(Reading time: 39 - 78 minutes)

 

தேஜுவுக்கு தோழி சிரமப்பட்டதை பார்த்ததில் இருந்து அஸ்வத்தின் மீது கோவமாக இருந்தாள் எங்கே வாயை திறந்தாள் திட்டிவிடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக இருந்தாள்.

அஸ்வத்தின் நிலைமை இன்னும் மோசம், பேசலாமா? நான் ஏன் பேசணும்? அவள் தானே தப்பு செய்தாள் அவளே பேசட்டும்... அக்கா மாமாலாம் இருக்காங்க அதுக்காகவாது பேசணுமோ?(அவங்களை காரணம் காட்டி பேச நினைக்குறாரு) ம்ம்ம் ஹ்ம்ம் நான் பேசமாட்டேன் என்று ஒரே குட்டி பட்டிமன்றம் நடந்தது.

மூவரையும் மாறி மாறி பார்த்த அஹல்யாவும் அர்ச்சனாவும் கண்களில் பேசிக்கொண்டனர். அர்ஜுனும் நவீனையும் உள்ளே வெங்கட் அழைத்துவிட எழுந்து சென்றுவிட்டனர்.

“அனு உனக்கும் அஸ்வத்துக்கும் ஏதாவது சண்டையா?” என்று அஹல்யா கேட்டாள்

அஸ்வத் அங்கு இருக்க பிடிக்காமல் எழ முயற்சிக்க அர்ச்சனா தடுத்தாள். “அவன் எதுவும் சொல்ல மாட்டான் நானே சொல்லுறேன்” என்று தேஜு ஆரம்பித்தாள், உடனே அனு கையமர்த்தி தேஜுவை நிறுத்திவிட்டு. “அதெல்லாம் இல்லை அண்ணி எனக்கு வேலை இருக்கு நான் போறேன்” என்று அனு சென்றுவிட்டாள்.

அவள் செல்வதையே வெறுப்போடு பார்த்துக்கொண்டு இருந்த அஸ்வத் “பார்த்தில்ல எவ்வளவு திமுரா போறாள்னு இவளை பத்தி இனிமேல் என்கிட்ட பேசாத” என்று அவனும் சென்றுவிட்டான்.

அனு சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டதால் தேஜுவும் என்ன செய்வது என்று புரியாமல் முழிக்க, பெரியவர்கள் இருவரும் பிறகு தனியாக பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். சிறிது நேரம் யோசனையிலேயே போக, அர்ச்சனாவிற்கு வேறு ஒரு சந்தேகம் தோன்ற தானாக ஆரம்பித்தாள் “ஏன் அஹல் நீ நிருக்கு கால் பண்ணியா? அவன் இப்போலாம் கால் பண்ணால் எடுக்கவே மாட்டிங்குறான்” என்று கேட்டுக்கொண்டே தேஜுவை அளந்தாள், அர்ச்சனாவின் கண்ணசைவில் அஹல்யாவும் பதில் கூறிக்கொண்டு கவனிக்க தேஜு தன்னிலை தவறினாள். எங்கே தன்னிடம் அவனை பற்றி விசாரித்துவிடுவார்களோ என்று தடுமாற்றம் தோன்ற சில நொடிகள் அவர்கள் பேசினாலும் கவனிக்காதது போல் தூரத்தில் பார்ப்பதும், கைகடிகாரத்தை கவனிப்பதும் என்று செய்தவள் திடிரென “அண்ணி நான் உள்ள போறேன் அனு என்ன பண்ணுறாள்னு தெரியலை” என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.    

அவளும் சென்றபின், “அர்ச்சு....” என்று அஹல்யா ராகம் போட்டாள்.

“அதே தான்... இந்த சின்ன வாண்டுகள் எல்லாம் சேர்ந்து ஏதோ நம்மகிட்ட மறைக்கிதுங்க...”

“ஆமா அர்ச்சு அச்சச்சோ இப்படியே போனால் சண்டை பெருசாகிடுமே...” என்று அஹல்யா பயப்பட, “ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை, எல்லாரும் பண்ணுறதை பார்த்தால் பேசிக்குறது இல்லை போல, ஆனால் ஒவ்வொருத்தர் முகத்துலையும் ஏக்கம் இருக்கு.. கண்டிப்பா பேசிடுவாங்க. கொஞ்ச நாள் பார்ப்போம் இல்லைன்னா நம்ம எதுக்கு இருக்கோம்” என்று விஷம சிரிப்பொன்று உதிர்த்தாள் அர்ச்சனா.

“கரெக்டா சொன்னடி..” என்று சேர்ந்து சிரித்துக்கொண்டாள்.

அஸ்வத்தை சந்தித்துவிட்டு வந்த அனுவுக்கு பலயநினைவுகளில் கண்கள் கலங்கியது, யாருக்கும் தெரியாமல் இருக்க மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள். தேஜு சிரமப்பட்டு நிரஞ்ஜனின் நினைவை நகர்த்தினால் இன்று அவர்களின் பேச்சில் மனம் பழையபடி முரண்டுபிடித்தது. அவனின் நினைவும் கோவமும் சேர்ந்துகொள்ள அவளும் மாடிக்கே சென்றுவிட்டாள். அஸ்வத்தும் கோவப்பட்டு வந்துவிட்டாலும் பல நாட்கள் கழித்து அவளை கண்டத்தில் மனம் தடுமாறினான். தனக்காகவே அவள் தயாராகி வந்திருக்கிறாள் என்று புரிந்தது, அவன் இருக்கிறானா என்று அனு தேடியதை எல்லாம் தூரத்தில் இருந்து அவன் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். கோவம் ஒருபுறம் காதல் ஒருபுறம் இருந்தும் காதலை காட்ட முடியாத வேதனையில் அவனும் மாடிக்கு வந்துவிட்டான்.

