முகத்தை திருப்பி பார்த்தவன் அங்கு அருண், தர்ஷன், அனு வந்திருப்பதை பார்த்து மீண்டும் திரும்பிக்கொண்டான். “அனு பாவம்டா அந்த வீடியோ பார்க்குற எல்லாருமே கொஞ்சம் குலம்பிதாண்டா போவாங்க, எல்லாம் இந்த பயலால வந்தது” என்று அடிக்க கை ஓங்கினான். அஸ்வத் அதை தடுத்து, “அருண் அவனை அடிக்காத அவனை விடு போகட்டும்” என்று கோவத்தை கட்டுபடுத்தி கூறினான். அவனது கூற்றில் மூவருக்குமே ஒன்றும் புரியவில்லை, “என்னடா சொல்லுற இவன் தான் உங்க ரெண்டு பேரையுமே ஏமாத்தினது..” என்று புகைச்சலில் கத்தினான் அருண்.
“ஏமாத்திரவன் நம்மளை விட சாமத்தியமாக இருப்பது அவன் தப்பில்லையே...” என்று ஒற்றை வரியில் தனது முடிவை கூறினான்.
தர்ஷனும் விட்டால் போதும் என்று ஓடிவிட, அனு பேச்சை துவங்கினாள், “அஸ்வத்...”
“அருண் நான் யார்கூடயும் பேச விருப்ப படலை என்னை இன்னும் கோவபடுத்தாமல் இங்க இருந்து போக சொல்லிடு..” என்று கிட்ட தட்ட கத்தும் குரலில் கூறினான் அஸ்வத். அருணுமே அந்த குரலில் கொஞ்சம் நடுங்கித்தான் போனான். அனுவிற்கு பயத்தை விட குற்றவுணர்வு பேசவிடாமல் தடுத்தது. அவள் மௌனமாக தலை குனிந்து கொள்ள, அருண் தொடர்ந்தான், “டேய் தப்பு செய்தவனையே மன்னிச்சிட்ட இப்போ என்னடா?”
“அவனும் இவளும் ஒன்னாடா? அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவாளா? என் மேல அவ்வளவுதான் நம்பிக்கையா?”
“அப்படி இல்லை அஸ்வத்” என்று அவள் ஏதோ சொல்ல முனைய
“தயவு செய்து அவளை இங்க இருந்து போக சொல்லு அருண் இல்லை நானே ஏதாவது செஞ்சிடுவேன்” என்று கோவத்தில் சுவற்றில் ஓங்கி அடித்தான், அவனது கைகள் நோவதை ஒரு இயலாமையோடு பார்த்தவள் மனமின்றி அவ்விடத்தை விட்டு நகர முனைந்தாள்.
“ஹ்ம்ம் மனதில் உண்மையான காதல் இருந்தாள் தானே மத்தவங்க காதல் மேல நம்பிக்கை வரும், தன் காதலே பொய்யின்ற போது அப்படி தான் எல்லாமே தெரியும்” என்று கோவத்தில் அவளை கடிந்தான். இதுவரை அவன் பேசியதெல்லாம் மனதை புண்படுத்த இந்த வார்த்தைகள் அவளை சுத்தமாக கொன்றுவிட்டது.. அவ்வளவு தானா ஆசை ஆசையாக சேகரித்த நேரங்கள் எல்லாம் இந்த வார்த்தைகளை கேட்க தானா என்று மனம் மொத்தமாய் சோர்ந்து போக கையில் இருந்த பரிசினை இயலாமையோடும் அவனை வெறுபோடும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றுவிட்டாள்.
