(Reading time: 39 - 78 minutes)

 

வன் கோவப்படுவதை ரசித்தவாறே அவனை மனதில் கொஞ்சிக்கொண்டு... “இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க, 5 மாசத்துலேயே function வைப்பாங்க அப்பயும் நோ சொன்னீங்க சரி 7 மாசத்தில வைக்கலாம்னு சொன்னாங்க அப்பயும் நோ சொன்னிங்க, இப்போ எத்தனை மாசம் தெரியுமா? 9 மாசம் இப்பயும் நோ சொன்னா சண்டைக்கு வந்திடுவாங்க” என்று அவன் கோவத்தை ரசித்தவாறே கூறினாள்.

“நான் தான் உன்னை பார்த்துகுறேனே வேணும்னா அவங்களையும் வர சொல்லு நம்மாலே பார்த்துக்கலாம் எதுக்கு உன்னை கூட்டிட்டு போறாங்க இந்த companylayum லீவே தர மாட்டிரான்னுங்க ச்சே” என்று முகத்தை திருப்பிக்கொண்டான். ஏனோ அவன் செய்வதெல்லாம் சிறுபிள்ளை போலவே தோன்றியது.. மெல்லிய புன்னகையோடு அவன் முகத்தை ஏந்தி நெற்றியில் முத்தம் தந்தவள், “என்னடா சின்ன குழந்தை மாதிரி இருக்க? நமக்கே ஒரு பையன் வர போறான்...”

“பையன் இல்லை பொண்ணு..”

“சரீஈஈ பொண்ணு...”

“கொஞ்ச நாள் தான் சரியா நீயும் வாரா வாரம் வந்திட போற அப்பறம் என்ன? சமத்தா சிருச்சுகிட்டே அனுப்புவியாம்...” என்று செல்லம் கொஞ்ச மனம் கொஞ்சம் இறங்கியது... அவளையே சில மணி துளிகள் பார்த்துக்கொண்டிருந்தான்...

அழகான வட்ட முகத்தோடு தாய்மையும் சேர்ந்துகொள்ள, அழகுக்கு அழகு சேர்த்தது, 9 மாதம் பிள்ளை சுமந்திருக்க, கைகால்கள் நீர் கோர்த்து சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.. என்னதான் வலித்தாலும் இதையெல்லாம் ரசிக்க தானே செய்கிறது அந்த தாயுள்ளம்... அவளை அவன் கண்கள் வருடிவிட, அவளது கைகளை தன் கைகளில் ஏந்தி உள்ளங்கையில் இதழ் பதித்தான். இருவரும் காதலில் மூழ்கி நேரம் கழித்தனர். (சரி சரி வாங்க disturb பண்ண வேணாம் போகலாம்)

னு அந்த தாம்புலத்துல பழங்களை அடுக்கும்மா...”

“சரி அத்தை..”

“இந்த அஸ்வத் எங்க போனான் ஆளே கண்ணுல பட மாடிங்குறான்” என்று தன் பாட்டிற்கு புலம்பிய துளசிக்கு பாவம் விவரம் எதுவும் தெரியவில்லை. அஸ்வத்தின் பெயர் கேட்டதுமே கைகள் வேலை பார்த்தாலும் தன்னையும் மீறி கண்கள் அந்த அறையை சுற்றி வந்தது. ஆனால் அஸ்வத் தான் கண்ணில் பட்டதாக தெரியவில்லை. அவனுக்கு பிடிக்குமே என்று அவள் தேடி பிடித்து மாம்பழ நிறத்தில் பச்சை நிற ஜரிகை வைத்து புடவை அணிந்து வந்தாள். போகும் இடமெல்லாம் கண்கள் சுற்றிக்கொண்டு தான் இருந்தது.

அர்ஜுனோ வேலை எல்லாம் உறவினர்களே முடித்துவிட தூரத்தில் இருந்து மனைவியை ரசித்துக்கொண்டே இருந்தான்.

