(Reading time: 26 - 51 minutes)

 

ய்யோ மறுபடியும் பார்வையா?...”

“…………….”

“என்னங்க… போதும்… ப்ளீஸ்…”

“……………”

“இப்படி பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்?...”

“நீ நல்லா இருக்கேன்னு அர்த்தம்…”

“உங்களை…”

“ஹ்ம்ம்… என்னை…”

“சீ… போங்க…”

“போகவா இங்கே வந்தேன்…”

“அதுக்காக…”

“எதுக்காக…”

“ரொம்ப அடம் பண்ணுறீங்க…”

“காதலில் இதெல்லாம் சகஜம்…”

“இருந்தாலும் இது ஓவர் தான்…”

“ஓ…ஹோ….”

“என்ன ஓஹோ..?...”

“நீ மேல சொல்லு…”

“சொல்லிட்டா மட்டும் கேட்டுட போறீங்களா?...”

“கேட்டுக்குற விஷயமா இருந்தா நான் ஏன் மாட்டேங்குறேன்…”

“அதான்… நீங்க கேட்டுக்குற லட்சனத்தை தான் பார்த்தேனே இப்போ…”

“ஏண்டி… உனக்கே இது நியாயமாடி, காதலிக்கிற பொண்ணை ஒரு தடவையாச்சும் பார்க்கணும்னு நினைக்கிறது தப்பா டீ?... இதுல நான் அடம்பிடிக்கிறேன்னு என் மேல பழியை வேற தூக்கிப் போடுற… என் நேரம்டி எல்லாம்…” என்று நொந்து கொண்டிருந்தான் அவ்னீஷ்…

“அதுக்கு உங்களுக்கு ஸ்கூல் தான் கிடைச்சதா?... அபியோடு வந்தாலாச்சும் பரவாயில்லை… இப்படி சும்மா கையை வீசிகிட்டு வந்திருக்கீங்களே… நம்மைப் பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?...”

“காதலர்கள்னு நினைப்பாங்க…” என்றான் அவன் ஷன்வியைப் பார்த்து கண்ணடித்தபடி…

அவள்… இப்படி ஒரு கேள்வி கேட்பாளென்று நினைத்திடாத ஆதர்ஷும் ஒரு நொடி வியந்து தான் போனான்… அவளிடம் பொய்யுரைக்க மனமில்லாது மௌனம் சாதித்தான், அவளும் அவன் திடீரென்று பிரேக் போட்டதில் சிறிது பயந்து போனாள்…

அதே நேரம், “குட்டிமா… ஸ்கூல் வந்தாச்சு, போகலாமா?..” என்று ஆதர்ஷ் கேட்க

,தர்ஷ் உனக்கு அடி படலை தானே…?” என்று மலங்க மலங்க விழித்தபடி அவனைப் பார்த்தாள்..

பயந்துவிட்டாள் என்பதையே அப்போது தான் கவனித்தவன், “ஒன்னுமில்லை குட்டிமா… சாரிடாம்மா… தர்ஷை அடிச்சிடு… உன்னை பயமுறுத்திட்டேன்ல…”

“ஹ்ம்ம்ம்.. போ…” என்றபடி அவனிடம் கை நீட்டினாள்… அவளின் பிஞ்சு கையை தொட்டவன், எல்லையில்லாத நிம்மதியை உணர்ந்தான் அந்த ஸ்பரிசத்தில் தன்னை மறந்தவனிடம்,

“உனக்கு உடம்பு சரி இல்லையா தர்ஷ்… என்னாச்சு, காய்ச்சலா?...” அவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து கேட்டாள் அபி…

அவளின் செய்கையில் கனிந்தவன், “எதுமில்லைடா… நேற்று சரியான அலைச்சல்டா… அதான் உடம்பெல்லாம் வலிக்குது போல… சரியாயிடும்டா…”

“நீ ஊசி போட்டுக்கோ தர்ஷ்… நாம ஈவ்னிங் வெளியே போக வேண்டாம்… டாக்டர் கிட்ட போகலாம்…”

அவளின் அக்கறையில் நெகிழ்ந்தான் ஆதி… “வீட்டிலேயே டாக்டர் அங்கிள் இருக்கிறாரேடா… உன்னை விட்டுட்டு நான் போய் ஊசி போட்டுப்பேனாம்… ஓகே… டீலா டா?...”