அருணோ என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே நின்றுவிட்டான் அவனுக்கு அஸ்வத்தின் இந்த கோவம் புதியது, இதுவரை அவன் இப்படி பேசியும் கேட்டதில்லை... பொறுமையாக அவன் அருகில் சென்றவன். “என்னடா இப்படியெல்லாம் பேசிட்ட? உன் காதலை போயின்னு சொன்னப்ப கிடைச்ச வழிதானே அவளுக்கும்???” என்று அவன் தன் தோழனை தோள் தொட்டு திருப்ப, அஸ்வதோ மனம் உடைந்து போய் கண்ணீர் சிந்தினான். “நான் எவ்வளவு நம்பினேன்டா அவளை?!?! நம்பிக்கை இழந்த உறவு செத்ததுக்கு சமம்டா” என்று கூறி சரிந்து அமர்ந்துவிட்டான் அஸ்வத்.
தேஜுவின் நிலைமை மோசமாக இருந்தது, எழுதிய தேர்வுகள் எல்லாம் என்ன எழுதினோம் என்றே தெரியாமல் முடித்தாள், அன்றோடு நிரஞ்ஜன் மும்பை சென்று 5 நாட்கள் ஆனது இன்னமும் அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை, அவள் அழைத்தாள் அழைப்புகள் எல்லாம் பதில் இல்லாமல் போனது. மறுபடி அழைப்பான் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தமாக வற்றியது.. தேர்வுக்கும் முழுவதாக படிக்க முடியாமல் யாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி போனாள், எடுக்காத அழைப்புகளுக்கு மனம் பயமுறுத்தும் அளவுக்கு வேறு யோசிக்க, ச்சே ச்சே அப்படியெல்லாம் எதுவும் நடந்திருக்காது... நன்றாக தான் இருப்பான்... அஸ்வத்திடம் அழைத்து விசாரிக்கலாம் என்று யோசித்து அவள் கைப்பேசி எடுக்க, அனு அழைத்தாள்...
“ஹாய் அனு”
“அனு இல்லடா நான் வெங்கட் பேசுறேன்..”
“என்ன அங்கிள் என்ன ஆச்சு அனு எங்க?”
“அவளோட அறையில தான்மா இருக்காள், ஊருக்கு வந்து 2 நாள் ஆச்சு ரொம்ப சோர்ந்து போயிருக்காள் என்ன ஆச்சுன்னு தெரியலை கேட்டாலும் சொல்ல மாட்டிங்குறாள், தேர்வு பத்தின கவலை மாதிரி இல்லை, அவங்க அம்மாகிட்ட அதை தான் காரணமா சொல்லிருக்காள். என்னால நம்ப முடியலை நீ கொஞ்சம் பேசி பாறேன்மா” என்று அந்த தந்தை பரிதாபமாக பேச, சரி என்று ஒத்துக்கொண்டு அனுவிடம் பேசினாள்... சாய தோள் தேடிய மனம் தேஜுவின் குரலை அலைபேசியில் கேட்டதுமே அழதுவங்கிவிட்டாள்...அவளை தேற்றுவது தேஜுவுக்கு கடினமாக இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் கூறிய விஷயங்கள் எதையும் நம்பவும் முடியவில்லை. அஸ்வத் இந்நாள் வரை அனுவின் அழைப்பை எடுக்காமல் கோவமாகவே இருப்பது கொஞ்சம் அவன் மீது எருச்சலை தந்தது. அவளது மனம் தன் தோழிக்காக வருந்தியது... சிறிது நேரம் பேசி அவள் அழுகை ஓயும் வரை காத்திருந்தவள் அவளை சிறிது நேரம் உறங்க சொல்லிவிட்டு, இன்னும் 5 நாட்களில் தான் வந்துவிடுவதாகவும் அதுவரை தைரியமாகவும் இருக்க சொல்லியும் அழைப்பை வைத்தாள்.
