(Reading time: 7 - 14 minutes)

 

"ஸாரிம்மா...நான் பொண்ணை விரும்புறேன். என்னால,அவளை நினைச்சிட்டு இவங்க கூட வாழ முடியாது!என்னை மன்னிச்சிடுங்க!"-என்று அவன் சென்றுவிட்டான்.

"எங்களை மன்னிச்சிடுங்க. நாங்க அவன் விருப்பத்தை கேட்காமல் முடிவு எடுத்துவிட்டோம்."

"பரவாயில்லைங்க... இப்போதாவது சொன்னீங்களே!"-என்று அவர்களுக்கு விடை அளித்தார் அருணாச்சலம்.

ஸ்ரேயா அங்கிருந்து அமைதியாக சென்றாள்.மது அவள் பின்னால் சென்றாள்.

"ஸ்ரேயா..."

"என் வேண்டுதல் வீண் போகலை மது!"

"ஆனா,எத்தனை நாள்  நீ இப்படியே இருக்க போற?"

"..........."

"உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?"

"என் வாழ்க்கையை எப்போவோ நான் இழந்துட்டேன்."

"இப்படியே இருந்தேன்னா, ஒரு நாள் உன் வாழ்க்கையை திரும்பி பார்த்தேன்னா,அதுல,தனிமை மட்டும் தான் இருக்கும்."

"நிச்சயமா இல்லை..என் கூட ரகுவோட வாழ்ந்த நினைவுகள் இருக்கும்.அது இருக்கிற வரைக்கும் நான் தனிமையை உணர மாட்டேன்."

"ஸ்ரேயா?"

"ப்ளீஸ் மது..."-மதுபாலா அமைதியானாள்.

இந்த காதலின் வரையரை தான் என்ன?புரியவில்லை...நிச்சயமாக தெரியவில்லை...அறியப்பட முடியவில்லை... மனதில் குடி கொண்டவன் மாண்டு விட்டான்.இருந்த போதிலும்,மனம் அவன் ஒருவனுக்காகவே துடிக்கின்றது... அவனுக்காகவே வாழ நினைக்கின்றது... அவனுக்காக எதையும் இழக்க துணிக்கின்றது. இப்படி சம்பந்தமே இல்லாத ஒருவனுக்காக அல்லது ஒருத்திக்காக தன்னையே சமர்ப்பணம் செய்வது தான் காதலா?

அல்லது...அவனோ?அவளோ?ஏற்க முடியாது என்றுரைத்த பின்னும், அவனுக்காக தன் வாழ்வை கரைப்பது தான் காதலா?

காதலின் வரையரை தான் என்ன???

"ம்மூ!"

"என்னங்க?"

"கொஞ்சம் இங்கே வா!"-மது,ஆதித்யாவின் அருகே வந்தாள்.

"இப்படி உட்காரு!"-அமர்ந்தாள்.

"இன்னும் 2 வாரத்துல காஷ்மீர் போறேன் அம்மூ!"-சற்று கலங்கி போனாள் மதுபாலா.

"................"

"ரகுவோட மரணத்துக்கு பழி வாங்குற நாள் நெருங்கிடுச்சி!"

"..............."

"போறதுக்குள்ள ஒரு விஷயம்!"

"என்னங்க?"

"நான்...நான்...   மஹாதேவன்கிட்ட கொஞ்சம் பேசணும்.வர சொல்றீயா?"-ஆச்சரியத்து போனாள் மதுபாலா.

"நிஜமாவாங்க?"

"நீ நினைக்கிற மாதிரி இல்லை...ஒரு முக்கியமான விஷயம் அதான்."

"கண்டிப்பா!இப்போவே வர சொல்றேன்."

"இல்லை...நாளைக்கே வர சொல்லு!"

"ஏன்?"

"இன்னிக்கு வேணாம்."-அவள்,சரி என தலையசைத்தாள்.

(சீன் ரொம்ப சீரியஸா போகுதுல!கொஞ்சம் ரொமன்ஸ் தரலாமா?)

"ம்...அப்பறம்?"

"அப்பறம்?"

"வேற என்ன?"

"ஒண்ணுமில்லையே!"

"ஒண்ணுமே இல்லையா?"

"ம்ஹீம்..இல்லையே!"

"சுத்தம்..சரி நீ கிளம்பு!"-அவள் குழம்பினாள்.

"சரி..."-ஆதித்யா,அவள் கையை பற்றி தன்னருகே இழுத்தான்.மது,நிலை தடுமாறி அவன் மீது சரிந்தாள்.

"என்னங்க பண்ணுறீங்க?"

"கிளம்புனா,கிளம்பிடுவியா?"

"அதுக்கு?"

"அதுக்கு....."-அவர்கள் இருவருக்குமிடையே இருந்த இடைவேளையை குறைத்தான் சரண்.

"என்னங்க...."

"இதோப் பாரு..என்ன நீ எப்போ பாரு,மரியாதை கொடுத்தே கூப்பிடுற?"

"............"

"நான் கேட்டேனா?மரியாதை தர சொல்லி?"

"இல்லை.."

"பின்ன?முதல்ல..எவ்வளவு அழகா ஆதி,சரண்னு கூப்பிட்ட?எனக்கு என் அம்மூ வேணும்."

"எது?"

"என் பழைய அம்மூ எனக்கு வேணும்."

"?????"

"என்ன முழிக்கிற?ஒரு முறை போடான்னு சொல்லு!"

"மாட்டேன்."

"சொல்லு."

"மாட்டேன்."

"போடி!பேசாதே!"

"ஆதி!"

"போ!"

"ப்ளீஸ்...ஆதி!"

"போ!இரு...நீ இப்போ ஆதின்னா கூப்பிட்ட??"

".........."-அவள்,தலை குனிந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.