(Reading time: 39 - 78 minutes)

 

ருவரும் பேசியவாரே வீடு வந்து சேர, தேஜு கூறிய செய்தி வெங்கட் ஹேமாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வேலை கிடைத்தபின் அர்ஜுன், அஹல்யாவிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள் அனு.

அங்கு அஸ்வத்தோ பெரும்பாலும் யோசனையிலேயே இருந்தான். அவனை தேர்தெடுத்த நிறுவனத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வர 2 மாதங்கள் இருந்தது. அதுவரை என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போயிருந்தான். வீட்டிலேயே இருந்தால் அனுவின் நினைவே அதிகமாக வந்தது. எவ்வளவு மறைத்தும் தந்தை கண்ணனின் கண்களில் இருந்து தப்ப முடியவில்லை.

என்ன பண்ற அஸ்வத்? சாப்பிட்டியா அஸ்வத்? படிச்சியா அஸ்வத் என்று அவள் நிமிடத்திற்கு பல முறை அழைத்து பேசுவது நினைவு வர, மனம் வலித்தது. கோவத்தை விட்டுவிட்டு பேசிவிடலாமா என்று தோன்றும் போதெல்லாம் அவன் பிறந்தநாள் அன்று நிகழ்ந்ததே நினைவிற்கு வந்தது. அவன் என்ன சொன்னாலும் நம்பிவிடுவதா? ஒரு முறை ஒரே ஒரு முறை இல்லை என் அஸ்வத் அப்படி பண்ண மாட்டான்னு சொல்லிருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று நினைத்து வேதனை பட்டுக்கொண்டு இருந்தான். பலமுறை கைபேசியை எடுத்து அவளது எண்ணுக்கு அழைக்க எண்ணி, கடைசி நிமிடத்தில் மாற்றிக்கொண்டான்.

இவன் கண்கள் மூடி மோன நிலையில் இருக்க, அதை களைத்தது கண்ணன் தான்.

“அஸ்வத்...”

“என்னப்பா?”

“இப்படியே எத்தனை நாள் இருக்க போகிற? வேலைக்கு போகுற வரைக்கும் நம்ம கடைக்கு வரலாமே” என்று அக்கறையாக கூறினார்.

உள்ளே வேலை செய்து கொண்டிருந்த துளசி உடனே வெளியே வந்து, “பாவம்ங்க அவன் வேலைக்கு சேருற வரைக்கும் ஓய்வெடுக்கட்டுமே” என்று பையனுக்காக பேசுவது போல் கூறினார்.

அமைதியாக இருவர் பேசுவதையும் கவனித்து கொண்டிருந்த மகனை ஒருமுறை பார்த்துவிட்டு “அதெல்லாம் ஒன்னும் வேணாம் வேலை செஞ்சுகிட்டே இருந்தால்தான் தேவையில்லாத எண்ணங்களை தவிர்க்க முடியும்” என்று மறைமுகமாக அஸ்வத்துக்கு குறிப்பு தந்தார்.   

தந்தை கூறுவதும் சரியென தோன்ற நாளை முதல் வருவதாக ஒத்துக்கொண்டான். அங்கு சென்று வேலை செய்த குறுகிய நேரத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டான். என்னதான் கூட்டம் அலைமோதினாலும் இது பத்தாது இதைவிட பெரிய அளவிற்கு கடையை கொண்டு போக வேண்டும் என்று நினைத்தான் அதற்கான வழியையும் யோசித்தான். நினைத்தவுடன் கிடைக்க அது ஒன்றும் கடையில் வாங்கும் பொருள் இல்லையே. ஒரு நல்ல யோசனைக்காக காத்திருந்தான்.

