(Reading time: 16 - 31 minutes)

 

துக்குள்ள நீங்க வந்து....கல்யாணத்துக்கு முன்னயே நாத்தனாருக்கு கெடுதல் செய்ய நினைக்கிறீங்கன்னு நினைச்சு........நீங்க எதையோ சொல்லிதான், அவ என்னை பார்த்து பயபடுறதா நம்பினேன்....பேசுனா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன்.... பயங்கரமா கோபம் வந்துச்சுது.... சாரி....வெரி சாரி......தென்...ரக்க்ஷத்தை லவ் பண்றவங்க....என் காதலையும் புரிஞ்சிப்பீங்கன்னுதான் உங்கட்ட பேச டிரை பண்ணினேன்....

நான் பேசுறதை நீங்க காது குடுத்து கேட்கனுமே அதுக்குதான் அந்த டிராமா....நாளைக்கு ஆமி அம்மாவை போய் பாருங்க உங்களுக்கே புரியும்....

மத்தபடி பெண்ணை அடிச்சு பொண்ணு கேட்கிற அளவுக்கெல்லாம் நான் கிடையாதுங்க.....”

“வாட்? அப்ப அடிச்சது...அந்த வழுக்....ப்யூன்...நீங்கதானா?” ஆச்சரியபட்டு போனாள் நிரல்யா.

“ம்,”

புன்னகை அவன் முகத்தில் இடம் பிடித்திருப்பதை அடையாளம் காட்டியது அவன் குரல்.

“அடையாளமே தெரியலை சார்....” என பாராட்டுதலாய் ஆரம்பித்தவளது குரலில் எச்சரிக்கை தொனி.

 “உங்கட்ட ரொம்பவும் கவனமா இருக்கனும் போல இருக்கே....ரக்க்ஷத் மாதிரி கெட் அப் போட்டீங்கன்னா?....”

“நம்ம அடையாளத்தை மாத்திக்க ஆயிரம் மேக்கப் இருக்குது நிரல்யா மேம்...ஆனா ஒரு குறிப்பிட்ட நபர் மாதிரி அப்படியே தெரிய எந்த டெக்னிக்கும் இன்னும் இல்ல... எதுக்கும் எல்லா விஷயத்தையும் ரக்க்ஷத்துட்ட எப்படியாவது சொல்லிடுங்க..... நீங்க பயம் இல்லாம இருக்கலாம்....அவன் பார்த்துபான்..... அப்புறம் இருக்குது அந்த கல்ப்ரிட் கழுத்த பிடிச்சு....”

சொல்லி கொண்டு வந்தவன் குரல் அந்த கல்ப்ரிட்டில் தடிக்க, மீண்டுமாய் சில்லிட்டது நிரல்யாவினுள்.

“இப்படி கோப பட்டு, கொலை பண்ணிட்டு, ஜெயிலுக்கு போறவங்களுக்கெல்லாம் பொண்ணு கொடுக்கிற ப்ளான் எங்க வீட்டில இல்ல.....” ஏறத்தாழ மிரட்டினாள் நிரல்யா.

“சாரி நிரல்யா சிஸ்....வெரி சாரி..., ஐ’ல் மேனேஜ் மை ஆங்கர்..” இப்பொழுது அவன் குரல் அவன் மேல் மரியாதை வரும் வண்ணம் திருந்தி இருந்தது.

“அவ அண்ணன்ட்ட  விஷயத்த சொல்ல ஆருவ ரெடி பண்றேன்...அதுக்கப்புறம்தான் உங்கள பத்தி நான் ரக்க்ஷத்ட்ட பேச முடியும்.....ஆருட்டயும் உங்கள பத்தி இப்ப சொல்ல முடியாத சூழல்.... எந்த ஆதாரமும் இல்லையே!” யோசனையாய் பேசினாள் அவள்.

பெரு மூச்சு விட்டான் அகன். “தேங்க்ஸ் சிஸ்டர்...ஆதாரமே இல்லாம என்ன இவ்வளவு தூரம் நம்புறதுக்கு.....”

