(Reading time: 18 - 36 minutes)

 

காஞ்சனா ஸ்ரீயை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்...

" நீ தான் பக்கத்து வீட்டுக்கு வந்து இருக்குற பொண்ணா... உன் பேரு என்னமா?"

" என் பேரு ஸ்ரீமதி  ஆண்டி... " என்று புன்னகை புரிந்தாள்...

" ரொம்ப அழகா மகாலட்சுமி மாதரி இருக்கமா... கைல என்ன?.. " என்று அவள் கையில் வைத்திருந்த சம்படத்தை பார்த்து காஞ்சனா கேட்டாள்..

" அம்மா உங்க எல்லாருக்கும் பணியாரம் குடுத்திட்டு வர சொன்னங்க ஆண்டி.. அதான் வந்தேன்.. " என்று கையில் இருந்த டப்பாவை நீட்டினாள்... காஞ்சனா அவள் கை பிடித்து தன் அருகில் அவளை அமர வைத்து கொண்டார்.... (பக்கதுல அஸ்வின் உட்கார வில்லை.. வடை போச்சே... ஆனால் அஸ்வின் அவள் எதிரில் தான் உட்கார்ந்து இருந்தான்... )

" என்னமா பாக்குற... நீ கண்டிப்பா சாப்ட்டு தான் போகணும்..."

"இல்ல ஆண்டி.. வீட்ல தேடுவாங்க... நான் போறேன்... "

" நல்ல கேளுங்க அம்மா... வாசலில் நின்னு இதான் சொல்லிட்டு இருந்தாங்க.. " என்று மீரா சொன்னாள்..

"இந்த ஆன்ட்டிகாக இன்னைக்கு எங்க கூடசாப்பிட மாட்டிய?? " என்று செல்லமாக கேட்டதும்...

" கண்டிப்பா சாப்டுரேன் ஆண்டி..." என்று சொன்னதும் அவளுக்கு லட்சுமி தட்டு வைத்து சுடசுட பொங்கல் பரிமாறினார்...  சாபிட்டு முடித்த அஸ்வின் எழுந்து செல்லாமல்.. இன்னொரு கரண்டி பொங்கல் வைத்து சாப்பிட ஆரம்பித்தான்...

"என்னப்பா அஸ்வின்... போதும் சொன்ன... இப்போ சாப்ட்ரியே... அதிசயம் தான் போ.. " என்று ஆச்சிரிய பட்டார் காஞ்சனா..

இவ வந்தது பின்னால் எந்தரிச்சு போக எனக்கு மனசு வருமா என்று அஸ்வின் மனதுள் நினைத்து..

"குளிருக்கு ரொம்ப பசிக்குதுமா... அதான்.. அதுவும் இல்லாம நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்து இருக்காங்க... அதான்... " என்று சமாளித்தான்( ரொம்ப தான் சமாளிகுரிங்க அஸ்வின் ... )

" ஆமா அண்ணா உனக்கு ரொம்ப குளிரும் ரொம்ப பசிக்குமே... " என்று அண்ணனை பார்த்து கண் அடித்தாள்... இதை கவனித்து கவினிகாத மாதரி ஸ்ரீ சாப்ட்டு கொண்டு இருந்தாள்.. காஞ்சனா சாப்ட்டு கொண்டே விசாரணையை தொடர்ந்தார்...

" என்ன ஸ்ரீ படிச்சு இருக்க??"

" நான் பி.இ இந்த வருஷம் தான் முடிச்சு இருக்கேன்..."

" ஜாப் எதுக்கும் போகலயா..?"

"இல்ல ஆண்டி... இனிமே தான் ட்ரை பண்ணனும்... "

" ரொம்ப நல்லது... கல்யாணம் பண்ண உங்க வீட்ல ஐடியா இருக்கா??.. "

என்று கேட்டதும் ஸ்ரீக்கு புரை ஏறி விட்டது.. ஐயோ இவுங்க என்ன இப்படி கேட்குறாங்க... உண்மையாவா சொல்ல முடியும்... மாப்பிள்ளை பார்த்தாங்க... பிடிக்கல... எங்க அண்ணகுகாக இப்போதிக்கு கல்யாணம் வேணாம்னு வீட்ல பேசணும்னு....  என்று புலம்பியவாறு...

" இல்ல ஆண்டி.. வொர்க் பண்ணனும் டூ யியர்ஸ் கழிச்சு தான் கல்யாணம் பத்தி யோசிக்கணும்... "

" ரொம்ப சந்தோசம் ஸ்ரீ... நல்ல சாப்டு.. " என்று புன்னகைத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் காஞ்சனா... கல்பனாவிடம் கண் ஜாடை காட்டி... அழகா இருக்கா என்று சொல்லி சிரித்து கொண்டார்...