“அண்ணா போதும் கண்ணு வலிக்க போகுது கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க” என்று அர்ச்சனா கிண்டல் செய்ய சிறிது வழிந்தவாறே நின்றான் அர்ஜுன். அர்ஜுன், அஹல்யா,அர்ச்சனா, நவீன் அனைவரும் மகிழ்ச்சியோடு உரையாடிக்கொண்டு இருக்க, அனு மட்டும் அவர்களோடு இருந்தாள் ஒருவேளை கண்டுபிடித்து விடுவார்களோ என்று, வேலை செய்வது போல் அங்கும் இங்கும் சுத்திகொண்டு இருந்தாள். சிறிது நேரத்திலேயே தேஜு அவர்களின் கூட்டத்தில் சேர்ந்துகொள்ள, “என்ன தேஜு, உன்னோட தோழி விழுந்து விழுந்து வேலை செய்யுறாள்??? செய்ய சொன்னாலும் செய்ய மாட்டாள் இப்போ நிறுத்தவே மாட்டிங்குறாள்?” என்று அஹல்யா கேட்டாள்.

அனுவின் மனம் புரிந்துவிட, “எல்லாம் அவளோட அண்ணி உங்க மேல இருக்க பாசத்தாலதான்...” என்று ஏதோ பேசி சமாளித்தாள். சிறிது நேரம் பொருத்து பொருத்து பார்த்துவிட்டு அனுவின் அருகில் சென்றுவிட்டு, “இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை. அதான் வேலையே இல்லையே அப்பறம் என்ன வேலை செய்யுற மாதிரி சுத்தி சுத்தி வேடிக்கை பார்க்குற” என்று அவள் அஸ்வத்தை தேடுவதை மறைமுகமாக கூறினாள் தேஜு. ஒருவழியாக வெகுநேரம் தேடியும் கண்ணில் படாததால் அவர்கள் கூட்டத்தில் ஐக்கியம் ஆனாள்.

“ஹேமா நீங்க நலுங்கு வைங்க...”

“எல்லாரும் வைக்கட்டும் நான் அப்பறம் வைக்குறேன்” என்று அனைவரையும் வைக்க சொல்லி காத்திருந்தார்.

முன்னால் வித விதமாக தட்டில் சீர் வைத்து, அழகான சிவப்பு நிற பட்டணிந்து மஞ்சள் தேய்த்த முகத்தில், தாய்மை ஏந்தி பாரம் இல்லாத தலை அலங்காரமும் கொண்டு அஹல்யா இன்முகத்தோடு அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவராக வந்து நலுங்கு வைக்க, மகிழ்ச்சியில் முகம் மேலும் மின்னி அழகாக மிளிர்ந்தாள். கையில் உள்ள வளையல்கள் எல்லாம் இசையெழுப்பி தங்களது வாழ்த்தை பதிவு செய்துக்கொண்டிருந்தது. அஹல்யாவிற்கோ வண்ண வண்ணமாய் வளையல்களை பார்த்ததும் சிறுபிள்ளை போல் மனம் பறக்க, தன் சந்தோஷத்தை கண்கள் மூலம் தன் கணவனுக்கு தூது அனுப்பினாள். சுற்றி இருந்தோர் கண்கள் முழுவதும் அவள் மீதே இருக்க, ஹேமாவும், துளசியும் சுத்தி போட மனதில் குறித்துக்கொண்டனர். அர்ஜுன் மட்டும் வேஷ்டி கட்டி அப்பாவாக போகும் மிதப்பில் இருக்க, தோழர்கள் எல்லாம் கொஞ்சம் கம்மியான அலங்காரத்தில் வளைய வந்தனர்.

அனைவரும் வைத்த பின், “சரி எல்லாரும் வச்சாச்சி இல்லை... அப்பறம் நான் வைக்கலை, நீ வைக்கலைன்னு சொல்ல கூடாது” என்று தேஜு வடிவேலு தோரணையில் சொல்ல, “நான் வம்பு பண்ணுவேன்” என்று முன்னால் வந்தாள் அர்ச்சனா “அது என்ன நான் வைக்காமல் function முடிக்க பார்க்குறிங்க” என்று அவள் வந்து நலுங்கு வைக்கவும். பின்னால் இருந்து குரல் கேட்கவும் சரியாக இருந்தது “வைக்கட்டும் வைக்கட்டும் வச்சாளாவது நல்ல செய்தி வருதானு பார்க்கலாம்” என்று கூட்டத்தில் ஒருவர் கூற, அர்ச்சனாவின் முகம் கொஞ்சம் சோர்ந்து போனது. என்னதான் எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும் அனைவரும் இருக்கும் சபையில் இப்படி கேட்பார்கள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை தான். (இது என்னப்பா பழைய கதை மாதிரி இப்படி ஒரு டிபிகல் வசனத்தை போட்டிருக்கிங்கன்னு நீங்க அலுத்துக்குறது எனக்கு கேட்குது. என்னதான் சிலர் புரிஞ்சிக்கிட்டாலும் இப்படி ஒன்னு ரெண்டு பேரு இருந்தால் தானே நம்ம ஹீரோ என்ட்ரி குடுக்க முடியும்!!!!)