“ஹ்ம்ம்… டீல்… தர்ஷ்… வலிச்சா, அழாத… என்ன நினைச்சிக்க… நான் ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுவேன்… சரியா…”

அவளிடம் பதில் பேசாது இரு கரம் விரித்தவனுக்குள் அவள் இருந்தாள்… “என் குட்டிமா….” என்று உச்சரித்தபடி, அவளைத் தூக்கி கொண்டு வகுப்பிற்குள் விட்டு விட்டு திரும்பியவனின் கண்களில் அவ்னீஷின் கார் பட்டது… இவன் இங்கே எங்கே…?... என்று சிந்தித்தவனுக்கு, நேற்றிரவு முகிலன் சொன்னது நியாபகம் வந்தது, கூடவே சற்று முன்பு தந்தை சொன்னதும்… ஹ்ம்ம்… எனில் அந்த பெண் நிச்சயம் அவள் தான்… வீட்டில் இந்த பெண்ணை தான் அவ்னீஷிற்கு பேசி முடிக்க இருக்கிறார்கள் போலும்… ஹ்ம்ம்.. இவனுக்கு விஷயம் இன்னும் தெரியாதே… பிறகு இங்கு எப்படி?... ஓஹோ…. சார், காதல் வளர்க்க வந்திருக்கிறாரா?...

சரிதான்… பொறுப்புள்ள அண்ணனாய் சென்று கொஞ்சம் கண்டிப்போம்… என்று அங்கிருந்த பிரின்சிபால் அறையை நோக்கி நடந்தவனின் கை யாருக்கோ போன் செய்தது… பிறகு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் சில பல மணி நேரங்கள் கழித்து நிறைவுடன் ஷன்வியைப் பார்க்க சென்றான்…

“ஷன்வி மேடமைப் பார்க்கணும்…” என்று அறைவாசலிலிருந்த பியூன் சேகரிடம் கேட்டதும் அவன் உள்ளே சென்று அனுமதி வாங்கி வந்து ஆதியிடம் சொன்னான்….

“சார்… நீங்க உள்ளே போங்க… மேடம் வந்துடுவாங்க…”

“ஹ்ம்ம் சரிப்பா…”

உள்ளே சென்றவனின் கண்களில் பட்டவள் ஷன்வி இல்லை ரிகா…

“ஷன்வியைப் பார்க்கணும்… அவங்க இல்லையா?...”

“வாங்க நீங்க அபி மாமா தானே… வாங்க… ஷன்வி கார்டனில் தான் இருக்குறா…”

“ஹ்ம்ம்.. நீங்க அபி மிஸ் தானே… ஓ… அப்படியா… அவங்களை கொஞ்சம் பார்க்கணுமே உடனே…”

“இருங்க அழைச்சிட்டு வரேன்…”

“வேண்டாம்… உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, நீங்களும் வரீங்களா, அவங்களைப் பார்க்க போகலாம்… எனக்கும் வழி தெரியாது… அதான்…”

“ஹ்ம்ம்… போகலாம்… வாங்க…” என்றபடி அவனுடன் இணைந்து நடந்தாள்… அங்கே சென்றவர்கள் தூரத்தில் வரும்போதே, அவர்கள் இருக்கும் நிலையை அறிந்துவிட, அதற்கு மேல் அங்கு செல்வது முறையல்ல என்று பின் தங்கினர்…  

“அங்கே உட்காரலாமா?... அவர்கள் வரும் வரை…” என்று ஆதர்ஷ் கேட்க அவள் சரி என்றாள்…

ரிகாவிற்கோ, இப்போது தெளிவாய் புரிந்துவிட்டது, ஷன்வி-அவ்னீஷ் காதல் கதை… நேற்றே அவள் ஊகித்ததுதான் என்றாலும் இன்று ஊர்ஜிதமாகி விட்டது… தனது தோழிக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதை விட வேறு எது அவளுக்கு வேண்டும்… அவள் நன்றாக இருக்க வேண்டும்… ஸ்ரீராம்… காப்பாற்று… என்று வேண்டிக்கொண்டாள்…   

“உங்களுக்கு ஷன்வியை எப்போதிலிருந்து தெரியும்?...”

“கல்லூரி சேர்ந்ததிலிருந்து…”

“கல்லூரி முடித்த கையோடு ஸ்கூல் நடத்த ஆரம்பித்து விட்டீர்களா இருவரும்…”

“அவள்தான் நடத்திகொண்டிருக்கிறாள்…”

“புரியவில்லை…”

“நான் இங்கு வந்தே ஒருவருடம் தான் ஆகப் போகிறது… அவள் தான் ஆரம்பத்திலிருந்து நடத்துகிறாள்…”

“எனில் அதற்கு முன் எங்கிருந்தீர்கள்?...”

“மும்பை…”

“அதற்கு முன்…”

“சென்னையில் உள்ள கல்லூரியில் படித்தேன்…”

…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.