(Reading time: 26 - 51 minutes)

 

ன்ன அப்பா… அம்மா எதுக்கு தம்பிகளை கூப்பிடுறாங்க?...”

“அதை உங்க அப்பாவே சொல்லுவார்… நீ ஷியாம் மாப்பிள்ளையை வரசொல்லுமா”

“அனுவை அலைய விடாம மாமாவே இங்கே வந்துவிட்டாரே பின்னே என்ன..?.. என்ற முகிலனின் குரல் கேட்க, அங்கே ஆதர்ஷ், முகிலன் மற்றும் ஷியாம் வந்து கொண்டிருந்தனர்…

“நம்ம அவ்னீஷ் எங்கே…?...” என்று அனு வினவ,

“அவன் ஏதோ வேலையிருக்குன்னு இப்போதான் அவசரமா கிளம்பி போனான் அக்கா… சீக்கிரம் வந்துவிடுவேன்னும் சொல்ல சொன்னான்..” என்று ஹரீஷும் வந்தான்…

“ஓ… அவ்வளவு முக்கியமான வேலை என்ன இருக்கும்டா ஆதி அவனுக்கு…”

“தெரியலைடா முகிலா…”

“அங்கே என்னடா… மெதுவா பேசிக்கிறீங்க?...”

“எல்லாம் உன்னையும் மாமாவையும் பற்றிதான் என் செல்ல அக்கா…”

“டேய்… வேண்டாம்… காலையிலேயே என்னை வம்பிழுக்காதே…”

“ஆமா… உன்னை இழுத்துட்டாலும்…” என்று முகிலன் சொல்ல,

“முக்கியமான விஷயம் அப்பா இப்போ சொல்லுவார், கவனிங்கடா அதை முதலில்…” என்று ஒரு அதட்டல் போட்டார் கோதை செல்லமாய்…

“அம்மாவைப் பார்த்தியாடா ஆதி, அதட்டுறாங்களாம்….  ஹிஹிஹிஹி… எனக்கு சிரிப்பா வருதுடா.. நம்ம அம்மா சோ… சுவீட் டா…”

முகிலா என்று இம்முறை சற்றே அழுத்தமாய் கூறினார் கோதை….

“உனக்கு வேணும்டா… நல்லா… மகனே மாட்டுடா… ராசா…” என்று அவனை கிண்டலடித்தான் ஆதி…

அவனைத் திட்ட வாயெடுத்தவன், சுந்தரம் எல்லோரையும் அமர செய்வதை கவனித்து வாய் மூடிக்கொண்டான்…

“நேற்று விருந்துக்கு வந்திருந்த என் நண்பனின் மகளை எங்களுக்குப் பிடித்திருக்கிறது…. அந்த பெண் நம் வீட்டு மருமகளாய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் எண்ணுகிறோம்… நீ என்ன சொல்லுகிறாய் ஆதி?...”என்று பட்டென்று கேட்டுவிட்டார் அந்த குடும்பத்தின் தலைவர்…  இது தான் சுந்தரம்… சுற்றி வளைத்து பேசுவதெல்லாம் அவருக்கு வராது…

“இதில் நான் சொல்ல என்னப்பா இருக்கு,,,”

“நீ சொல்லாமல் வேறு யார் சொல்லணும் ஆதி…”

“அந்த பெண்ணை மணமுடிக்கப் போகிறவன் சொல்லணும்…”

“நீ சொல்வதும் சரிதான்… ஆனால் அந்த பெண்ணை மணமுடிப்பவன் உனது கூட பிறந்தவனாயிற்றே…”

“அதை தெரிந்து தான், நான் அவ்னீஷிடம் பேச சொல்கிறேன்…” என்றான்… தகப்பன் எங்கு வருகிறார் என்பது புரிந்து…

அவரா சளைப்பவர், “அதற்கு தான் இங்கே நாம் கூடியிருக்கிறோம்…” என்றார் அவனைப் பார்த்து…

“மணமகன் வேண்டாமா?...”

“அதான் இருக்கிறாயே… நீ… எங்களின் எதிரில்…”

“அப்பா!!!!!....”

“அப்பாதான் பா… நான்… உனக்கு… அதனால் தான் நானும் பொறுத்துக்கொண்டேன் இதுவரை… இனியும் முடியாது எங்களால்… நாங்கள் பெற்ற பிள்ளைகள் நலமுடன் குடும்பமாய் வாழ ஆசைப்படுவதில் பெற்றவர்களாகிய எங்களின் சில கடமைகள் நிறைவேறுவது, உனக்குப் புரியுமா?.. இல்லை தெரியுமா?... இத்தனை நாள் நீ சொன்னதற்கு தலை ஆட்டினோம்…. இனி நாங்கள் சொல்வதை கேள்… அதன் பின் உனது விருப்பம்…”

அவனுக்கு தெரியும்… சுந்தரம் உன் விருப்பம் என்று சொன்னால், அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று… ஏனெனில், அவனும் அந்த வார்த்தையை நடைமுறையில் உபயோகப்படுத்துபவன் ஆயிற்றே… எனினும் அவனால் அவர் சொல்வதற்கு சம்மதிக்க இயலாதே….