மும்பை... சென்னை மாநகரில் தி.நகர்க்கு சென்றாலே எறும்பு கூட்டம் மொய்ப்பது போல் ஒரு பிரமை தோன்றும், அப்படி பட்ட மாநகரத்தையே விழுங்கிவிடுவது போல் இருக்கும் மும்பை. அவ்வளவு மக்கள் வசிப்பர். சுற்றிலும் ஹிந்தி பேசிக்கொண்டு சுற்றும் மக்கள், சுட்டெரிக்கும் வெயில்... இந்த கூட்டநெரிசலில் காலை கிளம்பி நிறுவனத்தின் உள்ளே சென்றுவிட்டால், வெளியே எப்படி வெயில் அடித்தாலும் தெரியாது.. வெயிலா, மழையா, குளிரா எல்லாம் ஒன்று போல் இருக்கும் I.T நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு... காலை உள்ளே சென்றால், விடியல் சென்று இரவு தான் வெளியே வர முடியும்.. ஆனால் வெளியே இருந்து பார்பவர்க்கு பெரிய நிறுவனத்துல வேலைப்பா... கை நிறைய சம்பளம் ac வேற நல்லா சொகுசா இருக்கான் என்று தான் தோன்றும். ஆனால் உள்ளே படும் அவஸ்தையெல்லாம் முடிவைத்த கண்ணாடி ஜன்னல்களுக்குலேயே இருந்துவிடும்.

(கீழே வரும் எல்லா உரையாடலும் ஆங்கிலத்தில் இருக்குறதா நினைச்சிக்கோங்க...)

“ஒரு வேலை தந்தால் ஒழுங்கா செய்யனும், சந்தேகம் இருந்தால் அதை கேட்டு புரிஞ்சி கத்திகிட்டு பண்ணுங்க மனோஜ். திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங். எப்படியோ கடைசி நேரத்தில நிரஞ்ஜன் பார்த்து கண்டுபிடிச்சதால mistakes சரி பண்ண முடிஞ்சிது, இல்லாட்டி clients என்ன நினைச்சிருப்பாங்க... போங்க போய் வொர்க்க continue பண்ணுங்க...” என்று டீம் லீட் கத்திக்கொண்டிருக்க, அதை தலை குனிந்தவாறே வாங்கிக்கொண்டு மனதில் நிரஞ்ஜனை திட்டிக்கொண்டு இருந்தான்.

எப்படி இவன் மட்டும் இப்படி genius இருக்கான்னு தெரியலை. கரெக்டா தப்பை கண்டுபிடிச்சு நம்மளுக்கு திட்டு வாங்கி தரான் என்று வருதெடுத்துக்கொண்டு நின்றான்.

“சரி போங்க போய் நிரஞ்ஜனை வர சொல்லுங்க...”

(ஆமா நான் வர சொல்லுறேன் அப்படியே மடியில தூக்கி வச்சி கொஞ்சுங்க, என்னதான் ஐஸ் வச்சான்னே தெரியலை ஹ்ம்ம்) இதெல்லாம் மனதில் ஓட வெறும் எஸ் சார்... மட்டும் சொல்லி சென்றான்.

சில மணி நேரத்தில் நிரஞ்ஜனும் வந்துவிட, இனிமையான உரையாடலே சென்றது. “நீ வெளிலையே போக மாட்டியா நிரஞ்ஜன்”.

“அப்படியெல்லாம் இல்ல சார். புது இடம் சோ எங்கயும் போறது இல்லை...” சிலரை பார்த்தால் மட்டும் மனம் லேசான உணர்வு வரும் அதுபோல தான் நிரஞ்ஜனின் சீனியர்...

“அப்படியா? ஏன் வீட்டுக்கு வேணும்னா வாயேன் இந்த வாரம்...”

“அது....”

“ஏன் இவ்வளவு யோசிக்குற? நான் ஒன்னும் வேலை செய்ய கம்பனிக்கு கூப்பிடலையே” என்று புன்முறுவலோடு கூறினார் அந்த 45 வயது சீனியர்.

