(Reading time: 33 - 66 minutes)

13. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

க்க்ரீச்ச்ச்.....

இவர்களது கார் ப்ரேக் அமிழ்த்தபட்ட அதே நேரம்,

இடபுறம் வந்து சந்தித்த சாலையிலிருந்து அடுத்த கண்டெய்னர் லாரி தாறு மாறாக இவர்களை நோக்கி வருவது தெரிந்தது.

Kaniyatho kathal enbathu

ஜீசஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!!!!! அலறியது நிரல்யாதான். மரணம் கண் முன்.

ஷ்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்....

வந்த வேகத்திற்கு, ப்ரேக் அழுத்தபட்டதன் விளைவாகா சக்கரம், டயரை தரையில் கருக தேய்த்தபடி வழுக்கியது....ஸ்கிட்டிங்...

ஆனாலும் அட்வான்ஸ்ட் இஎஸ்பி பிரேக்கிங் ஸிஸ்டம்...காரை நேர்கோட்டிலிருந்து வழுவாமல் முன் நின்றிருந்த கண்டெய்னர் லாரியை நோக்கி மரண வேகத்தில் தள்ளியது.

அதே நேரம்...முன்பிருந்த கண்டெய்னர் லாரியின் பின் புறம் கதவு போல் திறந்து கீழ்நோக்கி இறங்கி, சரிவாக தரை தொட்டு லாரிக்கும் தரைக்கும் இடையில் ஒரு சறுக்கு பலகை போன்று நின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில், வந்த வேகத்தில் இவர்களது கார் அந்த சறுக்கு பலகை வழியாக ஏறி கண்டெய்னருக்குள் அடைக்கலபட்டது. அமிழ்த்த பட்டிருந்த பிரேக் காரணமாகவும், அந்த கன்டெய்னரின் இரு பக்கவாட்டு  சுவர்களிலிருந்து எதோ இரு y வடிவ தடி கம்பிகள் நீண்டு காரை அசையவிடாது பிடித்ததின் காரணமாகவும் இறுதியாக  இயக்கத்தை இழந்து அமைதிபட்டது இவர்களது வாகனம். அதே நேரம் இவர்கள் காரை உள்வாங்கிய அந்த லாரி முழு வேகத்தில் முன்னேற தொடங்கியது. அதன் பின்புற கதவும் அடைந்திருந்தது.

உப்...இவள் மூச்செடுத்து சூழலை உணரும் போது புரிந்துவிட்டது, இவர்கள் கடத்தபட்டிருக்கிறார்கள்.

கடவுளே மீண்டுமா......???

இவர்களை நோக்கி இடபுறமிருந்து வந்த அடுத்த கண்டெய்னர் லாரி, இவர்கள் காரை இடிக்கவில்லைதான். ஆனால் திடுமென சாலையில் நுழைந்து பிரேக் அடித்து குறுக்காக நின்றதில், இவர்கள் பின்னால் வந்த செக்யூரிடி வாகனத்தை அப்பளமாக்கியிருந்தது.

 நிரல் சீட் பெல்டை கழட்டு”  என்ற ரக்க்ஷத்தின் குரல்கேட்டுதான் நிகழ்காலத்துக்கு வந்தாள் நிரல்யா.

அவன் இதற்குள் சீட் பெல்டை கழற்றிவிட்டு சுற்றும் முற்றும் பார்வையால் ஒரு வலம் வந்துகொண்டிருந்தான்.

“ம்..., என் கூட உன் மொபைலை எடுத்துட்டு வெளியே வா....” என்றபடி அவன் தன் விரலை வைத்து இவர்களது காரின் முன் கண்ணாடியில் எதோ கோடு வரைந்தது போல் இருந்தது.

முன் கண்ணாடி முழுவதும் அறுபட்டு கையோடு வந்தது. அதை பின் இருக்கையில் வைத்தவன், முதலில் வெளியேறி பானட்டில் ஒதுங்கி நின்று இவளுக்கு கை நீட்டினான்.

அதிர்ந்து விழித்தபடி அவன் கைபற்றிய வெளியே வந்தாள் அவள்.

“கை...கைல என்ன?”

“இதுவா...இது ஒரு டைப் பிளேடு...எதையும் அறுக்கும்..” என்ற படி தன் கையை காட்ட, ஒரு அங்குல அளவில் கண்ணாடி சீப்பு போல இருந்தது அது.

பானட்டிற்கு வந்தவளை இடகையால் இடையோடு வளைத்தணைத்து தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு வலகையால் எதையோ பாண்ட்ஃஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்தான். மொபைல்?

 “ஏன் நான் உள்ளேயே இருந்திருப்பேனே.....?” இந்த கோலத்தில் நின்றுகொண்டுதான் மொபைலில் பேச வேண்டுமா என தோன்றியது அவளுக்கு.

 “திடீர்னு காரை உள்ள கொண்டு வந்த மாதிரியே, வெளியே இறக்கிட்டாங்கன்னா....நீ மட்டும் தனியா அவங்க கைல கிடச்சுடுவியே அதான்”

“…………”

அவன் பார்வை அவள் மேல் இல்லை.

வளும் தன் மொபைலை எடுத்து தன் தந்தைக்கு தொடர்பு கொள்ள முயன்றாள்...சிக்னல் இல்லை.

