(Reading time: 39 - 78 minutes)

 

ரி சரி வழியாத காபி வாங்கிட்டு வர போயிருக்காள்” என்று ஒரு தகவல் கூறினாள். அதே நேரம் அவளும் வந்துவிட பல நாள் ஏக்கம் தீர்ந்தது அவனுக்கு ஆசை தீர பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் பார்த்த பொழுதே தேஜுவும் பார்த்தாலும் கண்ணில் கோவம் பொங்க வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் பொறுமையாய் இருந்தாள்.

அவர்கள் இருவரின் செயலையும் பார்த்துவிட்டு நல்ல வேலை எல்லா பெரியவங்களும் வெளிய போயாச்சு லதா ஆன்டி வரதுக்குள்ள ஏதாவது முடிவு பண்ண சொல்லணுமே என்று யோசித்து தேஜுவின் அருகில் சென்றாள்.

“கோவமா இருக்கன்னு நல்லாவே தெரியுது இப்படியே நேரத்தை கடத்த போறியா? அவனும் எதுவோ பேசணும்னு சொல்லுறான் போய் பேசிட்டு வாங்க” என்று கூற, மறுக்காமல் இருவரும் சென்றனர்.

“என்னது நம்ம சொன்னதும் உடனே கிளம்பிட்டாங்க இதுக்காகத்தான் காத்திருந்தாங்க போலவே” என்று யோசித்துக்கொண்டே அங்கே நடக்கும் அடுத்த நாடகத்தை பார்த்தாள். அனு அவ்வப்போது அஹல்யாவோடு பேசிக்கொண்டே அஸ்வத்தை பார்ப்பதும், அஸ்வத் அவள் பார்க்காத நேரமாய் பார்த்து அவளை பார்ப்பதும் என்று நேரம் கடந்தது... அதை கண்டவளுக்கு அய்யய்ய இதுங்க அவங்கள மாதிரி முன்னாடி வர மாட்டாங்க போலவே.. ஏதாவது பண்ணுமே... என்று யோசிக்க துவங்கினாள். யோசித்து கொண்டிருந்தவள் ஏதோ உறுத்த திரும்பி பார்த்தாள் அங்கு நவீன் அவளையே அளந்துக்கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்று “என்ன சார் எந்த இடத்தில் வந்து என்ன வேலை செய்யுரிங்க” என்று கிண்டலாக கூறவும்.

“என் பொண்டாட்டியை நான் எப்போ வேணும்னாலும் சைட் அடிப்பேன் உனக்கு என்னடி” என்று கூறிவிட்டு... “ஹ்ம்ம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த விரதம்னு தெரியலை நானும் எப்போதான் அப்பா ஆகுறது” என்று ஏக்கமாக அவளை பார்த்தான்.

அவனை விஷமமாக பார்த்துவிட்டு “அதெல்லாம் இன்னும் 2 மாதம் கழித்து தான்.”

அந்த செய்தியில் “அடடே என்ன ஒரு மனமாற்றம் மகாராணிக்கு, எப்படியோ??” என்று கேட்டவனை சிரித்துக்கொண்டே பார்த்துவிட்டு “அதான் லோன் முடிய போகுதில்லை, அதான் இந்த கருணை” என்று கண்ணடித்து கூறினாள்.      

(இவங்க கொஞ்சல்ஸ் இருக்கட்டும் நம்ம இப்போ தேஜு நிரு என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் வாங்க)

தேஜு...”

அவன் குரலை கேட்டு பலநாட்கள் ஆனாலும் இம்முறை அவன் பேசும் பொழுது கோவம் தான் வந்தது, பதில் கூறாமல் முறைத்தாள்...

“மன்னிச்சிரு தேஜு எனக்கு மன்னிப்பு கேட்க கூட அருகதை இல்லைன்னு நினைக்குறேன்...”

“என்ன நினைக்குற இல்லை தான் அப்பறம்?”

அவளின் வெடுக்கான பதிலில் சோர்ந்து போனவன், “தப்புதான் தேஜு அப்போ பிரச்சனையை சமாளிக்க என்கிட்ட தைரியம் இல்லை, ஆனால் இப்போ அப்படி கிடையாது தேஜு மாறிட்டேன்”

“உன்னை எப்படி நம்ப சொல்லுற, திரும்பி உன் மனசு மாறாதுன்னு எப்படி நம்புறது?”