“நீங்க சொல்ல தான் அத்தை இத்தனை நாள் காத்திருந்தோம், சொல்லிட்டிங்கள்ள பொருத்து இருந்து பாருங்க நானே உங்களை போன் பண்ணி functionக்கு கூப்பிடுறேன், எத்தனை குழந்தை வேணும்னு மட்டும் சொல்லிடுங்க” என்று நவீன் அசால்டாக பதில் கூறவும் கூடி இருந்தோர் அனைவரும் சிரித்துவிட்டனர். அர்ச்சனாவிற்கு தான் வெட்கத்தை எப்படி மறைப்பது என்றே புரியாமல் போனது. சமாளித்து அர்ச்சனா அஹல்யாவிற்கு சந்தனம் வைக்க, பதிலுக்கு அவளது சிவந்த கன்னத்தில் சந்தனம் வைத்த அஹல்யா, “கேட்டீல சீக்கரம் ரெடி ஆகிக்கோ” என்று ரகசிய குரலில் கிண்டல் செய்தாள்.  இப்படி பேசி பேசி விழாவும் மகிழ்ச்சியாக முடிந்துவிட, வானர கூடத்தில் பாதி ஒன்று சேர்ந்தது(அர்ஜுன்,அஹல்யா,அர்ச்சனா, நவீன்)

“அர்ச்சு எங்க தேஜுவையும் அனுவையும் காணோம்.”

“உள்ளதான் இருந்தாங்க வந்திருவாங்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அஸ்வத் வந்து சேர்ந்தான்.

எப்போதும் போல் அதே மயக்கும் பொலிவோடுதான் வந்தான் இருப்பினும் அஹல்யா அவன் முகத்தில் இருக்கும் சிறு சோகத்தையும் கண்டறிபவள் ஆயிற்றே பார்த்ததும் அவன் சரியில்லை என்று கண்டுக்கொண்டாள்.

“எங்கடா போன? விழாவே முடிஞ்சிருச்சு”

“மதியம் சாப்பாட்டுக்கு ரெடி பண்ண வெளிய போயிருந்தேன் லேட் ஆகிருச்சு” என்று கேட்டதற்கு மட்டும் பதில் கூறிவிட்டு நிறுத்தினான்.

அவன் கூறும் பதிலை வைத்தே மற்றவரும் அவன் சரியில்லை என்று புரிந்து கொள்ள, “என்ன ஆச்சு அஸ்வத் ஏதாவது பிரச்சனையா” என்று கேட்கவும், “இல்லை” என்று கூறி சமாளித்துக்கொண்டிருந்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்க தேஜுவும் அனுவும் அவ்விடத்தை நோக்கி வந்தனர், அனுவிற்கு அஸ்வத்தை பார்த்ததும் நம்ப முடியாமல் கண்களை தேய்த்து தேய்த்து பார்த்துக்கொண்டாள், மனம் அவன் பார்வை தன் மீது படாதா என்று மௌனமாய் தவம் இருந்தது. கால்கள் முன்னே நடக்க கண்கள் அவனையே வருடியது, ஆனால் தூரத்தில் வரும்பொழுதே அனு வருவதை பார்த்துவிட்ட அஸ்வத் சற்றும் நிமிர்ந்து பார்க்கவில்லை. இருவரும் வந்துவிட, மற்றவர்கள் என்னதான் நடக்கிறது என்று பார்க்க அமைதியாக இருந்தனர்.

அனு என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது? பேசினால் எழுந்து சென்றுவிடுவானோ என்று நினைத்துக்கொண்டே நின்றாள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.