“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா… எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை…”

“இதை தானே… நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய் திரும்ப திரும்ப… எங்களுக்கு பிடிக்காது என்று தெரிந்தும்…”

“நீங்கள் தானே… உங்களுக்குப் பிடிக்காததை என் வாயால் சொல்ல வைக்கின்றீர்கள்…”

“எப்போது தான் திருமணம் செய்து கொள்ளப் போகின்றாய்?...”

“மனமில்லை எனக்கு திருமணம் செய்து கொள்ள…”

“அதுதான் ஏன்?...”

“பிடிக்கவில்லை…”

“வரும் வரன்களை எல்லாம் தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றாய் நீ… ஆதலால் இனி உன்னிடம் கேட்டு நாங்கள் முடிவு செய்ய போவதில்லை…”

“நல்லது… முடிவு செய்யாமலே இருங்கள்… அது தான் எனக்கும் வேணும்… இப்போது நான் வெளியே செல்ல வேண்டும்… வேலை இருக்கிறது… குட்டிமாவைப் பள்ளியில் விடுவதாக கூறியிருக்கிறேன்… அவளை விட்டு விட்டு வந்து விடுகிறேன்… அதுவரை முடிவு செய்யாமல் இருப்பதை பற்றி நல்ல முடிவு எடுங்கள்…” என்று சிரிப்போடு கூறிவிட்டு சென்று விட்டான் அவளின் குட்டிமாவைத் தேடி…

மகனின் பேச்சை அந்த நேரத்திலும் ரசிக்காமலிருக்க அந்த பெற்றவர்கள் தவறவில்லை… அவன் வரட்டும்… வந்த பின்னர், பேசி கொள்ளலாம் என்று சுந்தரம் கூறிவிட, அங்கே மற்றவர்கள் அமைதியாகினர்…

“தர்ஷ்… என்னை வெளியே அழைத்து செல்வாய் தானே இன்று?...”

“கண்டிப்பாக டா…”

“அப்போ… ஓகே… குட்.. தர்ஷ்… நீ…”

“ஹாஹாஹா…”

“தர்ஷ்… நீ அழகா சிரிக்கிற… எனக்கும் சொல்லிக்கொடேன்…”

“எதை டா…”

“சிரிப்புதான்…”

“என்னை விட நீ தான் டா குட்டிமா.. அழகா சிரிக்கிற… இது மட்டுமா, நல்லா பாடுற, ஆடுற, வரையுற, பேசுற, படிக்குற… எல்லாத்திலும் என் குட்டிமா அழகு தாண்டா எல்லாரையும் விட…”

“நிஜமாவா தர்ஷ்…” என்று தன் சின்ன கண்களை உருட்டி கேட்டாள் அபி…

“நிஜமாடா…”

“பொய் இல்லையே…”

“உன் தர்ஷ் பொய் சொல்வானாடா?...” என்று அவன் தலை சரித்து கேட்ட விதத்தில்,

“எங்கிட்ட சொல்லமாட்ட தான்…” என்று ஆர்ப்பரித்தாள்…

“ஹ்ம்ம்.. அது உனக்கு தெரிஞ்சு போச்சா?...”

“ஆமா.. ஆமா… தர்ஷ்…”

“சரிடா குட்டி…”

“தர்ஷ் உங்கிட்ட ஒன்னு கேட்கணும்… நீ பதில் சொல்லுவியா?...”

“என்னடா… கேளுடா… நீ கேட்டா கண்டிப்பா சொல்லுவேண்டா…”

“எப்போ கேட்டாலும் சொல்லுவியா?...”

“என்னாச்சு என் குட்டிமாக்கு, இன்னைக்கு கேள்வியா கேட்குறா?... ஹ்ம்ம்”

“சொல்லு தர்ஷ்… எப்போ கேட்டாலும் சொல்லுவியா மாட்டியா?...”

“நிச்சயமா சொல்லுவேண்டா… உனக்காக…”

“நீ ஏன் என்னை அபின்னு சொல்லமாட்டிக்குற?...”

அவள் கேட்டதும் காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் சட்டென பிரேக்கை அழுத்தினான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.