அவனால் இப்பொது பதில் கூற முடியவில்லை. திக்கி திணறி பதில் சேகரித்தான். “என்னை எப்படி நிருபிக்குரதுன்னு தெரியலை தேஜு, இனிமே நான் மாற மாட்டேன் ஒருமுறை உன்னை பிரிஞ்சு அந்த வேதனை நினைச்சுக்கூட பார்க்க முடியலை திரும்பியும் உன்னை அப்படி கஷ்ட்டபடுத்த மாட்டேன்மா என்னை நம்பு...” அவன் மனதில் உள்ள ரணமெல்லாம் கண்களில் கண்ணீராக வெளிவர காத்திருந்தது. அவனை சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தவள் அவளுக்கும் வேதனை தாங்காமல் போக அவன் அருகில் சென்று “வெளிப்படையாகவே சொல்லுறேனே எனக்கு இன்னமுமே மனசு முழுதாய் சரியாகலை நிரு, சொல்லாம கொல்லாம விட்டு போயிட்டேல அதுக்கு என் மனசு ஆருர மாதிரி ஒரு தண்டனை நீ அனுபவிச்சால் தான் எனக்கு மனசு ஆறும்” என்றாள்.

“அதுக்கு????” என்று புரியாமல் விழித்தவனை உற்று பார்த்து “இன்னும் கொஞ்ச நாள் நம்ம பேசாமலே இருக்கலாம் எப்போ என் மனசு மாறுதோ அப்போ உனக்கு நானே கால் பண்ணுறேன்” என்று செல்ல எத்தனித்தாள். அவளை அவன் அழைப்பு தடுத்தது.

“தேஜு...”

“சொல்லு...”

“ஹ்ம்ம்... எனக்கு உன் வருத்தம் புரியுது ஆனால் நான் நினைச்சது தப்பா சரியானு இப்போ தெரிஞ்சிரும் இன்னைக்கே உன் அம்மா அப்பாகிட்ட பேச போறேன் நம்மளை பத்தி” என்று கூறியவனின் செய்தி அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது, “உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? அதெல்லாம் நேரம் வரும் பொழுது சொல்லலாம் சும்மா இரு” என்று கத்திவிட்டு சென்றுவிட்டாள். ஆனால் அவன் மனம் மாறவில்லை. அன்று மாலையே அவளது பெற்றோரை பார்க்க சென்றான்.

“ஹாய் அங்கிள்...”

“வா நிரு சொல்லவே இல்லை.. நீ வருவன்னு தேஜுகூட சொல்லவே இல்லை” என்று கூறினார்.

“இல்லை அங்கிள் அவளுக்கே தெரியாது, இவர்கள் பேசிக்கொண்டிருக்க லதா அவர்கள் அருந்த பழசாறு கொண்டுவர எழுந்தார்... உடனே... ஆன்டி ஒரு நிமிஷம் உங்க ரெண்டு பேரு கூடயும் முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவன் கூறவும் சிறிது சிந்தித்தவர் அவன் முகத்தை உற்று கவனித்தனர். நிருவின் முகத்திலேயே ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்துபோக “சொல்லுப்பா” என்றார்.

“இல்லை அங்கிள் தனியா பேசணும்” என்று கூறவும், தேஜுவை பார்த்த இருவரும் அவனை அழைத்துக்கொண்டு தோட்டப்பக்கம் சென்றார்.

தேஜுவின் மனம் தான் விட்டால் வெளியே வந்து குதித்துவிடும் போல துடித்தது. தோட்டத்தில் என்ன பேசினார்களோ தெரியவில்லை 30 நிமிட உரையாடல் முடிந்து வந்த இருவரின் முகமும் சரியில்லை. லதா தேஜுவை கோவத்துடன் பார்த்துவிட்டு மேலே தனதறைக்கு சென்றுவிட, ரவி என்ன இப்படி செய்துவிட்டாய் என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வழியே சென்றுவிட்டார். நிரஞ்ஜனின் முகமும் சரியாக இல்லை அவளிடம் வந்தவன் “அப்போவே சொன்னேனே தேஜு இதுதான் நடக்கும்னு” என்று சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். தேஜுவுக்கு தலையும் புரியவில்லை வாழும் புரியவில்லை அழுகைதான் அடக்கமுடியாமல் வந்தது. பேசாமல் இருந்தவரையும் இருந்த நம்பிக்கையும் இப்போது பெற்றோரின் பார்வையில் சுக்குநூறாய் உடைந்துபோக சோர்ந்து போய் அறைக்கு போய் அழுக துவங்கிவிட்டாள்.          

Go to Kadhal payanam # 18

Go to Kadhal payanam # 20

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.