(Reading time: 16 - 31 minutes)

 

சாரி!.. எனக்கு இது தெரிஞ்சும் மௌனமா இருந்ததுக்கு காரணம், ஜஸ்ட் குட் வில்!

ஜெஷு ஒரு இன்ட்ராவர்ட்....பாசமோ ஆசையோ எதுவும் ரொம்ப ஆழமா இருக்கும்..ஆனா பேச்சுல அதை வெளி காட்ட தெரியாது.....அவர் நடந்துகிற விதத்தை பார்த்தாதான் அது புரியும்.

ஆரணி அளவுக்கு ரக்க்ஷத், அக்க்ஷத், அரண்யான்னு அத்தனை பேரும் அவருக்கு ரொம்ப முக்கியம்...அவங்க அவரோட ஃபமிலி....லாஸ் பண்ண அவரால முடியாது....”

ஜெஷுட்ட பேசியாச்சு போல.....அவரை மாதிரி ஒரு பாசமான, பொறுப்பான, ஒழுக்கமான பையன் கிடைக்கிறது ரொம்பகஷ்டம் மகளே!  எந்த இழப்பிலும் அவர் தடம் மாறி போனதில்ல...”

தொடர்ந்து அவர் பேசிய அனைத்தும் அகன் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுடன் முழுவதுமே ஒத்துபோனது.

துவியை பற்றி இயால்பாய் துருவினாள்.

“மத்தவங்க கேட்டா அவளை பத்தி நான் பேசவே மாட்டேன், ஆனால் ஜெஷு வாழ்க்கை பாதிக்கபடகூடாதுங்கிறதுக்காக மட்டும்தான் சொல்றேன்.

அவளால யாருக்கும் எந்த தொந்தரவும் வராது, நீங்க நினைக்கிற அளவுக்கு அவ மோசமும் கிடையாது.

அப்படி ஒரு தங்கை இருக்கிறதுக்காக ஜெஷுவுக்கு பொண்னு தரமாட்டேன்னு முடிவு செய்றது புத்திசாலித்தனம் கிடையாது மை சைல்ட்”

என முடித்துவிட்டார் ஆமி அம்மையார்.

துவி நிமித்தம்தான் ஜெஷுரனை ஒதுக்குவதாக அவர் புரிந்து கொண்டிருந்ததால் இப்படி சொல்லி முடிதுவிட்டார்.

ஆரணிக்கு நேர்ந்ததை சொல்லமுடியாது, அதனால் அதற்கு மேல் துருவவும் முடியாது.

ஆமி அம்மையாருக்கு துவியை பற்றி இன்னும் ஏதோ தெரிந்திருக்கிறது, ஜெஷுரனுக்கு தெரியாத விஷயமாகவும் அது இருக்கலாம், அதுவே அந்த துவியை கண்டுபிடிக்கும் வழியாகவும் இருக்கலாம் என தோன்றாமலில்லை.

விடை பெற்று தன்னவன் அலுவலகத்துக்கு விரைந்தாள். அவனை பார்க்க வேண்டும் என்ற உந்துதல்.

இத்தனை மணி நேர பிரிவிற்கே இது என்ன ? தினம் தினம் அவனோடு இருந்ததால் இச் சிறு பிரிவு பெரிதாய் தோன்றுகிறதோ? இல்லை உள்ளே குழம்பும் மனம் அவன்பால் அமைதி தேடி வழிந்தோடுகின்றதா? அல்லது  காதல் என்பதே போதிய காரணமா?

எதிர்பாராமல் எதிர்கொண்டால் என்ன செய்வான்? சிரிப்பானா? சீண்டுவானா? நல்லவேளை வந்தாயே என வரவேற்பானா? வராதே! என்ற வார்த்தையை மீறிவிட்டாய் என சாடுவானா? சிரித்து கொண்டாள். வந்து பார்க்கிறேன் உன் முக மாற்றத்தை.