“ஜாமர் ஆக்டிவா இருக்குது...” இவள் முனங்க

அவனோ “அப்படி இருக்காதுனு நினைக்கேன்...அப்படின்னா...இந்த லாரியில இருக்கிறவங்க அடுத்த லாரிக்கு கூட  கம்யூனிகேட் பண்ண முடியாமே போயிருமே...நாம லிஃப்ட்ல இருக்கிறப்ப சிக்னல் ப்ராப்ளமாகும்ல...அது மாதிரிதான் இங்கயும்...ப்ராப்ளமாயிருக்கும்னு தோணுது..” என்றபடி

இவளை இட கையால் அணைத்தவாறே பக்கவாட்டு இரும்பு சுவரிலிருந்த சிறு நெளிவுகளில் கால் வைத்து ஏறி ரூஃபை அணுகினான். அதில் ஒரு வட்டமிட, பெரிய வட்ட இரும்பு தட்டு போல ரூஃபின் ஒரு பகுதி கையோடு வந்தது. உபயம் அந்த கண்ணாடி சீப்பு.

அந்த இரும்பு தட்டை வாயில் கவ்வியபடி, மீண்டும் இவளோடு இறங்கி, சத்தமிடாதவாறு கவனமாக அதை காருக்குள் வைத்தான்.

“என்னாச்சு?...” புரியாமல் கேட்டாள்.

இதற்கு இப்படி கஷ்டபட்டு  கீழிறங்க வெண்டுமா? மேலிருந்து அதை போட்டால் போதாதாமா? என்றது அவள் மனம்.

உள்ள எந்த கேமிராவும் இல்ல, அதனால அவங்களால இங்க நம்ம கண்காணிக்க முடியாது. பட் சத்தம் அலர்ட் செய்துறுமே!!

“டிரைவர் அலர்ட் ஆகுற மாதிரி எதையும் செய்திடாதே! உங்கப்பாட்ட பேசு...ஸேஃபா இருக்கேன்....எதுக்கும் பயபடாதீங்கன்னு சொல்லு..” என்றவன் தன் மொபைல் போன்ற மொபைலை (அது வித்யாசமாக இருந்ததே!!) குடைய ஆரம்பித்தான்.

இவள் மேலிருந்த அவன் பிடி தளரவே இல்லை.

வள் பேசி முடித்த போது அவன் தன் மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். கறுப்பு நிற திரையில் பல பச்சை நிழல்கள்.

“என்னாச்சு? மேல உள்ள ஹோல் வழியா மேல போயிடலாம்தானே...? “

வழி இருக்கும் போது இவன் இன்னும் ஏன் தாமதிக்கிறான் என்றது மனது.

“ஆப்பொனன்ட்ஸ் ஃஸ்ட்ரென்த் அண்ட் ஃஸ்ட்ரடஜி தெரியனுமே!!...” அவன் கவனம் அந்த திரையில் இன்னும்.

சாட்டிலை கேமிராவை காண்டாக்ட் செய்துட்டேன்....லாரில டிரைவர் கேபினுள் மட்டும்தான் ஆட்கள் இருப்பாங்க போல....பின்னால ஒரு கார் ஃபாலோ பண்ணுது...அவங்க காரா இருக்கும்....மத்தபடி லாரி மலை பாதையில மேல ஏறிக்கிட்டு இருக்குது.... காட்டு பகுதியில எங்கவச்சாவது வேற வெஹிக்கில்க்கு நம்மை மாத்த ப்ளான் இருக்கலாம்........இல்லனா  காட்டுகுள்ள கொண்டு போக நினைக்கலாம்........”

“வாட்??”

“ஏறத்தாழ அலறினாள் நிரல்யா....

“இது டெரரிஸ்ட் வேலை மாதிரி இல்ல....உங்கப்பா பார்டி இப்ப வர்ற எலெக்க்ஷன்ல ஆப்பொனட்ஃஸை வாஷ் அவுட் செய்து வின் பண்ணுவாங்கன்னு ப்ரி போல் ரிபோர்ட் வந்திருக்குதுதானே.....கான்டஸன்ட்ஸ் வித் ட்ரா பண்றதுக்கு இன்னைக்கு கடைசி நாள்...அது ரிலேட்டடா எதாவது இருக்கும்னு தோணுது...

உன்னை வச்சு உங்கப்பாவ இப்ப மிரட்டலாம்.....

எதிர் கட்சி ....அதவிட உங்கப்பா பார்டிலயே உங்கப்பாக்கு அடுத்து இருக்கவங்க....இப்படி யாரோட வேலையாவும் இருக்கலாம்....செய்றதை செய்துட்டு எதாவது டெரரிஃஸ்ட் அவுட் ஃபிட் மேல பழிய போட்டால் ஆச்சரிய படுறதுக்கில்ல....

இந்த வேலை செய்றவங்க ட்ரெய்ண்டு  டெரரிஃஸ்ட் பீபுள் மாதிரி பிகேவ் பண்ணல...” என்றவன் அவள் கண்களை பார்த்து

“பயபடாதே லயு” என்றான் கனிவாய்.

“நாம இப்ப கிளம்பிடுவோம்....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.