அங்கு அஸ்வின் வெந்து கொண்டு இருந்தான்... பொங்கல் சூடு தாங்காம இல்லங்க... ஸ்ரீ டூ யீர்ச்னு சொல்லிடாங்கள... அதான் அய்யாவுக்கு பீலிங்... அடி பாவி ரெண்டு வருஷமா... உன்ன தள்ளி வச்சு பாக்க என்னால முடியாது.. இப்போவே ரொம்ப கஷ்டமா இருக்கு... எதிரா உட்காந்து இருக்க... அதுவே ரொம்ப கஷ்டமா இருக்கு... ப்ச்.. போடி ..  என்று அவன் கற்பனை மேலும் தறி கட்டி ஓட துடங்கும் முன்....

" ஸ்ரீ நீங்க எங்க கம்பனிக்கு வரிங்களா.. ஜாப் பார்க்க... எங்க அண்ணன் தான் அந்த கம்பெனி நடத்துறாங்க.. "  அஸ்வின் நன்றியுடன் மீராவை பார்த்தான்...  கண்ணிலே... தெய்வமே நீ எங்கையோ போய்ட்ட செல்லம் என்று மீராவை புகழ்ந்து கொண்டு இருந்தான்..

"ஆமா ஸ்ரீ.. நீ எங்க பையன் நடத்துற கம்பெனில வொர்க் பண்ணுறியா??"

இப்போது ஸ்ரீக்கு என்ன சொல்லுவது என்று புரியவில்லை...

"அப்பா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் ஆண்டி... " என்று அப்பா பெயரை வைத்து அப்போதைக்கு தப்பித்தாள்... இங்க இருந்து சீக்கிரமா கிளம்பனும்.. என்று நினைத்து கொண்டாள்...

" அதுவும் சரி தான் ஸ்ரீ... உங்க வீட்ல கேட்டு சொல்லு... மீரா ஸ்ரீக்கு அஸ்வின் கார்டு ஒன்னு குடுத்திரு..."  என்றார் காஞ்சனா

" சரி அம்மா" அனைவரும் சாப்ட்டு முடித்தனர்.. கை கழுவிவிட்டு விடை பெற சென்ற ஸ்ரீயை மீரா கை பிடித்து நிறுத்தினாள்...

" எங்க ஓடுறிங்க ஸ்ரீ.. வாங்க எங்க வீடு தோட்டத்தை சுத்தி பாக்கலாம்..."

" இல்ல நான் வீட்டுக்கு போறேன்.. அம்மா தேடுவாங்க... "

" ஐயோ அமுல் பேபியை தேட போறாங்க... அதெல்லாம் தேட மாட்டாங்க.. நான் மாடசாமி கிட்ட சொல்லி உங்க வீட்ல சொல்ல சொல்லிட்டேன் சரின்னு சொல்லிடாங்க... "

"அப்படியா அப்போ சரி போலாமே..." என்று மீராவும் அவளும் கிளம்பினர்...

"அஸ்வின் பொண்ணுங்க தனியா போறாங்க கூட போப்பா... " என்றார் காஞ்சனா.. ( ஐயோ சூப்பர் ஆண்டி நீங்க.. அஸ்வின் சும்மாவே இப்படி இருக்காரு... இப்போ சொல்லவா வேணும்... )

" சரிமா போய்ட்டு வரேன்... " என்று நல்ல பிள்ளையாக கூறி கொண்டு மூன்று பெரும் கிளம்பினர்... மீரா நடுவில் நடுக்க அஸ்வினும் ஸ்ரீயும் இரண்டு பக்கங்களிலும் நடக்க ஆரம்பித்தனர்... மீராவும் அஸ்வினும் ரகசியம் பேசினார்கள்.. ஸ்ரீ தோட்டத்தின் அழகை ரசித்து கொண்டு இருந்தாள்..

" மீரா அவல செண்டர்ல விடு ப்ளீஸ்.. "

" முடியாது அண்ணா.. அண்ணிக்கு நான் தான் பாதுகாப்பு... "

" ப்ளீஸ் மீரா செல்லம்... " என்று கெஞ்சினான்...

" சரி போனா போகுது..." என்று

"ஸ்ரீ நடுவுல வாங்க... இந்த தோட்டம் எங்களுக்கு பழக்கம்... நீங்க புதுசு

கால் மாத்தி எங்கயாச்சு வச்சிட்டா கீழ விழுந்திடுவிங்க... " என்று அவள் கை பிடித்து நடுவில் கொண்டு வந்து அண்ணனை பார்த்து கண் சிமிட்டினாள்... அஸ்வினும் சிமிட்டினான்... இதை எதையும் ஸ்ரீ கண்டு கொள்ளாமல் ... அந்த தோட்டத்தின் அழகை ரசித்து கொண்டு வந்தாள்...

"நீங்க எல்லாரும் அடிக்கடி இங்க வருவிங்களா மீரா...??"

" இல்ல ஸ்ரீ மோஸ்ட்லி வருஷத்துல ஒரு தடவ தவறாம வந்திடுவோம்.. நீங்க??"

" நானும் அப்படி தான்.." என்று கூறி கொண்டு தன்னை உற்று நோக்கி கொண்டு இருந்த அஸ்வினை பார்த்து...

" உங்களுக்கு ஒழுங்காவே பார்க்க தெரியாத... ஏன் முழிச்சிட்டு பாக்குறிங்க... ??"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.