3 அடுக்கு மாடிகளை சேர்த்தது போல் அமைந்திருந்தது அந்த மாடி, மூன்றி மாடியும் செர்க்கபட்டிருக்க நடுவில் இருந்த சுவர்கள் மூவரின் வருகையையும் மற்றவருக்கு தெரியபடுத்தவில்லை. சிறிது நேரம் யோசனையில் இருந்த தேஜுவுக்கு அழுகை மட்டும் வரவில்லை. என்றாவது ஒருநாள் நிரஞ்ஜன் வருவான் என்று அவள் அரிவாள் ஆனால் அவன் வரும் பொழுது அவனுக்கு புரியும்படி ஏதாவது செய்யவேண்டும் என்ற கோவம் தான் அதிகமாக இருந்தது. எவ்வளவு கோழைத்தனமான முடிவு என்ற கோவத்தில் இருந்தாள். தன்னைவிட அவன் பிரிதலில் வேதனை படுவான் என்று தெரிந்ததாலேயே அதுவே அவனுக்கு தண்டனை என்று புரிந்து தனது கைபேசி எண்ணையும் மாற்றிவிட்டாள்.

அஸ்வத் கடைசி கட்டிடத்தின் மாடியில் இருக்க, அடுத்த மாடியில் அனு இருந்தாள். அஸ்வத் வேதனையோடு “ஏன்டி இப்படி பண்ணின ஒருவார்த்தை நீ அப்படி பண்ணிருக்க மாட்ட நான் நம்புறேன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல” என்று கூறியபடி செவிற்றில் அடித்தான். அவன் பேசுவதெல்லாம் அனுவுக்கு கேட்க, அவளையே வெறுத்தாள்.. அவன் செவிற்றில் கையால் இடித்துகொள்ளும் சத்தம் கேட்டு அங்கு சென்றவள், அவன் கைகளை தன் கையில் எந்திக்கொண்டாள். அவன் கைகளில் காயம்பட்டிருக்க பதறிபோய் அவள் முந்தானை வைத்து ஒத்தடம் கொடுத்தாள். கைகள் தானாக அந்த வேலை செய்ய, கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.   

அவளின் நிலை பார்த்தவனுக்கு கஷ்டமாக இருந்தது, அவள் கண்ணீர் அவனை இன்னமும் சிரமபடுத்த அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கைகள் தானாக அவளது கண்ணீரை துடைக்க சில நொடிகள் இருவரும் மௌனமாய் கலந்தனர்.

சிறிது நேரம் அவள் கண்களில் கலந்திருந்தவன் சுதரித்துவிட, தன் கையை விலக்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான். அவன் செல்வதையே இயலாமையோடு பார்த்தவள் இன்னும் எத்தனை நாட்கள் அவனையும் வேதை படுத்தி தன்னையும் வேதனை படுத்த போகிறான் என்று மௌனமாய் சோகபட்டாள்.

“இமையே இமையே விலகும் இமையே

விழியே விழியே பிரியும் விழியே

எது நீ எது நான் இதயம் அதிலே

புரியும் நொடியில் பிரியும் கனவே

பனியில் மூடி போன பாதை மீது வெயில் வீசுமோ...

இதயம் பேசுகின்ற வார்த்தை வந்து காதில் கேட்குமோ”

அந்நேரம் அவளின் தோளில் தேஜுவின் கைப்பட கண்களை துடைத்துக்கொண்டு அவள் புறம் திரும்பினாள். தேஜுவின் முகமும் சோர்ந்து இருந்தது, அனுவின் நிலை கண்டு. அவளது முகத்தை வைத்தே புரிந்துக்கொண்டு “ஒன்னும் ஆகலை தேஜு கொஞ்ச நாள் தான் ஆனால் அவன் மனசுல இருக்க காயத்தை எப்படி போக்குரதுன்னு தான் தெரியலை” என்று வேதனைபட்டாள்.

“எல்லாம் சரியாகிடும் அனு. கவலைபடாத” என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டாள். தேஜுவின் மனம் அனுக்காக வருந்த, அனுவின் மனம் தேஜுவுக்காக வருந்தியது. இவ்வளவு நல்ல தோழியின் மனம் புன்படுத்தியவன் மீது கோவம் தான் வந்தது. இருப்பினும் ஏதேனும் செய்யவேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஒருவழியாக முன்பை போல் வானரங்கள் எல்லாம் சேர்ந்து ஆடி விழாவை சிறப்பிக்காவிட்டாலும் திருப்தியோடும் ஆசிர்வாதத்தோடும் நடந்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கிளம்ப அர்ஜுனின் முகம் தான் சிறுத்துவிட்டது. அஹல்யா மௌனமாய் கெஞ்ச, சோகமாகவே இருந்தான். அர்ச்சனா அவன் காதில் ஏதோ கூற அவன் முகம் பிரகாசமாகிவிட்டது.. என்னவென்று கேட்டவளுக்கும் பதில் தராமல் அர்ஜுன் தன் அறைக்கு சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து வந்தவனின் கையில் பெட்டி இருந்தது அனைவரும் அவனை பார்த்து சிரிக்க, கொஞ்சம் அசடு வழிந்தவாறே “நான் வந்து விட்டுட்டு வந்திருவேன் பாதுகப்பா போகணுமில்லை அதான்” என்று கூறி அவன் அஹல்யாவை பார்த்து அவன் கண்ணாடிக்க அவளும் சிரித்துக்கொண்டே அவனோடு கைகோர்த்துக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.