அஸ்வத்தின் மனம் படும் வேதனை புரிந்தாலும் அனுவுக்காகதான் பெரிதும் வருந்தியது தேஜுவின் உள்ளம். அடுத்து அவள் பேச முயன்றது அஸ்வத்திடம்.. அவளது அழைப்பை எடுத்து பேசியவனின் குரலில் உயிரே இல்லை, ஏதோ பேசவேண்டும் என்பதற்காக பேசினான். “அஸ்வத் நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காத” என்று துவங்கவுமே, “தேஜு நீ என்னுடைய விஷயத்தை பத்தி பேசுறதுனா நான் இப்போவே கட் பண்ணிடுறேன் நீ பேசுறது வேஸ்ட். எனக்கும் கொஞ்சம் மனசுன்னு ஒன்னு இருக்கு அதையும் கொஞ்சம் மதிங்க உன் தோழிய போல நீயும் அதை கொள்ளாத” என்று வெறுமையாக பேசியவனிடம் எதுவும் பேச முடியாமல் சோர்ந்துவிட்டு நிரஞ்ஜனை பற்றி வினவினாள். கேட்பதற்கு சங்கடமாக இருப்பினும் வேறுவழியின்றி வினவினாள். அவளது கேள்வியில் இன்னுமா நிரு ஒருமுறை கூட அழைக்கவில்லை, தன்னையும் கூட அழைத்து பேசவில்லையே என்று அப்போது உரைக்க, தான் அவனிடம் பேசிபாற்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டான்...
முதல் அழைப்பு பதில் தராமல் போனது, சிறிது நெருடலாக இருக்க மீண்டும் அழைத்தான். இம்முறை அழைப்பு துண்டிக்க சில நொடி முன் அழைப்பை எடுத்தான் நிரஞ்ஜன்.
“என்னடா நினைச்சிகிட்டு இருக்க? ஒரு முறை போன் பண்ணி பேசினால் தான் என்ன? அவ்வளவு பிஸியா?” என்று கொஞ்சம் கடுப்பாகவே பேசினான் அஸ்வத்.
முதலில் நிருவிடம் பதில் இல்லை, “சாரிடா கொஞ்சம் பிஸி தான்” என்று மேலோட்டமாக பேசினான்.
“சரிவிடு தேஜு கால் பண்ணினால் எடுக்க மாட்டிங்கிரியாமே ரொம்ப வருத்தப்படுறாள். இப்போ மறக்காமல் பேசிடு” என்று உரிமையாக கூறினான்.
அவனது கூற்றுக்கு மறுபுறம் பதில் இல்லை...
“ஹலோ இருக்கியா இல்லையாடா?”
“ம்ம்ம்ம் இருக்கேன்.. அஸ்வத் இது என்னுடைய வாழ்க்கை இதில நீ தலை இடுரதை நான் விருப்பப்படலை” என்று பட்டென சொல்லிவிட்டிருந்தான். அதை கேட்ட அஸ்வத்திற்கு தனது காதுகளையே நம்ப முடியவில்லை, ஒருபுறம் அனுவிடம் பிரச்சனையென்றால் இவனுமா என்று கோவம் வந்துவிட, “ஓஹோ அவ்வளவு பெரிய ஆளா சரிங்க இனிமேல் உங்க விஷயத்தில் நான் தலையிட மாட்டேன், எனக்கு இப்படி ஒருத்தன் நண்பனா இருந்தான்றதையும் மறந்திடுறேன்” என்று மனம் முழுதும் கசப்போடு இணைப்பை துண்டித்துவிட்டிருந்தான். இணைப்பை துண்டித்த அஸ்வதிற்கும் மனம் வலித்தது, அவன் மனம் வலிக்க பேசிய நிரஞ்ஜனின் மனமும் வலித்தது. என்ன வாழ்க்கை இது என்று வெறுத்து போனது இருவருக்கும். தோழனும் இல்லை காதலும் இல்லை... இரண்டையும் இழந்தனர் இருவரும்...
காதல் பயணத்தில் காதலை துளைத்த மனங்கள் இனி வெவ்வேறு வழியாக பயணிக்க துவங்க போகிறது...(ரொம்ப திட்டுற மாதிரி இருக்கே... நோ நோ திட்டாமா வெயிட் பண்ணுங்க)...
பயணம் தொடரும்...
{kunena_discuss:676}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.