“.......நான் இன்னும் முழுசா உங்களை நம்பலை ஜெஷுரன் சார்....”

“ம்.., தெரியும், ஃஸ்டில் கொஞ்சம் நம்புறீங்களே...... துவிய முதல்ல பிடிக்கிறேன்...ஆதாரம் தானா வந்துடும்....” முன்போல் குரல் கடுக்காமல் சமாளித்தான் அவன்.

“ஆரு ரக்க்ஷத்ட்ட விஷயத்த சொல்ல ஒத்துகிடுற வரை நீங்களும் சொல்லாதீங்க....ப்ளீஃஸ்” தன் வாய் வழியாய் விஷயம் ரக்க்ஷத்துக்கு செல்வதுதான் சரி என்று பட்டது நிரல்யாவின் மனதுக்கு.

“எப்படி சொல்ல முடியும்? விஷயம் எப்படி தெரியும்னு அவன் கேட்பானே!.... நம்ம பேசிகிட்டதை நான் அவன்ட்ட சொல்றதுக்கு முன்னாடி, நீங்க அவன்ட்ட சொன்னால் தான்.....உங்க ரெண்டு பேருக்கும் நல்லாருக்குமா....”

இந்த அவனது விளக்கத்தால், இவள் மனதில் அகன் பால் மரியாதை சற்று ஏறியது. மறு நொடியே ரக்க்ஷத்திடம் மாட்டிகொள்ளாமல் இருக்க இப்படி சதி செய்கிறானோ என்றும் தோன்றியது.

அவனிடம் பேசி முடித்துவிட்டு நிரல்யா நித்திரைக்குள் செல்லும் வரை, அறையின் சுவரின் நிறத்தில், அறைக்குள் மறைந்திருந்த  ஜாஷ் அனைத்தையும் மௌனமாக கேட்டிருந்தான்.

ரவு வெகு தாமதாமாக தூங்க சென்றதால், மறுநாள் வெகு தாமதமாகதான் எழுந்தாள் நிரல்யா.

முதல் காரியமாக ரக்க்ஷத்தைதான் தொடர்புகொண்டாள்.

 “அச்சு ஒருத்தங்கள பார்க்க சொன்னான்மா, ஊட்டி பக்கம் வந்திருக்கேன்டா,.... நீ  தூங்கிட்டு இருக்கன்னு உன் வீட்டில சொன்னாங்களா......,டிஃஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு வந்துட்டேன்....ஒரு 2 அவர்ஸ்ல ஆபீஸ் வந்துருவேன்டா...நீ வீட்ல இருந்து ரெஸ்ட் எடு...ஆபீஸிலும் கொஞ்சம் வேலை இருக்குது, முடிச்சுட்டு சீக்கிரமே வரபார்க்றேன்” என்றான். 

வேக வேகமாக கிளம்பி ஆமி அம்மையாரை பார்க்க சென்றாள் நிரல்யா.

அந்த பெரியவரின் அறை வாசலில் அவளை வரவேற்றது......அந்த ஒருவன்.....ஒல்லியாய்...மா நிறத்துக்கு சற்று மேலான நிறமாய்...வெல் க்ரூம்ட் எனும்படியாய் சிகையும், சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் ஷஅட்டும், கறுப்பு நிற பேண்ட்ஃஸும் அணிந்து....பார்த்த உடன் மரியாதை வரும் உடல் மொழியோடும், ரிம் லெஸ் மூக்கு கண்ணாடியோடும்,

எதோ ஒன்று....

புரிந்துவிட்டது.

“டெலிவரி முடிஞ்சு குழந்தை ஃஸ்கூலுக்கு போயாச்சோ?”

சிறு கோபமும், படு சிரிப்புமாக வந்தது நிரல்யாவின் கேள்வி.

“நீங்க சொல்ற அளவுக்கு நம்ம பாப்பாஃஸ் படு ஃஸ்பீட் இல்ல. இப்பதான் தவழ ட்ரை பண்றாங்க....”