அவனது மனமும் ஒரு மாறுதலை தேடியது. தனியாக அறையெடுத்து தங்கிருந்தான். பேச்சு துணைக்கும் ஆளில்லை, அப்படியே வந்தாலும் பேச ஒன்றும் தோன்றுவதில்லை. தொலைபேசி எடுக்கவே பயமாக இருந்தது அவனுக்கு... மாறி மாறி அனைவரிடமும் இருந்தும் அழைப்பு வந்தது. முதல் சில நாட்கள் தேஜுவின் அழைப்பு வந்தது. ஆனால் அதுவும் கொஞ்ச நாட்களாக நின்று போய்விட்டது. என்னதான் அவனது முடிவு அதுதான் என்றாலும் மனம் வலிக்க தான் செய்தது. தன்னையும் அறியாமல் அவளை அழைத்துவிடுவோமோ என்று கையில் எடுப்பதே இல்லை.

நேரம் செலவிட ஆட்கள் இல்லை, காசும் தனக்கு மட்டும் தான் என்றிருக்க, அது குறைந்தபாடில்லை... முன்பை போல் இல்லை என்றாலும் தன்னாலும் முடியும் என்ற எண்ணம் கொஞ்சம் துளிர்விட ஆரம்பித்து இருந்தது.

அந்த வாரம் அவனும் தன் மேலதிகரி வீட்டிற்கு சென்றிருந்தான். “வாப்பா நிரஞ்ஜன் வா வா” என்று அவனது மேலதிகாரி ராம் அழைப்பார் என்று எதிர்பார்த்தால், அவரது மனைவி அப்படி அழைத்தார். கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் புன்முறுவலோடு சென்றான்.

“எப்படி இருக்க? என்ன குடிக்குற? வேலை எல்லாம் எப்படி போகுது? ராம் உன்னை ரொம்ப வேலை வாங்குறாரோ?” என்று கேள்விகளை அடிக்கிக்கொண்டே போக நிரஞ்ஜன் அசந்துபோனான். இவன் பதில் பேசாமல் இருப்பதை பார்த்துவிட்டு “வா நிரஞ்ஜன் என்ன பேசியே காதில ரெத்தம் வர வைகுரளா?” என்று கிண்டல் செய்தவாறே வந்தார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களை பார்க்க ஆச்சர்யமாக தான் இருந்தது அவனுக்கு. அதே போல் ராமின் மனைவி ஒன்றும் பேரை சொல்ல மாட்டேன் என்று சிணுங்கவும் இல்லை இந்த கால தம்பதி போல் எளிதாக பேசிக்கொண்டனர். நிறைய பகிர்ந்துக்கொண்டனர். இந்த வயதிலும் ராம் கிண்டலுக்கு அந்த கால நினைவுகளில் காதல் பார்வை பகிர்ந்துக்கொண்டனர்.

“நீ நம்பவே மாட்ட ரஞ்ஜன்... இவள் கூட படிக்குற இன்னொரு பெண்ணை தான் சைட் அடிக்க சைக்கிள் எடுத்துகிட்டு ஆளாளுக்கு ஓடுவோம்.. என்னவோ என் விதி அன்னைக்குன்னு பார்த்து என் சைக்கிள் பஞ்சர்... சரி இன்னைக்கு குடுத்து வைக்களைனு பொறுமையா வண்டிய தள்ளிட்டு போனா... ஒரு 2 அடி தூரத்துல பளார்னு ஒரு அறைவிலுற சத்தம்... யாருடான்னு பார்த்தால் என் கூட வர பையன் கொஞ்சம் அவசரபட்டு அந்த பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்திட்டான். சரி அந்த பொண்ணு தான் அரஞ்சிட்டாள்னு பார்த்தால், அந்த பொண்ணு சும்மா அழுதுகிட்டு இருக்கு....பக்கத்தில நம்ம ஜான்சி ராணி நிக்குறாங்க” என்று அன்று இருந்த அதே காதலோடு ஒரு பார்வை தொடுக்க, அன்றைய ஜான்சி ராணியோ முகம் சிவந்தாலும் அதை மறைத்து பொய்யாக முறைத்தார்.

“அப்பறம் என்ன என்னையும் ஜான்சி ராணியையும் மட்டும் சுத்தி ஒரு ஒளிவட்டம் அடிக்குது, எல்லாம் வெள்ளை நிற உடைல ஆடுறாங்க background மியூசிக் வேற...” என்று மனம் நெகிழ்ந்து ரசித்து கூறிக்கொண்டிருந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.