக்கொள்வாள் என்ற நிம்மதி வந்தது அவனுக்கு.

“இருக்காள் அனு, ஆனால் நல்லா இல்லை. அது உன் கையில தான் இருக்கு... அவளை கொஞ்சம் பார்த்துக்கோ அனு.”

“புரியுதுடா நான் பார்த்துக்குறேன், நீ கவலைப்படாதே அதே மாதிரி நீயும் அடிகடி அவளுக்கு போன் பண்ணு” என்று அறிவுரையும் கூறினாள்.

“பண்ணுறேன் அனு...” என்று பேசிவிட்டு சிறிது நேரத்திலேயே வைத்துவிட்டான் இனி அனு பார்த்துக்கொள்வாள் என்ற நிம்மதியுடன்.

நிரு வைத்துவிட உடனே தேஜுவை அழைத்தாள் அனு, “ஹலோ தேஜு என்னடி பண்ணுற? அடுத்த தேர்வுக்கு தயார் ஆகிட்டியா? இது வரைக்கும் எப்படி பண்ணின?” என்று எப்போதும் போல் பேச முயன்றாள்.

அனு ஏன் திடிரென அழைத்தாள் ஏன் இந்த விசாரிப்புகள் என்று அவளும் அறிவாள், மனதில் தன் தோழியை மெட்சிக்கொண்டவள், அவளுக்காக உற்சாகமாக பேச துவங்கினாள். “நல்லா பண்ணிருக்கேன் அனு, அடுத்து examku படிச்சிட்டு இருக்கேன், ஆனால் எனக்கு எக்ஸாம் முடிய தான் இன்னும் நிறைய நாள் இருக்கு, உன்னை மாதிரியா? இன்னும் 2 நாளுல முடிய போகுது” என்று மனம் கொஞ்சம் மாறிப்போக இயல்பாக பேசினாள்.

“ஹா ஹா அதெல்லாம் நல்லவங்களுக்கு மட்டும் தான் சீக்கரம் முடியும்” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சிரித்தாள்.

“இருக்கும் இருக்கும் யாரோ ஒரு நல்லவரால் எல்லாருக்கும் மழை கிடைப்பதில்லையா அந்த மாதிரி தான்” என்று கிடைத்த நேரத்தில் அவளை வாரினாள். தேஜு இந்த அளவுக்கு தேரியதே அனுவிற்கு நிம்மதியாக இருந்தது. தேஜு மனதிடம் உடையவள்தான் ஆனால் அன்பு அதிகம் வைத்தவர்கள் தள்ளி சென்றாள் சோர்ந்து போய்விடுவாள் என்று அனு அறிந்தவையில் ஒன்று. தான் சிறு சண்டை போட்டு ஒரு நாள் பேசாமல் இருந்தாலும் தாங்காமல் தன் மீது தவறே இல்லை என்றாலும், அடுத்த நாளே வந்து பேசும் பள்ளி வயது தேஜு தான் கண்முன் தோன்றினாள். இறுதியாக வைக்கும் முன், “சரி வாயாடி பெரிய ரகளையே பண்ணிட்டியாம் அவன் எங்க வெளிநாட்டுக்கா போறான்? இங்க தானே அடிக்கடி பேசுவான் சரியா?” என்று அனு கேட்க, தேஜூவின் மனதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. அவளுக்கு நிருவை நன்கு தெரியும், அவன் ஏதோ முடிவோடு தான் சென்றிருக்கிறான் என்று புரிந்தது, தன் சோகத்தை பகிர மனமின்றி சரி என்று மட்டும் அவளுக்காக கூறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.