(Reading time: 26 - 51 minutes)

முகிலன் அண்ணா உங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் பேசணும்…”

“…………………….”

“அண்ணா உங்களைத்தான்…”

“வந்து பேசிக்கொள்ளலாம்….”

“ஏன்?....”

“கிளம்பு… வெளியே செல்ல வேண்டும்…”

“எங்கே….”

“கிளம்புடா… போகும்போதே எங்கே போறன்னு கேட்டுகிட்டு….”

“சரிண்ணா… சரிண்ணா…”

“டேய்… போதும் டா ஈஷ்… தாளம் போடாம போடா…”

“ஹ்ம்ம்…” என்றபடி முகிலனை யோசனையாக பார்த்தபடி சென்றான் அவ்னீஷ்…

“டேய்… ஹரி… நம்ம மச்சான் கிளம்பிட்டானாடா?...”

“தெரியலையே முகிலா….”

“நீயெல்லாம் என்னடா டாக்டர்… எதை கேட்டாலும் தெரியலைன்னு சொல்லிட்டிருக்குற?...”

“டேய்… அடி வங்காத சொல்லிட்டேன்… நீ என்ன இப்போ ஆப்பரேஷன் பற்றியா கேட்ட, நான் உடனே விளக்கமா பதில் சொல்லுறதுக்கு…”

“யாருக்கு தெரியும்… அதையும் தெரியலைன்னு சொல்லுவியோ என்னவோ…”

“அடிங்க… வானரமே…”

“அடிச்சிட்டா போச்சு…” என்று சொல்லியபடி ஹரியை நாலு அடி போட்டான் முகிலன்…

“அடேய்… பாவி… என்னை ஏன் டா அடித்தாய்?...”

“நீதான மச்சான் அடிங்கன்னு சொன்ன…”

“டேய்… லூசுப்பயலே… உன்னை….” என்றபடி ஹரி துரத்த, அவனிடமிருந்து தப்பித்து ஆதியின் அறைக்கு பக்கத்தில் வந்த போது, ஜன்னல் வழியே ஆதியை கண்டனர்…

அவனின் பின்னே வந்த ஹரி, “இங்கே என்னடா பண்ணுற?...”

“ஷ்….. சத்தம் போடாதே…” என்று வாயின் மீது விரல் வைத்து காட்ட, அவனும் மெதுவாக நடப்பதை கவனித்தான்…

பெரிய கண்ணாடி போட்ட ப்ரேமினுள் இருந்த ஓவியத்தை பார்த்து அதை நெஞ்சோடு வைத்து அழுத்தி கொண்டிருந்தான்… ஆதர்ஷ்… பல நிமிடங்கள்…

ஏதோ உறுத்த, சட்டென்று அதை பத்திரமாக இருந்த இடத்தில் வைத்து விட்டு, வெளியே சென்று விட்டான்….

“முகிலா… என்னடா இது?...”

“ஏன் நீயும் தானே பார்த்த?...”

“டேய்… அதை சொல்லலைடா… ஆதி கையில் வைத்து பார்த்தது புகைப்படம் தானே…”

“தெரியுதுல்ல…”

“அது தெரியுதுடா… ஆனால் அதனுள் இருந்தது என்ன?... அது தெரியவில்லையே…”

“வெற்றிலையில் மை போட்டு பார்ப்போமா மச்சான்?...”

“டேய்… கலாய்க்காம உருப்படியா ஒரு யோசனை சொல்லு…”

“பின்னே என்னடா.. இங்கே இருந்து கொண்டு அது என்னதுன்னு கேட்டால், நான் என்னடா பதில் சொல்லுவேன்… நானும் உங்கூட தான மச்சான் இருந்தேன்…” என்று அழாத குறையாக கேட்டவனைப் பார்க்க ஹரிக்கு சிரிப்பாக இருந்தது…

“டேய்… என்னடா… சிரிக்கிற?...”