அவள் சென்ற நேரம் அவன் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் அறைக்குள் நுழைந்தாள். அவனின்றி அதை பார்ப்பது இதுவே முதல் முறை. வெறுமையாய் தோன்றி வெறுப்பேற்றியது அது. தவித்த வாய்க்கு காலி குவளை கிடைத்தால் வரும் கடுப்பு.

“போடா...நீ..எங்க போய்ட்ட என்ன விட்டுட்டு?”

அவன் இருக்கையில் அவன் அமரும் விதத்தை மன கண்ணில் கண்டாள். மெல்ல சென்று அதே விதமாய் தான் அமர்ந்து பார்த்தாள். மேஜையில் இட புறம் நிச்சயதார்த்த புகைபடம். ஒரு புன்னகை அதற்கு பரிசு.

வலபுறம் அருகில் ஒன்றுமில்லை. லஅப்டாப் வைப்பான் நினைத்துகொண்டாள்.

குனிந்து மேஜையின் முதல் டிராயரை இழுத்தாள். அதற்குள்ளும் சிரித்தது அவள் முகம்.

“திருடா....” வாய்விட்டு வைதாள் தன்னவனை, அளவிட முடியா ஆனந்தம் அவள் வசம்.

ஏதோ தோன்ற திரும்பி பார்வை உயர்த்தி இடபுற சுவர் பார்த்தாள். பார்வை படும் இடத்தில் இவள் முகம். வலபுறம் அதே போன்று அடுத்த படம்.

முன்பு இந்த கோணத்தில் அவள் இதை உணர்ந்தது இல்லை.

“சார் திரும்பும் பக்கமெல்லாம் என்னதான் பார்க்றீங்களா...செல்ல புஜ்ஜுடா நீ” மூக்கை செல்லமாய் சுருக்கி மனதிற்குள் மானசீகமாய் தன்னவனை கொஞ்சினாள்.

அடுத்த டிராவை இழுத்தாள். சில ஃபைல்கள்.

“ஹப்பா! இப்பதான் புஜ்ஜு நீ ஆபீஸில் வேலையும் செய்றன்னு தெரியுது!”

ஃபைல்களில் ஒன்றை வெளியே எடுத்து மேஜை மீது விரித்தாள். அவன் பார்த்தால் எப்படி பார்ப்பான் என்ற கற்பனையின் படி அவன் உடல்மொழி பாவத்தோடு அதை திறந்தாள்.

கண்ணில் பட்ட விஷயம் கருத்தை கவர்ந்தது.

ஆமி டார்கஸ் பள்ளி பற்றிய கோப்பு அது.

‘துவி நீங்கள் நினைப்பது போல் கெட்டவளில்லை.......துவி ப்ராபர்ட்டிய வேகமா வித்துட்டா......’

ஆமி அம்மையாரின் கருத்தையும், அகனின் இந்த வார்த்தைகளையும் கோர்த்துப் பார்த்தால் ஒருவேளை துவி பணத்தை இந்த பள்ளிக்கும் செலவு செய்து இருப்பாளோ? என தோன்றுகிறதே!

அப்படி இருந்தால்.... பண பட்டுவாடா டீடெய்ல்ஸ் பார்த்தால், துவி இருக்கிற இடத்தை டிரேஃஸ் பண்ண முடியலாம்...

ஃபைலை பிரித்து தேடினாள். பெரிதாக பண உதவி செய்தவர்கள் யார் பெயரும் துவித்யாவாகவே இல்லை.

‘சும்மா கற்பனை பண்ணாத நிரு’ மனது சொன்னது.

“கொடுத்தாலும்  அவ பெயர்லேயா கொடுப்பா?’ அறிவுறுத்தியது அறிவு.

“துவி கானாமல் போன பீரியட் டொனேஷன் டீடெய்ல்ஸ் படித்து பார்த்தாள்.” பெரிய அளவில் பள்ளிக்கு பணம் எதுவுமே வந்திருக்கவில்லை அக்கால கட்டத்தில்.