அவன் முக பாவம் உண்மையில் அவனுக்கு குழந்தை இருப்பதை உறுதி செய்தது.

“குழந்தைங்க அம்மா நோ நோ அப்பா சுடிதார் போட்டுகிட்டு வீட்டில இருக்காங்களோ?, நீங்கதான் அம்மா ஆச்சே?”

“சாரி சிஸ்டர், ஏமாத்தனுங்கிற எண்ணம் கிடையாது...ஜெஷு என்...அவருக்காக தான்...வெரி சாரி.. பை தி  வே. ஐம் ஜேசன், நிஜத்தில் சைக்யாட்ரிஸ்ட்.” கை குலுக்கினான்.

“ஓ...பார்ட் டைமா டிராமா ஆர்டிஃஸ்ட், அதுவும் ப்ரெக்னென்ட் லேடி வேஷம்னா வெளுத்து வாங்குவீங்க போல...”

நடந்த நாடகத்தின் உள்நோக்கம் புரிந்தாலும், இன்னும் ஏமாற்ற பட்ட கோபம் கொஞ்சம் இருந்தது அவளுக்கு. நேற்று அது ஏழை ஊமை பெண் என இருந்த இரக்கமும் இப்பொழுது இல்லாமல் போயிருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல எண்ணமும் அவன் மேல் வருகிறது. காரணம் குழந்தைகளை பற்றி அவன் குறிப்பிட்ட விதம்.

“ஹே! என் ஃபர்ஸ்ட் டே பெர்ஃபார்மன்ஸ்க்கு இவ்வளவு பெரிய.... ஃபேனா?....ஐம் ஓவர் வெல்ம்ட்”

பேசிக்கோண்டே அந்த பெரியவரின் அறைக்குள் சென்றனர் இருவரும். உள் மனதில் ஏதோ ஒன்று உறுத்தியது நிரல்யாவிற்கு.

ஜேசனிடம் குழந்தைகளை பற்றி குசலம் விசாரித்தார் ஆமி. மழையாய் தன் மக்களை பற்றி பேசி தீர்த்தான் அத் தந்தை. பார்த்திருந்தவளுக்கு பரவசமாய் இருந்தது.

‘குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்’

சொல்லாய் மாறும் முன் மக்கள் செல்வம் பேசி பார்க்கும் பொருள் விளங்கா ஒலிக்குறிக்கும் இவ்வுண்மை பொருந்தும் போலும், என உணர வைத்தது அவன் பேச்சு.

ஜேசன் பால் ஏற்பட்டிருந்த சிறு நல்லெண்ணம் இப்பொழுது இன்னுமாய் வளர்ந்தது.

நல்ல அப்பாக்கள் எல்லாம் நல்லவர்களா? என்ற எண்ணமே அவளுக்கு தோன்றவில்லை. காரணம் அவள் அப்பாவை அவளுக்கு அதிகமாய் பிடிக்கும்.

பின் ஜேசன் விடை பெற அந்த அம்மையாரிடம் தான் கேட்க விரும்பியதை கேட்டாள்.

“”ஆரணியை பெண் தர மாட்டேன்னு மட்டும் சொல்லல, என் கூட உள்ள ரிலேஷன்ஷிப்பையே கட் பண்றதா ரக்க்ஷத் சொல்றான்,

 காரணம் அவன் ஃபியான்சிக்கு என் மேல இருக்கிற மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்,

அவங்கட்ட பேசவே வழியில்லனு ஜெஷு என் முன்னாடிதான் இந்த ஜேசன்ட்ட சொல்லிட்டு இருந்தார்,

ஜேசன் ஐடியாதான் அது. சைக்யாட்ரிஸ்ட்ல... எது மனச தொடும்னு அவனுக்கு தெரியும்தானே...விஷயம் வெளிய வரகூடாதுன்னு அவங்க ரெண்டுபேருமே அஅக்ட் பண்ணது ஜெஷு டெசிஷன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.