“உன்னோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்து தான் மச்சான்…”

“ஆமா… நான் நாதஸ்வரம் எடுத்து அப்படியே தில்லானா மோஹனாம்பாள் சிவாஜி சார் மாதிரி வாசிக்கிறேன்… நீ பத்மினி மாதிரி சிரிக்கிறியாக்கும்… வேலையை பாருடா… இவனே…”

“என்ன வேலைடா அதும்… இங்கே…” என்ற ஆதியின் குரல் கேட்க, இருவரும் பேயறைந்தது போல் நின்றனர்…

“அது… வந்து… மச்சான்.. நீ கிளம்பிட்டியான்னு ஹரியைப் பார்த்துட்டு வர சொன்னேன்… அந்த வேலையை தான் சொன்னேன் மச்சான்…”

“ஓ… சரிதான் மச்சான்… பட், கதவு என்ன இந்த பக்கமா இருக்கு...”

“ஆதி, இவன் அங்கே தான் வந்துட்டிருந்தான்… நான் அப்போ பார்த்து அவனைக் கூப்பிட்டேனா, அதான் இங்கே…” என்று இழுத்தபடி கூறினான் முகிலன்…

சின்ன சிரிப்போடு ஆதியும், “அவ்வளவு தானா?...” என்று கேட்டான்…

“ஹ்ம்ம்… ஆமாடா… முகிலன் சொன்னது தாண்டா…” என்றான் ஹரி…

இருவரையும் மாறி மாறி பார்த்தவன், “சரி, கிளம்பலாமா?...” என்றான்…

“ஹ்ம்ம் வாடா..போகலாம்…” என்றபடி செல்லும் முகிலனையும் ஹரீஷையும் பின்தொடர்ந்தான் ஆதர்ஷ்…

“அக்கா… குட்டிமா எங்கே…”

“அவ அப்பவே வந்தாச்சு… உன் மாமா கூட்டிட்டு வந்தார்…”

“ஓ….”

“ஹ்ம்ம் வாடா.. போகலாம்…”

“அவ்னீஷிற்கு விஷயம் சொல்லிட்டீங்களா?...”

“நாங்க சொல்லலை… பட்… நீ இந்நேரம் சொல்லியிருக்கணுமே…” என்றபடி தமையனை ஆராய்ந்தாள்…

சிரிப்போடு, “ஹ்ம்ம்.. புத்திசாலி தான் அக்கா நீ… வீட்டில் சம்மதம் என்று மட்டும் சொல்லியிருக்கிறேன்…. மற்றபடி இப்போ எங்கே செல்கிறோமென அவனுக்கு தெரியாது… சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்…”

“சரிடா…”

‘குட்டிமா என்னுடன் வரட்டும்…”

“கேட்கணுமாடா இதெல்லாம்…”

பதில் சொல்லாது சிரித்தபடி செல்பவனைப் பார்க்க அவளால் முடியவில்லை…, எத்தனை நடந்தாலும் அதை கொஞ்சம் கூட தோற்றத்தில் காட்டி கொள்ளாமல், சிரித்த முகத்துடனே செல்கிறானே… இறைவா… இவனுக்கு சீக்கிரம் நல்லது நடக்க வேண்டும்… வழி காட்டு என்று வேண்டிக்கொண்டாள்…

“என்னங்க… நாம எடுத்த முடிவு நல்ல முடிவு தானே…?...”

“கண்டிப்பா கோதை…”

“ஆதி சீக்கிரம் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கணும்ங்க….”

“நிச்சயமா வைப்பான்மா…”

“ஹ்ம்ம்…”

“நம்புடா… அந்த ஸ்ரீராமன் அதற்கு வழி காட்டுவார்…”

நாமும் நம்புவோம்…. ஸ்ரீராமன் நல்வழி காட்டுவார் என்று…. இவர்களின் குடும்பத்திற்கு….

நீங்க என்னை திட்டுறது தெரியுது… இந்த வாரமும் உங்களின் சில கேள்விகளுக்கு என்னால் பதில் தர இயலவில்லை… அடுத்த வாரத்தில் நிச்சயம் விடை இருக்கும்…. இந்த வாரமே சொல்லி விடலாம் என்று தான் நினைத்தேன்… இதுவே… ஏழு பக்கம் வந்து விட்டது… இன்னும் விடையும் சொன்னால், அது ஐந்து பக்கத்திற்கு போய் விடும்… அதனால் தான்…. அதை அடுத்த வாரப் பதிப்பாக வெளியிட முடிவு செய்தேன்… தங்கள் அனைவரையும் காக்க வைப்பதற்கு மன்னிக்கவும்…

தொடரும்

Go to episode # 04

Go to episode # 06

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.