‘பெரிய டிடக்டிவ் மாதிரி இதென்ன வேலை’ கிண்டல் செய்தது மனது.

பச், ஃபைலை தூக்கி அப்புறம் வைத்தாள்.

காத்திருக்க ஆரம்பித்தாள் கணவனாக போகிறவனுக்காக!

போர் அடித்தது.

டிராவை திறந்து அடுத்த ஃபைலை எடுத்தாள். ஆசிரமத்திலிருந்து தத்து கொடுக்கபட்ட குழந்தைகள் சம்பந்தபட்டது அது.

கான்ஃபிடன்ஷியல்.

 அறைக்குள் அவனை தவிர யாரும் வரமுடியாதகையால் இங்கு வைத்திருக்கிறான். மேலும் அலுவலகர்களுக்கு இது அவசியமற்றதும் கூட, தொட மாட்டார்கள்.

ஆர்வமின்றி, அவசியமின்றி, புரட்டினாள்.

பெரும்பாலும் பெண்குழந்தைகள்.

தத்து எடுக்கிற நல்லவங்களும் இருக்காங்க...

ஒரு நேரத்தில் இரண்டு குழந்தைகள் தத்து கொடுக்கபட்டிருந்தனர்.

இரண்டு பெண் குழந்தைகள். சூப்பர் ஃபாஸ்டர் பேரண்ட்ஸ்.

தத்து எடுத்தவர் பெயரை பார்த்தாள். பெயர் இல்லை. ஏன்? ஏதோ...

அடுத்த ஃபைல், இம்முறை பள்ளி தவிர மற்ற பண பரிவர்த்தனைகளை தேடினாள்.

பல குழந்தைகளின் பண தேவையை மாத்திரம், பலர் பொறுப்பேற்றிருந்த தகவல் அதிலிருந்தது.

அதில் இரு பெண் குழந்தைகளுக்கு ஏராளமான பணம்  டெபாசிட் செய்ய பட்டிருந்தது.

பண தேவையை பொறுப்பேற்றிருந்த யாவரும் அவ்வப்பொழுதுதான் பணம் அனுப்பி வருவதாக குறிப்புகள் கூற, இரு குழந்தைகளுக்கு மட்டும்....இது என்ன புது கதை.?

ஏதோ புரிந்தும் புரியாமலும் குழப்பியது.

மொபைலில் அகனை அழைத்தாள். “ஜேசன் சாரை பார்க்கனும்....இதுக்கு முன்ன அவங்க வீட்டுக்கு போயிருக்கீங்களா?”

“ஜேசனா?...போலாமே!..அவன் வீடு தெரியுமே!...”

வீட்டுக்கு வழி சொன்னான்.

“ஆனா இந்நேரம் அவன் ஹாஃஸ்பிட்டல்ல இருப்பானே....”

“பிரவாயில்ல....நாம குழந்தைங்களத்தான் முதல்ல பார்க்கனும்”

“குழந்தைங்களா?  ஏன்? பிளைங்களுக்கு எதுவும்?...” பேசி முடிக்கும் முன் இடையிட்டாள்

“அப்படி எதும் இல்ல சார்..., ஜஸ்ட் பார்க்கனும்....அவங்கள நீங்க பார்த்திருக்கீங்களா?”

“ம், க்யூட்டீஃஸ்”

“அவங்க பேர் என்ன?”

“லாலி, டாலி ன்னு கூப்பிடுவோம்... ரொம்ப குட்டிஃஸ் அது....இன்ஃபெக்ஷன் அவாய்ட் பண்ண..... வெளி ஆட்கள் ரொம்ப பார்க்க கூடாதுன்னு......நான் ஒரு டூ டைம்ஃஸ்தான் பார்த்....என்ன விஷயம் நிரல்யா?.

“அவங்க பெயர், துதித்யா, துவித்யாவோ இருக்குமோன்னு தோணுது.”

“உங்க ஃபமலி ஃபோட்டோ கொண்டு வாங்க வர்றப்ப.”

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.